CA Result: யாரெல்லாம் ஆடிட்டர்? சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு; காண்பது எப்படி?
ICAI இறுதித் தேர்வு முடிவுகள் டிசம்பர் கடைசி வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக டிசம்பர் 26ஆம் தேதி மாலை தேர்வு முடிவுகள் வெளியாகலாம்.
ஆடிட்டர் பணிக்காக நடத்தப்படும் பட்டயக் கணக்காளர் பணிக்கான (சிஏ) இறுதித் தேர்வு முடிவுகளை ஐசிஏஐ வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் போதிய விவரங்களை உள்ளிட்டு, தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
இந்தியாவில் ஆடிட்டர் எனப்படும் பட்டய கணக்காளராக விரும்பும் மாணவர்கள், ஐசிஏஐ எனப்படும் பட்டய கணக்காளர்கள் நிறுவனம் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டியது கட்டாயம் ஆகும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மத்திய அரசு பட்டயக் கணக்காளருக்கான சான்றிதழை வழங்கும்.
3 கட்டத் தேர்வு
சிஏ தகுதித் தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. குறிப்பாக முதல்நிலைத் தேர்வு (Foundation Examination), இடைநிலைத் தேர்வு (Intermediate Examination), இறுதித் தேர்வு (Final Examination) என்ற வரிசையில் நடக்கும். அதேநேரத்தில் பட்டப் படிப்பை முடித்தவர்கள், முதல்நிலைத் தேர்வை எழுதத் தேவையில்லை. இடைநிலை மற்றும் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது.
முன்னதாக சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் நவம்பர் 3 முதல் 14ஆம் தேதி வரை நடந்து முடிந்தன. குரூப் 1 தேர்வுகள் நவம்பர் 3, 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற்று முடிந்தன. அதேபோல குரூப் 2 தேர்வுகள் நவம்பர் 9, 11 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெற்றன.
தேர்வு முடிவுகளை காண்பது எப்படி? (Steps to check the ICAI CA Final 2024 Result)
- தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான ஐசிஏஐ தளமான icai.org அல்லது caresults.icai.org அல்லது icai.nic.in என்ற இணைப்பில் ஏதேனும் ஒன்றை க்ளிக் செய்யவும்.
- முகப்புப் பக்கத்தில், ரிசல்ட் என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
- லாகின் செய்யத் தேவையான விவரங்களை உள்ளிடவும்.
- சப்மிட் செய்து, மதிப்பெண் அட்டையைப் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
ஐசிஏஐ அதிகாரி தீரஜ் கந்தேல்வால் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ’’ICAI இறுதித் தேர்வு முடிவுகள் டிசம்பர் கடைசி வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக டிசம்பர் 26ஆம் தேதி மாலை தேர்வு முடிவுகள் வெளியாகலாம்’’ என்று தெரிவித்து இருந்தார்.
தேர்வர்கள் icai.nic.in மற்றும் icaiexam.icai.org ஆகிய இணைய தளங்களை அவ்வப்போது கண்டு, தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.