மேலும் அறிய

JEE Main Practice Test: மாணவர்களே… அடுத்தடுத்து அசத்தும் கூகுள் ஜெமினி; இனி இலவச JEE Main மாதிரித்தேர்வுகள்; பெறுவது எப்படி?

JEE Main Practice Test Gemini: கல்விக்காக ஜெமினியைப் பயன்படுத்துவதில் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் இருப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் பள்ளி முடித்த மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி ஜேஇஇ மெயின் தேர்வுக்கு இலவச பயிற்சியை கூகுள் ஜெமினி நிறுவனம் வழங்க உள்ளது.

மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் நுழைவுத் தேர்வு ஜேஇஇ தேர்வு. இதற்குத் தயாராகும் இந்திய மாணவர்களுக்கு உதவும் வகையில், தனது செயற்கை நுண்ணறிவுத் தளமான ஜெமினி மூலம், மாணவர்கள் இனி இலவசமாக முழுமையான மாதிரித் தேர்வுகளை எழுதிப் பழகலாம்.

முந்தைய அறிவிப்பு


சமீபத்தில் வெளிநாட்டுக் கல்லூரிகளில் சேர்வதற்கான SAT மாதிரித் தேர்வுகளை கூகுள் அறிமுகப்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து, இந்தியா ஏஐ சம்மிட் 2026 நிகழ்ச்சியில், இந்திய மாணவர்களுக்காக Careers360 மற்றும் Physics Wallah ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த வசதியை வழங்குவதாக கூகுள் அறிவித்துள்ளது.

இது குறித்து கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தனது எக்ஸ் தளத்தில் கூறும்போது, "காலத்தை பின்னோக்கிக் கொண்டுசெல்ல முடிந்தால் நன்றாக இருக்கும். கடந்த வாரம் SAT மற்றும் இந்த வாரம் JEE மெயின் தேர்வுகள் ஜெமினியில் இலவசமாகக் கிடைப்பது உற்சாகம் அளிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

சிறப்பம்சங்கள் என்ன?

  • இந்தத் தேர்வுகள் உண்மையான JEE தேர்வு முறையை ஒத்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
  • மாணவர்கள் தேர்வு எழுதியவுடன் அவர்களுக்கான முடிவுகள் மற்றும் மதிப்பீடுகள் வழங்கப்படும்.
  • கேள்விகளை மட்டுமல்லாமல், கடினமான கேள்விகளுக்குப் படிப்படியான விளக்கங்களையும், தீர்வுகளையும் ஜெமினி வழங்கும்.
  • பல மொழிகளில் இந்த வசதி கிடைப்பதால் அனைத்து மாணவர்களையும் இது எளிதாகச் சென்றடையும்.

இந்தியா முதலிடம்

கல்விக்காக ஜெமினியைப் பயன்படுத்துவதில் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் இருப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது. இயற்பியல் மற்றும் அறிவியல் பாடங்களில் சந்தேகங்களைத் தீர்க்கவும், வினாடி வினாக்கள் உருவாக்கவும் இந்திய மாணவர்கள் அதிகளவில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்தியர்கள் லட்சக்கணக்கான கற்றல் குறிப்புகளை உருவாக்கியுள்ளனர்.

கூகுளின் இந்த புதிய முயற்சி, ஐஐடி கனவு காணும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு, குறிப்பாகப் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல முடியாதவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்கள், https://gemini.google.com/app?android-min-version=301356232&ios-min-version=322.0&is_sa=1&campaign_id=gemini_3_pro_boosting&utm_source=x&utm_medium=paid-social&utm_campaign=gemini_3_pro_boosting&pt=9008&mt=8&ct=gemini_3_pro_boosting என்ற இணைப்பை க்ளிக் செய்து, மாதிரித் தேர்வை எழுதலாம்.

 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
"மாணவர்களின் குரலைக் கேட்கும் ஒரே தலைவர் ராகுல் காந்தி மட்டுமே" - நிவேதித் ஆல்வா பெருமிதம்
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Embed widget