மேலும் அறிய

Group 4 Vacancies: தேர்வர்களை இன்பவெள்ளத்தில் ஆழ்த்தும் டிஎன்பிஎஸ்சி; குரூப் 4 பணியிடங்கள் மீண்டும் அதிகரிப்பு- எவ்வளவு தெரியுமா?

TNPSC Group 4 Vacancies: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று தேர்வர்களும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள் மீண்டும் 559 அதிகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 9491 ஆக உயர்ந்துள்ளது. இதமூலம் குரூப் 4 தேர்வர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று தேர்வர்களும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஜூன் மாதம் நடந்த தேர்வு

தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌, ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகள்‌-4 நேரடி நியமனத்திற்காக 30.04.2024 அன்று அறிவிக்கை வெளியிட்டது. இத்தெரிவிற்கான எழுத்துத்‌ தேர்வு 09.06.2024 முற்பகல்‌ நடைபெற்றது. இத்தேர்விற்கு 20,36,774 விண்ணப்பதாரர்கள்‌ தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்‌. தேர்வை சுமார் 17 லட்சம் பேர் எழுதினர்.

இத்தெரிவிற்கான தேர்வு முடிவுகளை தேர்வாணையம்‌ இன்று (28.10.2024) வெளியிட்டுள்ளது. தேர்வர்கள்‌ தங்களது தரவரிசை மற்றும்‌ மதிப்பெண்களை தேர்வாணையத்தின்‌ இணையதளங்களான www.tnpscresults.tn.gov.in மற்றும்‌ www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் பதிவெண்‌ மற்றும்‌ பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம்‌.

தரவரிசைப் பட்டியல் வெளியீடு

தேர்வாணையத்தின்‌ செயல்பாடுகளில்‌ வெளிப்படைத்‌ தன்மையினை உறுதிசெய்யும்‌ பொருட்டு தேர்வர்கள்‌ இத்தேர்வில்‌ பெற்ற மதிப்பெண்கள்‌, அவர்களின்‌ ஒட்டுமொத்த தரவரிசை, இனசுழற்சிக்கான தரவரிசை மற்றும்‌ சிறப்பு ஒதுக்கீட்டிற்கான தரவரிசை ஆகியன வெளியிடப்பட்டுள்ளன.

தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவரிசை, இணையவழி விண்ணப்பத்தில்‌ கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள்‌, உரிமைக் கோரல்கள்‌ மற்றும்‌ நியமன ஒதுக்கீட்டு விதிகளின்‌ அடிப்படையில்‌, தேர்வாணையத்தால்‌ நிர்ணயிக்கப்படும்‌ விகிதத்தில்‌, தேர்வர்கள்‌ சான்றிதழ்‌ சரிபார்க்கும்‌ நிலைக்கு தெரிவு செய்யப்படுவர்‌.

தேர்வு செய்யப்பட்டோருக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல்‌

சான்றிதழ்‌ சரிபார்ப்பிற்கு தெரிவு செய்யப்படுபவர்களின்‌ பட்டியல்‌ விரைவில்‌ தேர்வாணைய இணையதளத்தில்‌ வெளியிடப்படும்‌. அத்தகைய தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும்‌ மின்னஞ்சல்‌ வழியாக மட்டுமே விவரங்கள்‌ தெரிவிக்கப்படும்‌. அஞ்சல்‌ / கடிதம்‌ வழியாக தகவல்கள்‌ ஏதும்‌ அனுப்பப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

தேர்வு முடிந்து 92 வேலை நாட்களிலேயே தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது தேர்வர்களை இன்பக் கடலில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS in Assembly : ராகுல் பாணியில் EPS..புது ரூட்டில் அதிமுக! அதிர்ந்த சட்டப்பேரவை : TN Assemblyசு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Tvk vijay: விஜய்க்கு தலைவலியை தரும் புஸ்ஸி.ஆனந்த் ; விக்கிரவாண்டியில் மீண்டும் வெடித்த சர்ச்சை
Tvk vijay: விஜய்க்கு தலைவலியை தரும் புஸ்ஸி.ஆனந்த் ; விக்கிரவாண்டியில் மீண்டும் வெடித்த சர்ச்சை
24 மணி நேரமும் மதுபானக்கூடம் செயல்படுவதாக கூறி வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி கைது
24 மணி நேரமும் மதுபானக்கூடம் செயல்படுவதாக கூறி வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி கைது
Kapil dev net worth : 10 கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள்.. முதல் உலகக்கோப்பை வெற்றி  கேப்டனின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?
Kapil dev net worth : 10 கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள்.. முதல் உலகக்கோப்பை வெற்றி கேப்டனின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
Embed widget