மேலும் அறிய

GATE 2025: பொறியியல் கேட் தேர்வு எப்போது? தேதிகள் அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?

முதுகலை பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் கேட் தேர்வு பிப்ரவரி 1, 2, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.  

ஐஐடி ரூர்க்கி, 2025ஆம் ஆண்டுக்கான பொறியியல் கேட் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி முதுகலை பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் கேட் தேர்வு பிப்ரவரி 1, 2, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.  இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் படிக்க முடியும்.  

ஆண்டுதோறும் நடைபெறும் GATE தேர்வை, ஐஐடி கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது ஐஐஎஸ்சி எனப்படும் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனமோ நடத்தும் நிலையில், 2025ஆம் ஆண்டு தேர்வை ஐஐடி ரூர்க்கி நடத்த உள்ளது. கணினி மூலம் நடைபெற உள்ள 2025 கேட் தேர்வுக்கான மையங்கள் 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

கேட் தேர்வு; ஓர் அறிமுகம்!

மத்திய அரசுக் கல்வி நிறுவனங்கள் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான். உள்ளிட்ட பொறியியல் மேற்படிப்புகளில் மாணவர்களை அனுமதிக்க கேட் (Graduate Aptitude Test in Engineering) என்ற பெயரில் நுழைவுத் தேர்வை நடத்துகின்றன. 

அதேபோல பொறியியல், தொழில்நுட்பம் கட்டுமானம், அறிவியல் மற்றும் மானுடவியல் சார்ந்த முதுநிலை படிப்புகளுக்கும் முனைவர்கள் படிப்புகளில் சேருவதற்கும் கேட் தேர்வு மதிப்பெண்கள் பயன்படுத்தப்படுகின்றன. தனியார் கல்வி நிறுவனங்களும் கேட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.

வேலைவாய்ப்புக்கும் கேட் தேர்வு

அதேபோல பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும் (PSUs) கேட் தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு ஊழியர்களை வேலையில் சேர்க்கின்றன. 

தேர்வு முறை எப்படி?

3 மணி நேரத்துக்கு 30 தாள்களுக்குத் தேர்வு நடைபெறுகிறது. இதில் தேர்வர்கள் தங்களுக்கு ஏற்ற வகையில், தாள்களைத் தேர்வு செய்துகொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து 3 ஆண்டுகளுக்கு இந்த மதிப்பெண்கள் செல்லுபடி ஆகும்.

எனினும் இதற்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. 1 மதிப்பெண் எம்சிக்யூவின் தவறான விடைக்கு 1/3 மதிப்பெண்கள் கழித்துக் கொள்ளப்படும். 2 மதிப்பெண் எம்சிக்யூவின் தவறான விடைக்கு 2/3 மதிப்பெண்கள் கழித்துக் கொள்ளப்படும்.   

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

பொறியியல் 3ஆம் ஆண்டு அல்லது அதற்கடுத்த ஆண்டுகளில் படிக்கும் பொறியியல் மாணவர்கள், கேட் 2025ஆம் ஆண்டு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். எனினும் இன்னும் விண்ணப்பப் பதிவு தொடங்கவில்லை. 

கூடுதல் விவரங்களை https://gate2025.iitr.ac.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம்.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Kenishaa | ரேடியோ ரூம் TO GOA வீடு..பாடகியுடன் ஜெயம் ரவி.. கதறி அழும் ஆர்த்தி!Atishi Marlena | கெஜ்ரிவாலின் நம்பிக்கை!டெல்லியின் அடுத்த முதல்வர்..யார் அதிஷி?Cuddalore Mayor | Thirumavalavan meets MK Stalin | மிரட்டப்பட்டாரா திருமா? அந்தர் பல்டி பேச்சுகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
Mohan G :
"விஜய் சார் தப்பான வழியில போறாரு.. வருத்தமா இருக்கு.." : விஜய் பற்றி இயக்குநர் மோகன் ஜி
கேரளாவில் குரங்கம்மையா? மீண்டும் க்வாரண்டைனா? அச்சத்தில் பொதுமக்கள்
கேரளாவில் குரங்கம்மையா? மீண்டும் க்வாரண்டைனா? அச்சத்தில் பொதுமக்கள்
புதுச்சேரியில் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Manju Warrier : அழகால் மயக்கும் மஞ்சு வாரியர்...வேட்டையன் கதாபாத்திர அறிமுக வீடியோ
Manju Warrier : அழகால் மயக்கும் மஞ்சு வாரியர்...வேட்டையன் கதாபாத்திர அறிமுக வீடியோ
Embed widget