மேலும் அறிய

10th Special Class:10ம் வகுப்பில் தோல்வியா? மே 13 முதல் பயிற்சி வகுப்புகள்; வாராந்திர தேர்வுகள்- வெளியான அதிரடி அறிவிப்பு

10ஆம் வகுப்பில் தோல்வியடைந்தவர்களுக்கு மே 13 முதல் துணைத்தேர்வு நடைபெறும் நாள் வரை சிறப்பு பயிற்சி வகுப்புகள் மற்றும் வாராந்திர தேர்வுகள் நடைபெற உள்ளன.

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களுக்கு மே 13ஆம் தேதி முதல் ஜூலை 1 வரை சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். அத்தோடு வாராந்திரத் தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

’’ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி இயக்ககமும் இணைந்து, ‘தொடர்ந்து கற்போம்’ என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும்.  தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 13/5/2024 முதல் துணைத்தேர்வு நடைபெறும் நாள் வரை சிறப்பு பயிற்சி வகுப்புகள் மற்றும் வாராந்திர தேர்வுகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் பயின்ற பள்ளியிலேயே பயிற்சி

பாடவாரியான ஆசிரிய வல்லுநர்கள் குழு மூலம் தயாரித்த குறைந்தபட்ச கற்றல் கையேடு (MLM) மற்றும் வினாத்தாள் துணைத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. இச்சிறப்பு பயிற்சி மையம், மாணவர்கள் பயின்ற பள்ளியிலேயே நடைபெறும்.

இச்சிறப்பு பயிற்சி மைய வகுப்புகள் பாடம் சார்ந்த ஆசிரியர்களைக் கொண்டு, சுழற்சி முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கவும் மற்றும் சனிக்கிழமைகளில் வாராந்திரத் தேர்வு நடத்தவும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இச்சிறப்பு பயிற்சியில் பங்கு பெறும் மாணவர்களின் வருகைப் பதிவு மற்றும் வாராந்திர தேர்வு மதிப்பெண்கள், கல்வி தகவல் மேலாண்மையின் (EMIS) மூலம் கண்காணிக்கப்பட்டு தொடர்ந்து மாணவர்களை ஊக்குவித்து துணைத் தேர்வு எழுத அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.

உதவி எண் மூலம் வழிகாட்டல்

பள்ளிக் கல்வித்துறையின் உதவி எண் 14417 மூலமாக பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கி உரிய வழிகாட்டுதலுடன் தொடர்ந்து மாணவர்களை சிறப்புப் பயிற்சி மையத்தில் கல்வி கற்பதையும், துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க செய்து மற்றும் துணை தேர்வு எழுதும் வரை ஊக்குவிப்பதையும் உறுதி செய்யப்படும்’’.

இவ்வாறு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

MK Stalin Dmk : சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.! ஒரே வாரத்தில் தூக்கியடிக்கப்படும் திமுக நிர்வாகிகள்- ரெடியான லிஸ்ட்.?
சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.! ஒரே வாரத்தில் தூக்கியடிக்கப்படும் திமுக நிர்வாகிகள்- ரெடியான லிஸ்ட்.?
CM Vijay: விஜயை பாடாய்படுத்தும் ஃபேன் பாய்ஸ்..! கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிய CM.. ”ஹக் டூ செல்ஃபி”
விஜயை பாடாய்படுத்தும் ஃபேன் பாய்ஸ்..! கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிய CM.. ”ஹக் டூ செல்ஃபி”
Thai Maman Thanga Mothiram : குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
IND Vs ENG ODI: தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Dmk : சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.! ஒரே வாரத்தில் தூக்கியடிக்கப்படும் திமுக நிர்வாகிகள்- ரெடியான லிஸ்ட்.?
சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.! ஒரே வாரத்தில் தூக்கியடிக்கப்படும் திமுக நிர்வாகிகள்- ரெடியான லிஸ்ட்.?
CM Vijay: விஜயை பாடாய்படுத்தும் ஃபேன் பாய்ஸ்..! கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிய CM.. ”ஹக் டூ செல்ஃபி”
விஜயை பாடாய்படுத்தும் ஃபேன் பாய்ஸ்..! கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிய CM.. ”ஹக் டூ செல்ஃபி”
Thai Maman Thanga Mothiram : குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
IND Vs ENG ODI: தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
ARUN IPS: தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
Minister Ramesh warning : ரூ.100 கோடியில் சொத்து பதிவா.!! பொய் தகவலை பரப்பியவர்களை விட மாட்டேன்- சீறிய அமைச்சர் ரமேஷ்
ரூ.100 கோடியில் சொத்து பதிவா.!! பொய் தகவலை பரப்பியவர்களை விட மாட்டேன்- சீறிய அமைச்சர் ரமேஷ்
Embed widget