Engineering Classes : பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகள் எப்போது? அமைச்சர் பொன்முடி பேட்டி
பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகள் எப்போது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகள் எப்போது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் பொன்முடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
''பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் மாத இறுதியில் வகுப்புகள் தொடங்கும். பொறியியல் 3ஆம் கட்டக் கலந்தாய்வு அக்டோபர் 13ஆம் தேதி தொடங்கும். பொறியியல் 3ஆம் கட்டக் கலந்தாய்வு அக்டோபர் 13ஆம் தேதி தொடங்கும்.
12ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள், நடப்பு கல்வியாண்டிலேயே கல்லூரிகளில் சேரலாம். கல்லூரிகளில் மீதமுள்ள காலி இடங்களில், இவர்கள் சேர்ந்து படிக்கலாம். அதற்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. இதுகுறித்து விரைவில் சுற்றறிக்கை அனுப்பப்படும்.
மாநில கல்விக் கொள்கை குழுவின் அறிக்கையைத் தாக்கல் செய்ய ஓராண்டு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவு தாமதம் உள்ளிட்ட காரணங்களால் பொறியியல் கலந்தாய்வு மற்றும் வகுப்புகள் தொடங்கத் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஏற்கெனவே மத்திய அரசிடம் வலியுறுத்தி இருந்தோம்.
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. இரண்டாம் சுற்றில் கலந்துகொள்ள 31 ஆயிரத்து 94 மாணவர்கள் தகுதியுள்ளவர்களாக இருந்தனர். அதில் 23 ஆயிரத்து 458 மாணவர்கள் விருப்பப் பாடம் மற்றும் கல்லூரிகளைப் பதிவு செய்துள்ளனர். 14 ஆயிரத்து 153 பேர் கல்லூரிக்குச் சென்று சேர வேண்டிய மாணவர்கள் ஆவர்.
பொறியியல் சேவை மையங்களுக்குச் சென்று சேர வேண்டியவர்கள் 5 ஆயிரத்து 16 பேர். மேல்நோக்கிய நகர்வுக்காகக் காத்திருப்பவர்கள் 4 ஆயிரத்து 289 மாணவர்கள் ஆவர். 3-வது கட்டக் கலந்தாய்வு அக்டோபர் 13ஆம் தேதி தொடங்கும். பொறியியல் கலந்தாய்வு 4 கட்டங்களாக நடைபெறும்.
#Engineering #AnnaUniversity pic.twitter.com/svRDv43u38
— Ramani Prabha Devi (@ramaniprabadevi) September 30, 2022
பி.ஆர்க். தரவரிசைப் பட்டியல்
பி.ஆர்க். மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் அக்டோபர் 5ஆம் தேதி வெளியிடப்படும். 8ஆம் தேதி முதல் அவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். 4 கட்டக் கலந்தாய்வுகள் நிறைவு பெற்றதும் அக்டோபர் மாத இறுதியில், முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும்.''
இவ்வாறு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
மகளிருக்கான இலவச பேருந்துப் பயணத்தை 'ஓசி பஸ்' என்று கூறியது சர்ச்சையான நிலையில், இதுகுறித்து அமைச்சர் பொன்முடி இன்று விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, "அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம், விளையாட்டுத்தனமாக, சும்மா பேசியதைப் பெரிதுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். நான் எந்த தவறான எண்ணத்திலும் பேசவில்லை" என்றும் தெரிவித்தார்.