மேலும் அறிய

TN Govt Awards: கலாம் விருது; ரூ. 5 லட்சம், 8 கிராம் தங்கம் பரிசு- உயர் கல்வித்துறை அறிவிப்பு 

ரூ. 5 லட்சம், 8 கிராம் தங்கம் பரிசுடன் கூடிய டாக்டர்‌ ஏ.பி.ஜே. கலாம் விருதுக்கு, தகுதி வாய்ந்த நபர்கள் ஜூன் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. 

ரூ. 5 லட்சம், 8 கிராம் தங்கம் பரிசுடன் கூடிய டாக்டர்‌ ஏ.பி.ஜே. கலாம் விருதுக்கு, தகுதி வாய்ந்த நபர்கள் ஜூன் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. 

இதுகுறித்து அரசு முதன்மைச்‌ செயலாளர்‌ தா. கார்த்திகேயன்‌ வெளியிட்டுள்ள அறிவிப்பு:

’’டாக்டர்‌ ஏ.பி.ஜே. அப்துல்கலாம்‌ விருதானது  தமிழக முதலமைச்சர்‌ ஸ்டாலினால்‌ சுதந்திர தின விழாவின்‌போது விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல்‌ மற்றும்‌ மாணவர்கள்‌ நலன்‌ ஆகிய துறைகளில்‌ சிறந்து விளங்கும்‌ நபர்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டைச்‌ சார்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த விருது அளிக்கப்படும். ரூ.5 இலட்சத்துக்கான காசோலையும்‌, 8 கிராம்‌ தங்கத்தினாலான ஒரு பதக்கமும்‌ மற்றும்‌ பாராட்டு சான்றிதழும்‌ இந்த விருதில்‌ அடங்கும்‌.

இவ்விருதுக்கான விண்ணப்பம்‌, விரிவான தன்‌ விவரக்‌ குறிப்பு, உரிய விவரங்கள்‌ மற்றும்‌ அதற்குரிய ஆவணங்களுடன்‌ 30.06.2023-க்கு முன்பாக https://awards.tn.gov.in என்ற வலைதளத்தில்‌ விண்ணப்பிக்கலாம்‌.

இணையவழி வாயிலாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள்‌ மட்டுமே பரிசீலனைக்காக ஏற்றுக்‌ கொள்ளப்படும்‌. விருது பெற தகுதி உள்ளவர்‌, தமிழக அரசால்‌ நியமிக்கப்பட்ட தேர்வுக்‌ குழுவால்‌ தேர்வு செய்யப்படுவார்‌’’.

இவ்வாறு உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. 

கூடுதல் விவரங்களுக்கு: https://awards.tn.gov.in/notify_document_upload/17/11_2023_17_Notification.pdf

*

ரூ.5 லட்சம் மற்றும் 10 கிராம் தங்கப் பதக்கம் பெறும் வகையில், தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது மற்றும் சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர்‌ விருதுகள் தனித்தனியே அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்று காணலாம்.

கல்பனா சாவ்லா விருது

துணிவு மற்றும்‌ வீர சாகசச்‌ செயல்களுக்கான "கல்பனா சாவ்லா விருது" ஒவ்வொரு ஆண்டும்‌ தமிழக முதலமைச்சரால்‌, சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில்‌, ரூ.5 லட்சத்திற்கான வரைவு காசோலை, சான்றிதழ்‌ மற்றும்‌ பதக்கம்‌ அடங்கும்‌.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த, துணிச்சலான மற்றும்‌ வீர சாகசச்‌ செயல்‌ புரிந்த பெண்‌ விண்ணப்பதாரர்‌ மட்டுமே இந்த விருதினைப்‌ பெறத்‌ தகுதியுள்ளவர்‌.

கூடுதல் விவரங்களுக்கு: https://awards.tn.gov.in/notify_document_upload/28/2_2023_28_Notification.pdf

*

 சிறந்த சமூக சேவகர்‌ விருது

அதேபோல சுதந்திர தின விழாவின்‌போது பெண்களின்‌ முன்னேற்றத்துற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர்‌ (ம) தொண்டு நிறுவனத்துற்கான விருதுகள்‌ தமிழக முதலமைச்சரால்‌ ஒவ்வொரு ஆண்டும்‌ வழங்கப்பட்டு வருகிறது.

இதில் சிறந்த சமூக சேவகருக்கு 10 கிராம்‌ எடையுள்ள தங்கப் பதக்கம்‌ மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. சிறந்த நிறுவனத்துற்கு ரூ.50,000/- ரொக்கப்பரிசுடன்‌, 10 கிராம்‌ எடையுள்ள தங்கப் பதக்கம்‌ மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

இதனைத்‌ தொடர்ந்து 2023 ஆம்‌ ஆண்டு சுதந்திர தின விழாவின்போது பெண்களின்‌ முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர்‌ (ம) தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள்‌ வழங்கப்பட உள்ளன. 

விண்ணப்பிப்பது எப்படி?

தமிழக அரசின்‌ விருதுகள்‌ இணைய தளத்தில்‌ (https://awards.tn.gov.in) தமிழ் மற்றும்‌ ஆங்கிலத்தில் ‌10.06.2023 வரை தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு: https://awards.tn.gov.in/notify_document_upload/32/5_2023_32_Notification.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காண வேண்டியது அவசியம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone :  வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்
Fengal Cyclone : வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்
Schools Colleges Holiday: எங்கெல்லாம் மழை? - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை - மொத்த லிஸ்ட் இதோ!
Schools Colleges Holiday: எங்கெல்லாம் மழை? - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை - மொத்த லிஸ்ட் இதோ!
Rain News LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
Rain News LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
கூட்டு பாலியல் வன்கொடுமை! அந்தரங்க உறுப்பில் மிளகாய் தூள்! - வேதனையின் உச்சிக்கு சென்ற நர்ஸ்! உபியில் கொடூரம்! 
கூட்டு பாலியல் வன்கொடுமை! அந்தரங்க உறுப்பில் மிளகாய் தூள்! - வேதனையின் உச்சிக்கு சென்ற நர்ஸ்! உபியில் கொடூரம்! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone :  வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்
Fengal Cyclone : வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்
Schools Colleges Holiday: எங்கெல்லாம் மழை? - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை - மொத்த லிஸ்ட் இதோ!
Schools Colleges Holiday: எங்கெல்லாம் மழை? - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை - மொத்த லிஸ்ட் இதோ!
Rain News LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
Rain News LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
கூட்டு பாலியல் வன்கொடுமை! அந்தரங்க உறுப்பில் மிளகாய் தூள்! - வேதனையின் உச்சிக்கு சென்ற நர்ஸ்! உபியில் கொடூரம்! 
கூட்டு பாலியல் வன்கொடுமை! அந்தரங்க உறுப்பில் மிளகாய் தூள்! - வேதனையின் உச்சிக்கு சென்ற நர்ஸ்! உபியில் கொடூரம்! 
Rasipalan November 29: கன்னிக்கு கணவன் மனைவி பிரச்னை குறையும்; துலாமுக்கு சாதனை! உங்கள் ராசிபலன்?
Rasipalan November 29: கன்னிக்கு கணவன் மனைவி பிரச்னை குறையும்; துலாமுக்கு சாதனை! உங்கள் ராசிபலன்?
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்;  ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்; ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
Embed widget