மேலும் அறிய

CUET UG 2024: க்யூட் இளநிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பப் பதிவு; எப்படி விண்ணப்பிக்கலாம்?

CUET UG 2024 Registration:மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேர நடத்தப்படும் க்யூட் இளநிலைத் தேர்வுக்கு இன்று (பிப்.26) முதல் விண்ணப்பிக்கலாம்.

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேர நடத்தப்படும் க்யூட் இளநிலைத் தேர்வுக்கு இன்று (பிப்.26) முதல் விண்ணப்பிக்கலாம். எப்படி? காணலாம். 

மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் நடத்தப்படும் இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு (Common University Entrance Test - CUET) கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தனியார் பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்களும் க்யூட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. 2022- 23ஆம் கல்வி ஆண்டு முதல் இந்த தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில்  இந்தத் தேர்வு, ஆண்டுதோறும் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது. தேசியத் தேர்வுகள் முகமை இந்தத் தேர்வை நடத்துகிறது. 

இளநிலை படிப்புக்கான க்யூட் தேர்வு 2024ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு இன்று (பிப்.26) தொடங்க உள்ளது. இதேபோல் முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு 2023 ஆம் ஆண்டு ஜூன் 2 மற்றும் 3வது வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாடத் திட்டம் இதுதான்!

இந்த நிலையில், க்யூட் நுழைவுத் தேர்வுக்கான 12ஆம் வகுப்பு பாடத்திட்டம் குறித்து அறியலாம்.  பெரும்பாலும் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டம் அடிப்படையில் புத்தகத்தில் இருந்தே கேள்விகள் கேட்கப்படுகின்றன.  

மாணவர்களின் கல்வி அறிவு, விமர்சன சிந்தனை மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன் ஆகியவற்றைப் பரிசோதிக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்படும்.  

கேள்வித் தாள் எப்படி?

க்யூட் வினாத்தாள் 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவு மொழி தேர்வாகவும் இரண்டாவது பிரிவு பாடங்களுக்கான தேர்வாகவும் மூன்றாவது பிரிவு பொது திறனுக்கான தேர்வாகவும் இருக்கும்.

மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது கல்லூரியில் எந்தப் படிப்பை எடுக்க ஆர்வமாக இருக்கிறார்களோ, அந்த பாடங்களைத் தேர்வு செய்து எழுத வேண்டும். ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனி குறியீடு (code) கொடுக்கப்பட்டிருக்கும். அதை கவனமாகப் பார்த்து, எழுத வேண்டும்.

முதல் பிரிவில் மொழித் தேர்வு இரண்டாகப் பிடிக்கப்பட்டுள்ளது. முதலாவதில் நம் விருப்பத்துக்கு ஏற்ப மொழியைத் தேர்வு செய்துகொள்ளலாம். இரண்டாவது பிரிவில் துறை சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். விண்ணப்பப் பதிவில் உள்ள பாடத்தைப் பொறுத்து, கேள்விகள் அமைந்திருக்கும்.

மூன்றாவது பிரிவில் பொது அறிவுத் திறன் சார்ந்த கேள்விகள் அமைந்திருக்கும். குறிப்பாக பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள், எண்ணியல் திறன் மற்றும் பகுத்தறிவு சார்ந்த கேள்விகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வர்கள் https://cuet.nta.nic.in/about-department/introduction/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

அதில், CUET UG 2024 Registration  என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 

கூடுதல் தகவல்களுக்கு: https://cuet.nta.nic.in/

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

14,829 அரசுப் பள்ளிகளுக்கு மூடுவிழா ஆபத்து: மூடுவிழாவைத் தடுக்க உட்கட்டமைப்பை மேம்படுத்த அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!
14,829 அரசுப் பள்ளிகளுக்கு மூடுவிழா ஆபத்து: மூடுவிழாவைத் தடுக்க உட்கட்டமைப்பை மேம்படுத்த அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!
தமிழக மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை: விண்ணப்பிப்பது எப்படி?
தமிழக மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை: விண்ணப்பிப்பது எப்படி?
மாதந்தோறும் உதவித்தொகை; : தமிழ் வழியில் ஆன்லைன் அறிவியல் தேர்வு- விண்ணப்பிப்பது எப்படி?
மாதந்தோறும் உதவித்தொகை; : தமிழ் வழியில் ஆன்லைன் அறிவியல் தேர்வு- விண்ணப்பிப்பது எப்படி?
Job Fair ; இராமநாதபுரத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்: 100+ தனியார் நிறுவனங்களில் பணி!
Job Fair ; இராமநாதபுரத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்: 100+ தனியார் நிறுவனங்களில் பணி!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
VS Babu Health Report : 9வது நாளாக சிகிச்சையில் கொளத்தூர் எம்எல்ஏ V.S.பாபு.! இப்போ உடல் நிலை எப்படி இருக்கு- மருத்துவமனை அறிக்கை
9வது நாளாக சிகிச்சையில் கொளத்தூர் எம்எல்ஏ V.S.பாபு.! இப்போ உடல் நிலை எப்படி இருக்கு.? மருத்துவமனை அறிக்கை
Madurai kumbabishekam: 17 ஆண்டுகள்.. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு கோலாகலம், குவிந்த பக்தர்கள், முழு விவரம்
17 ஆண்டுகள்.. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு கோலாகலம், குவிந்த பக்தர்கள், முழு விவரம்
USA Russia: ரஷ்ய எண்ணெய் - இந்தியா மீது 100% வரி போட அமெரிக்கா ஒப்புதல் - எகிறப்போகும் பெட்ரோல் விலை?
ரஷ்ய எண்ணெய் - இந்தியா மீது 100% வரி போட அமெரிக்கா ஒப்புதல் - எகிறப்போகும் பெட்ரோல் விலை?
UDHAYANIDHI STALIN : ஜமீன்களில், பண்ணைகளிலும் அடைபட்டிருந்த அரசியலை பாமரர்களிடம் கொண்டு சேர்த்தது திமுக – உதயநிதி
ஜமீன்களில், பண்ணைகளிலும் அடைபட்டிருந்த அரசியலை பாமரர்களிடம் கொண்டு சேர்த்தது திமுக – உதயநிதி
Bar Council: வரலாற்றில் முதல்முறை..! அமைச்சர் தந்த ஆலோசனை - பார் கவுன்சில் நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு
வரலாற்றில் முதல்முறை..! அமைச்சர் தந்த ஆலோசனை - பார் கவுன்சில் நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு
Xi Jinping: திடீரென தாக்கிய பக்கவாதம்?.. பிரிக்ஸ் மாநாட்டில் மயங்கி விழுந்த ஷி ஜின்பிங்.. தீவிர சிகிச்சை!
Xi Jinping: திடீரென தாக்கிய பக்கவாதம்?.. பிரிக்ஸ் மாநாட்டில் மயங்கி விழுந்த ஷி ஜின்பிங்.. தீவிர சிகிச்சை!
TN Weather News: மதுரையிலும் இன்று கனமழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
மதுரையிலும் இன்று கனமழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Perumal Temple Tour : ரொம்ப கம்மி கட்டணத்தில் ஒரு நாள் பெருமாள் கோயில் சுற்றுலா.! எந்த எந்த கோயில்கள்.?- TTDC-யின் சூப்பர் அறிவிப்பு
ரொம்ப கம்மி கட்டணத்தில் ஒரு நாள் பெருமாள் கோயில் சுற்றுலா.! எந்த எந்த கோயில்கள்.?- TTDC-யின் சூப்பர் அறிவிப்பு
Embed widget