CUET PG 2023 Exam: மத்திய பல்கலை. முதுகலை படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு எப்போது..? அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு..!
CUET PG 2023 Exam: மத்திய பல்கலைக்கழகங்களுக்கான முதுகலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பல்கலைக்கழகங்களின் முதுகலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு அடுத்தாண்டு (2023) ஜூன் 1-ஆம் தேதி முதல் 10 தேதி வரை நடைபெறும் (National Testing Agency (NTA)) தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை மற்றும் முதுகலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு 2022-23-ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
பொது நுழைவுத் தேர்வு:
என்.சி.இ.ஆர்.டி. 12-ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் எனவும் ஜூன் முதல் அல்லது இரண்டு வாரத்தில் தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தேர்வை எழுதவோ, மாணவர் சேர்க்கைக்கோ 12-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாது. கணினி வழியில் 3 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. 66 பல்கைக்கழங்கள் இதில் பங்கேற்கின்றனர்.
Common University Entrance Test (CUET)-PG to be conducted from June 1 to 10, 2023: National Testing Agency
— Press Trust of India (@PTI_News) December 28, 2022
மூன்று பிரிவுகளாகக் கேள்விகள்
பொது நுழைவுத் தேர்வு கேள்விகள் மூன்று பிரிவுகளாகக் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவில் இரண்டு பகுதிகள் இருக்கும். முதல் பகுதி கட்டாய மொழித் தேர்வாக இருக்கும். தமிழ், இந்தி, மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, அசாமி, பெங்காலி, பஞ்சாபி, ஒடியா மற்றும் ஆங்கிலம் ஆகிய 13 மொழிகளில் ஏதேனும் ஒன்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். மொழி சார்ந்து வாசிப்புத் திறன், சொல்லகராதி சார்ந்த கேள்விகள், அருஞ்சொல், எதிர்ச்சொல்கள் உள்ளிட்டவை சோதிக்கப்படும்.
இரண்டாவது பகுதியில் கூடுதலாக விருப்ப மொழித் தேர்வையும் தேர்வர்கள் எழுதலாம். ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மனி, நேபாளி, பெர்ஷியன், இத்தாலியன், அரபி, சிந்தி, காஷ்மீரி, கொங்கணி, போடோ, டோக்ரி, மைதிலி, மணிப்புரி, சந்தலி, திபெத்தியன், ஜப்பான், ரஷ்யன், சீனம் ஆகிய 19 மொழிகளில் இந்தத் தேர்வை எழுதலாம்.
இரண்டாவது பிரிவில் தேர்வர்களின் துறை சார் அறிவு சோதிக்கப்படும். மொத்தமுள்ள 27 துறைகளில் இருந்து தேர்வர்கள் தங்களுக்குப் பிடித்தமான, தேவையான துறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதிகபட்சமாக ஒரு தேர்வர் 6 துறைகள் வரை தேர்வு செய்ய முடியும். பல்கலைக்கழகங்களும் துறைசார் தேர்வுகளை நடத்த முடிவு செய்யலாம்.
மூன்றாவது பிரிவில், பொதுவான கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள், மனத் திறன், கணக்குத் திறன், தர்க்க மற்றும் பகுத்தறியும் திறன் சார்ந்த கேள்விகள் இந்தப் பிரிவில் கேட்கப்படும்.
தேசிய தேர்வு முகமை வலைதள முகவரி : nta.ac.in
CUET வலைதளம்: cuet.samarth.ac.in