மேலும் அறிய

UGC NET 2025: யுஜிசி நெட் தேர்வு விண்ணப்பத்தில் இன்று முதல் திருத்தம்; கடைசி வாய்ப்பு- எப்படி?

UGC NET December 2025: யுஜிசி நெட் தேர்வு டிசம்பர் 31 முதல் ஜனவரி 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய தகுதித் தேர்வு (NET) 2025-க்கான விண்ணப்பத் திருத்தம் செய்ய இன்று முதல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தேர்வர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தில் ஏதேனும் பிழைகள் அல்லது திருத்தங்கள் இருந்தால் அவற்றைச் சரிசெய்து கொள்ளலாம்.

முன்னதாக விண்ணப்பப் பதிவு அக்டோபர் 7 முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்த நிலையில், விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய நவம்பர் 10ஆம் தேதி முதல் அதாவது இன்று முதல் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. தேர்வர்கள் நவம்பர் 12ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம்.

தேர்வு எப்போது?

யுஜிசி நெட் தேர்வு டிசம்பர் 31 முதல் ஜனவரி 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

திருத்தங்கள் செய்வது எப்படி?

விண்ணப்பதாரர்கள் தங்கள் UGC NET 2025 விண்ணப்பப் படிவத்தில் மாற்றங்களைச் செய்ய கீழ்க்கண்ட வழிகளைப் பின்பற்றலாம்:

  1. ugcnet.nta.ac.in ஐப் பார்வையிடவும்: முதலில், NTA UGC NET இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்.
  2. திருத்த சாளர இணைப்பு: முகப்புப் பக்கத்தில், "UGC NET Application Correction Window 2025" அல்லது அது போன்ற ஒரு இணைப்பைக் கண்டறிந்து அதைக் கிளிக் செய்யவும்.
  3. உள்நுழைவு: உங்களின் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
  4. விண்ணப்பப் படிவம்: உள்நுழைந்த பிறகு, உங்களின் நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவம் திரையில் தோன்றும்.
  5. திருத்தங்களைச் செய்யவும்: தேவையான மாற்றங்களை கவனமாகச் செய்யவும். பெயர், பிறந்த தேதி, வகைப் பிரிவு, கல்வி விவரங்கள் போன்ற முக்கிய தகவல்களை சரிபார்க்கவும்.
  6. சரிபார்ப்பு மற்றும் சமர்ப்பிப்பு: அனைத்து மாற்றங்களையும் செய்த பிறகு, படிவத்தை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து, எந்த பிழையும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும். அதன் பிறகு, திருத்தப்பட்ட படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.
  7. உறுதிப்படுத்தல் பக்கம்: சமர்ப்பித்த பிறகு, திருத்தப்பட்ட விண்ணப்பத்தின் உறுதிப்படுத்தல் பக்கத்தை பதிவிறக்கம் செய்து எதிர்கால குறிப்புக்காக அச்சிட்டு வைத்துக் கொள்ளவும்.

முக்கிய குறிப்புகள்:

  • சில புலங்களில் மட்டுமே திருத்தங்கள் செய்ய அனுமதிக்கப்படும். அனைத்து புலங்களையும் திருத்த முடியாது. குறிப்பாக, பிறந்த தேதி, பிரிவு, தந்தை பெயர், தாயின் பெயர் ஆகியவற்றில் மட்டுமே திருத்தம் செய்ய முடியும். அதேபோல பெயர், பாலினம், புகைப்படம், கையொப்பம், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, நிரந்தர முகவரி, தொடர்பு முகவரி மற்றும் தேர்வு நடைபெறும் நகரம் ஆகியவற்றில் திருத்தம் செய்ய முடியாது.
  • திருத்தங்களைச் செய்யும்போது கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
  • காலக்கெடு முடிந்த பிறகு எந்த திருத்தங்களும் செய்ய அனுமதிக்கப்படாது.

யுஜிசி நெட் தேர்வு என்பது இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (JRF) ஆகியவற்றுக்கான தகுதியைத் தீர்மானிக்கும் நுழைவுத் தேர்வாகும். எனவே, விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தில் பிழைகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வது மிக அவசியம்.

கூடுதல் தகவல்களுக்கு: https://ugcnet.nta.ac.in/

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
NEET கலந்தாய்வில் தவறாக தேர்வு செய்த பிரிவை மாற்ற மாணவருக்கு வாய்ப்பு - உயர்நீதிமன்றம் !
மிஸ் பண்ணிடாதீங்க! இலவச லேப்டாப், மிதிவண்டி மற்றும் ரூ.1000 உதவித்தொகையுடன் அரசு ITI சேர்க்கை நீட்டிப்பு!
இலவச லேப்டாப், மிதிவண்டி மற்றும் ரூ.1000 உதவித்தொகையுடன் அரசு ITI சேர்க்கை நீட்டிப்பு!
PG சீட் இன்னும் கிடைக்கலயா? கவலை வேண்டாம்! புதுச்சேரி PTU-வில் ஆகஸ்ட் 14-ல் நேரடிச் சேர்க்கை!
PG சீட் இன்னும் கிடைக்கலயா? கவலை வேண்டாம்! புதுச்சேரி PTU-வில் ஆகஸ்ட் 14-ல் நேரடிச் சேர்க்கை!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Embed widget