மேலும் அறிய

B.Ed Admission 2023: பி.எட். பட்டப் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?

2023- 24ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை ஆசிரியர் பயிற்சிப் படிப்பான பி.எட். முதலாமாண்டுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக்‌ கல்வி இயக்குநர்‌ அறிவித்துள்ளார்.

2023- 24ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை ஆசிரியர் பயிற்சிப் படிப்பான பி.எட். முதலாமாண்டுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக்‌ கல்வி இயக்குநர்‌ அறிவித்துள்ளார்.
 
தமிழகத்தில்‌ உள்ள அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ கல்வியியல்‌ கல்லூரிகளில்‌ உள்ள இளநிலை கல்வியியல்‌ பட்டப்படிப்பு (பி.எட்.) முதலாமாண்டு மாணாக்கர்‌ சேர்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில்‌ பதிவு செய்யலாம்‌.

விண்ணப்பம்‌ பதிவு செய்ய விண்ணப்பக்‌ கட்டணமாக ரூ.500/- செலுத்தப்பட வேண்டும்‌.
எஸ்சி/ எஸ்டி விண்ணப்பதாரர்கள்‌ விண்ணப்ப கட்டணம்‌ ரூ.250 மட்டும்‌ செலுத்தினால்‌ போதுமானது.

மாணாக்கர்கள்‌ விண்ணப்பிக்கும்‌ போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளை தெரிவு செய்தல்‌ வேண்டும்‌. இது தொடர்பான கூடுதல்‌ விவரங்கள்‌ மற்றும்‌ எந்தெந்த கல்லூரிகளில்‌, என்னென்ன பாடப்பிரிவுகள்‌, சேர்க்கை எண்ணிக்கை விவரங்கள்‌ www.tngasa.in என்ற இணையதள முகவரியில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக்‌ கட்டணம்‌ : விண்ணப்பக்‌ கட்டணத்தை விண்ணப்பதாரர்கள்‌ டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு/ இணைய பேங்கிங்/ யுபிஐ மூலம்‌ இணையதள வாயிலாக செலுத்தலாம்‌. இணையதள வாயிலாகக்‌ கட்டணம்‌ செலுத்த இயலாத மாணாக்கர்கள்‌ கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில்‌ “The Director, Directorate of Collegiate Education, Chennai — 15” என்ற பெயரில்‌ 01.09.2023 அன்று அல்லது அதற்குப்‌ பின்னர்‌ பெற்ற வங்கி வரைவோலை மூலமாகவும்‌ அல்லது நேரடியாகவும்‌ செலுத்தலாம்‌.

மாணவர்‌ சேர்க்கை வழிகாட்டி மற்றும்‌ கால அட்டவணையை மாணவர்கள்‌ மேற்குறித்த இணையதளம்‌ வாயிலாக அறிந்துகொள்ளலாம்‌.

இணையதள வாயிலாக விண்ணப்பம்‌ பதிவு செய்யத்‌ துவங்கும்‌ நாள்‌ -  01.09.2023
இணையதள வாயிலாக விண்ணப்பம்‌ பதிவு செய்ய இறுதி நாள்‌  - 11.09.2023

தொடர்பு எண்கள்‌ : 93634 62070, 93634 62007, 93634 62042, 93634 62024

கடந்த ஆண்டு விதிமுறைகள் என்ன?

உயர் கல்வித்துறை சார்பில் கல்லூரிக் கல்வி இயக்குநர் ஈஸ்வர மூர்த்தி கடந்த ஆண்டு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதன்படி, அனைத்து வகைக் கல்லூரிகளிலும் பி.எட். மாணவர் சேர்க்கையில் 69% இட ஒதுக்கீடு கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். இணையதளம் வாயிலாகவே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.

பி.எட். படிப்பில் சேர விரும்பும் 50 % மதிப்பெண்களை இளங்கலைப் படிப்புகளில் பெற்றிருக்க வேண்டும். எனினும் வகுப்பு வாரியாகத் தளர்வு அளிக்கப்படுகிறது. எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 40 சதவீதமும் எம்பிசி பிரிவினருக்கு 43 சதவீதமும் பிசி பிரிவினருக்கு 45% மதிப்பெண்களும் பெற்றிருந்தால் போதும். 

இளங்கலை அல்லது முதுகலைப் படிப்புகளுக்கு இணையான படிப்புகள் ( Equivalent Degree ) என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளை முடித்தவர்களும் தொடர்புடைய படிப்புகளில் பி.எட். சேரலாம்.

பொறியியல் படிப்புகளில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்பு, 12ஆம் வகுப்பு தரமாகவே கருதப்படும். 

10, 12ஆம் வகுப்புகளை முடிக்காமல், இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள், பிஎட் படிப்புக்கு தகுதி இல்லாதவர்கள். 

கூடுதல் விவரங்களுக்கு: www.tngasa.in

புதிதாக விண்ணப்பிக்க தேர்வர்கள், https://www.tngasa.in/user/register  என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
"ராகுல் காந்திக்கு வாக்களித்த அனைவரும் தீவிரவாதிகள்" மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!
Crime: பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Embed widget