மேலும் அறிய

அண்ணாமலை பல்கலை. அயல்பணி பேராசிரியர்களை அரசு கல்லூரி ஆசிரியர்களாக அறிவிக்க வேண்டும்: ராமதாஸ்

அண்ணாமலை பல்கலை. அயல்பணி பேராசிரியர்களை அரசுக் கல்லூரிகளின் ஆசிரியர்களாக அறிவிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை பல்கலை. அயல்பணி பேராசிரியர்களை அரசுக் கல்லூரிகளின் ஆசிரியர்களாக அறிவிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:  

’’அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி அயல்பணி முறையில் அரசு கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், அவர்களின் பணிக்கான எந்தவித ஏற்பளிப்பும் வழங்கப்படாமல் பணியாற்றி வருகின்றனர். துறைத்தலைவர், ஆராய்ச்சி வழிகாட்டி போன்ற உயர்பதவிகளுக்கு தகுதி இருந்தும், அவர்கள் தற்காலிக ஆசிரியர்களைப் போல நடத்தப்படுவது அநீதி.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செயல்பட்டு வரும் அண்ணாமலை பல்கலைக்கழகம் கடந்த 2012-ஆம் ஆண்டில் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியதைத் தொடர்ந்து, அப்பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்றுக்கொண்டது. அதைத் தொடர்ந்து தேவைக்கும் அதிகமாக இருப்பதாக கணக்கிடப்பட்டவர்களில் 369 பேராசிரியர்கள் முதல் கட்டமாக அயல்பணி முறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டனர். அதன்பிறகும் படிப்படியாக அனுப்பப்பட்டவர்களையும் சேர்த்து இது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் அரசு கல்லூரிகளில் அயல்பணியில் பணியாற்றுகின்றனர்.

எந்த நிர்வாகப் பொறுப்பும் இல்லை

அயல் பணியில் அனுப்பப்பட்ட பேராசிரியர்கள் அனைவரும் அடுத்த 3 ஆண்டுகளில் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் அழைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.  ஆனால், அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. 2016ஆம் ஆண்டில் அயல்பணி முறையில் அரசு கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்ட பேராசிரியர்கள், 7 ஆண்டுகளாக அயல்பணி முறையிலேயே தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அவர்களை பணியமர்த்தியது அண்ணாமலைப் பல்கலைக்கழகம் என்பதாலும், அவர்கள் அனைவரும் அயல்பணி முறையில் மட்டுமே பணி செய்து வருவதாலும் அவர்களுக்கு அரசு கல்லூரியில் எந்த நிர்வாகப் பொறுப்பும் வழங்கப்படுவதில்லை. அயல்பணி பேராசிரியர்கள் அதிக பணி அனுபவம் கொண்டவர்கள் என்றாலும் கூட, அவர்களை விட குறைவாக பணி அனுபவமும், வயதும்  கொண்ட அரசு கலை  கல்லூரிகளின் பேராசிரியர்கள் தலைமையின்கீழ் தான் செயல்பட வேண்டியுள்ளது.

அதுமட்டுமின்றி, அரசு கல்லூரிகளில் முனைவர் பட்ட மாணவர்களுக்கு ஆராய்ச்சி வழிகாட்டிகளாக  இருக்கவும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மதிப்புடனும், பொறுப்புடனும் பணியாற்றி வந்த பேராசிரியர்கள், இப்போது அரசுக் கல்லூரிகளில் எந்த பொறுப்புகளும் இல்லாமல், கிட்டத்தட்ட கவுரவ விரிவுரையாளர்கள் போன்று பணியாற்றி வருகின்றனர். அதற்குக் காரணம், அவர்களுக்கான பணியிடங்கள் எதுவும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஏற்படுத்தப்படாததுதான். இது மிகப்பெரிய சமூக அநீதியாகும்.

பேராசிரியர்கள் காரணமல்ல!

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடிக்கு அதன் பேராசிரியர்கள் எந்த வகையிலும்  காரணம் அல்ல. ஆனாலும், அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில், அரசின் ஆணையை மதித்து அவர்கள் அனைவரும் அரசு கல்லூரிகளில் பணிக்கு சேர்ந்தனர். அரசு அளித்த வாக்குறுதிப்படி 3 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களை மீண்டும் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கே  அழைத்துக் கொண்டிருக்க வேண்டும். அதற்கான வாய்ப்புகள் இல்லை என்றால், அண்ணாமலை  பல்கலைக்கழகச் சீரமைப்பு குறித்து இப்போதைய தமிழக அரசின் தலைமைச் செயலாளரும், அப்போதைய அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் சிறப்பு அதிகாரியுமான சிவதாஸ் மீனா அளித்த பரிந்துரைப்படி,அயல்பணி பேராசிரியர்களை அவர்கள் பணியாற்றும் அரசு கல்லூரிகளின் ஆசிரியர்களாகவே அறிவிக்க முடியும். அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கும், தமிழக அரசுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் இதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தால் அனைத்து சிக்கல்களும் தீரும்.

ஆனால், இதுகுறித்த கோரிக்கையை அயல்பணி பேராசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அதை ஏற்க தமிழக அரசு மறுக்கிறது. அயல்பணி பேராசிரியர்களை அரசு கல்லூரிகளின்  பேராசிரியர்களாக அறிவிப்பதால் அரசுக்கு எந்த வகையிலும் நிதிச்சுமை ஏற்படாது. அதே நேரத்தில் அயல்பணி பேராசிரியர்களின் உழைப்பை அரசு கல்லூரிகளால் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியும். பேராசிரியர்களும் கண்ணியத்துடன் பணி செய்ய முடியும். இதை உணர்ந்து அண்ணாமலை  பல்கலைக்கழக அயல்பணி பேராசிரியர்கள் அனைவரையும் அவர்கள் பணியாற்றும் அரசு கல்லூரிகளின் ஆசிரியர்களாக அறிவிப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’’.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

மதுரை இளைஞர்களே... TNPSC, SSC, RRB இலவச பயிற்சி; அரசுப் பணி கனவை நனவாக்குங்கள்!
மதுரை இளைஞர்களே... TNPSC, SSC, RRB இலவச பயிற்சி; அரசுப் பணி கனவை நனவாக்குங்கள்!
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
புதுச்சேரியில் மும்மொழிக் கொள்கை அமல்: CBSE அதிரடி வழிகாட்டுதல் - மாணவர்களுக்கு என்னென்ன சலுகைகள்? முழு விவரம்!
புதுச்சேரியில் மும்மொழிக் கொள்கை அமல்: CBSE அதிரடி வழிகாட்டுதல் - மாணவர்களுக்கு என்னென்ன சலுகைகள்? முழு விவரம்!
TNEA Counselling 2026 Date: ஜூலை 13 முதல் பொறியியல் கலந்தாய்வு- பொதுப்பிரிவுக்கு எப்போ? துணை கவுன்சிலிங்? முக்கிய தேதிகள்!
TNEA Counselling 2026 Date: ஜூலை 13 முதல் பொறியியல் கலந்தாய்வு- பொதுப்பிரிவுக்கு எப்போ? துணை கவுன்சிலிங்? முக்கிய தேதிகள்!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget