மேலும் அறிய

Anna University: அண்ணா பல்கலை. உறுப்புக் கல்லூரிகளின் பாடப்பிரிவுகளை மூடுவதா? ஒரே ஆணையில் பணிநீக்கமா? ராமதாஸ் கேள்வி

அண்ணா பல்கலை. உறுப்பு கல்லூரிகளின் பாடப்பிரிவுகளை மூடக் கூடாது என்றும் இடைக்கால ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வேண்டும் எனவும் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 

அண்ணா பல்கலை. உறுப்பு கல்லூரிகளின் பாடப்பிரிவுகளை மூடக் கூடாது என்றும் இடைக்கால ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வேண்டும் எனவும் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 

இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:  

''மாணவர் சேர்க்கை குறைந்ததைக் காரணம் காட்டி, 11 உறுப்புக் கல்லூரிகளில் கட்டிடவியல் (சிவில்), இயந்திரவியல் (மெக்கானிகல்) ஆகிய பொறியியல் பாடப்பிரிவுகளை மூட அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மாணவர்களின் கல்வியையும்,  ஆசிரியர்களின் வேலைவாய்ப்பையும் பாதிக்கும் அண்ணா பல்கலை.யின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் பொறியியல் கல்வியின் தேவையை கருத்தில் கொண்டு, அண்ணா பல்கலைக்கழகத்தின் வாயிலாக மாநிலம் முழுவதும் 14 உறுப்புக் கல்லூரிகள் பல்வேறு காலகட்டங்களில் தொடங்கப்பட்டன. அந்தக் கல்லூரிகளின் முதன்மையர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வேல்ராஜ், நேற்று காணொலி வழியாக கலந்தாய்வு நடத்தியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக 14 உறுப்புக் கல்லூரிகளில் மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் உள்ள உறுப்புக்கல்லூரிகள் தவிர மீதமுள்ள 11 உறுப்புக்கல்லூரிகளில் உள்ள கட்டியவியல் பாடப்பிரிவின் தமிழ் மற்றும் ஆங்கில வழிப் பிரிவுகளையும், இயந்திரவியல் பாடப்பிரிவின் தமிழ்வழிப் பிரிவையும் மூடுவதற்கும், இயந்திரவியல் ஆங்கில வழிப் பிரிவை ரோபோட்டிக்ஸ் பாடப்பிரிவுடன் இணைக்கவும் பல்கலை. நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

பணியிட மாற்றமும் நீக்கமும்

மூடப்படும் பாடப்பிரிவுகளில் பணியாற்றி வரும் நிலையான பேராசிரியர்கள் மட்டும் மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் உள்ள உறுப்புக்கல்லூரிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்படவுள்ளனர்.  11 கல்லூரிகளிலும் பணியாற்றும் இடைக்கால பேராசிரியர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்படுவர் என்றும், இதுகுறித்த செய்தி அவர்களுக்கு வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

கட்டிடவியல் மற்றும் இயந்திரவியல் பாடப்பிரிவுகள் மூடப்படுவதற்காக பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் கூறப்படும் காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. கட்டிடவியல் மற்றும் இயந்திரவியல் பாடப்பிரிவில்  மாணவர் சேர்க்கை மிகப்பெரிய அளவில் குறைந்து விட்டதாகவும், பல்கலைக்கழகத்தின் நிதிநிலைமை மோசமடைந்து இருப்பதால், இந்த பாடப்பிரிவுகளை தொடர்ந்து நடத்த முடியாது என்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. கல்வி சார்ந்த செயல்பாடுகளில் இப்படி முடிவெடுக்க முடியாது.

ஒரே ஆணையில் பணி நீக்குவதா?

உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களில் பெரும்பான்மையினர் இடைக்கால பணியாளர்கள்தான். அவர்களில் பலர் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். அவர்களை ஒரே ஆணையில் பணிநீக்குவது நியாயமற்றது. பத்தாண்டுகளுக்கும் கூடுதலாக உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றியவர்களால் இப்போது வேறு கல்லூரிகளுக்கு சென்று பணியில் சேர முடியாது. அதனால், அவர்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள். அவர்களின் குடும்பத்தினரும் கல்வியும், உணவும் கிடைக்காமல் வறுமையில் வாட நேரிடும். அவர்கள் மட்டுமின்றி, உறுப்புக் கல்லூரிகளில் சேர்ந்து மிகக்குறைந்த கட்டணத்தில் கட்டிடவியல் அல்லது இயந்திரவியல் படிக்கும் வாய்ப்பையும் அக்கல்லூரிகள் உள்ள பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் இழப்பர்.

இயந்திரவியல், கட்டிடவியல் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை குறைந்ததற்கு இடைக்கால ஆசிரியர்களும், மாணவர்களும் எந்த வகையிலும் காரணம் அல்ல. இந்தக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், அவற்றில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாததுதான் மாணவர் சேர்க்கை குறைந்ததற்கு காரணம். அண்ணா பல்கலைக்கழகத்தில் இதே பாடப்பிரிவுகளில் சேருவதற்கு கடும்போட்டி நிலவும் நிலையில், உறுப்புக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் முன்வராததற்கு காரணம் இரண்டுக்கும் இடையிலான கட்டமைப்பு வசதி வேறுபாடுகள்தான். உறுப்புக்கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகளை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இணையாக மேம்படுத்தும் சவாலைத் தான் பல்கலைக்கழக நிர்வாகம்   ஏற்றுக்கொண்டிருக்க வேண்டுமே தவிர, பாடப்பிரிவுகளை மூடும் கோழைத்தனமான முடிவை அல்ல.

தமிழ்வழிப் பிரிவை மூடுவதா?

தமிழுக்கு ஆற்றிய பணிகள் குறித்த விவாதம் எழும்போதெல்லாம், பத்தாண்டுகளுக்கு முன்பே தமிழ் வழியில் பொறியியல் படிப்பை அறிமுகப்படுத்தியதை தமிழ்நாடு அரசு பெருமையுடன் நினைவு கூறுகிறது. அதற்கு முற்றிலும் மாறாக, ஒரே நேரத்தில் 11 பாடப்பிரிவுகளின் தமிழ்வழிப் பிரிவை மூடுவது அரசுக்கும்,  அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கண்டிப்பாக பெருமை சேர்க்காது. எனவே, 11 உறுப்புக் கல்லூரிகளில்  கட்டிடவியல் மற்றும் இயந்திரவியல் பாடப்பிரிவுகளை மூடும் திட்டத்தைக் கைவிடும்படி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இடைக்கால பேராசிரியர்கள் அனைவருக்கும் பணி நிரந்தரம் வழங்கி, அவர்களை பாதுகாக்க வேண்டும்''.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

TET தேர்வு.. தவெக அரசின் இரட்டை வேடம்.. திமுக ஆட்சியின் நடவடிக்கைகளை பட்டியலிட்ட அன்பில் மகேஸ்!
TET தேர்வு.. தவெக அரசின் இரட்டை வேடம்.. திமுக ஆட்சியின் நடவடிக்கைகளை பட்டியலிட்ட அன்பில் மகேஸ்!
Free Coaching: தேர்வர்களே… TNPSC, SSC உள்ளிட்ட அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி- பங்கேற்பது எப்படி?
Free Coaching: தேர்வர்களே… TNPSC, SSC உள்ளிட்ட அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி- பங்கேற்பது எப்படி?
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ‘சென்டம்’ இலக்கு? விழுப்புரம் பள்ளிகளுக்கு ஆட்சியர் முக்கிய உத்தரவு!
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ‘சென்டம்’ இலக்கு? விழுப்புரம் பள்ளிகளுக்கு ஆட்சியர் முக்கிய உத்தரவு!
அது திமுக ஆட்சியில் நடந்தது...நீங்க என்ன செய்ய போறீங்க.? பகுதிநேர ஆசிரியர்கள் கேள்வி..?
அது திமுக ஆட்சியில் நடந்தது...நீங்க என்ன செய்ய போறீங்க.? பகுதிநேர ஆசிரியர்கள் கேள்வி..?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:கலக்கத்தில் காங்கிரஸ், ஷாக் கொடுத்த சர்வே..! பிரதமருக்கான லிஸ்டில் CM விஜய் மூன்றாவது இடம், அப்ப கூட்டணி?
கலக்கத்தில் காங்கிரஸ், ஷாக் கொடுத்த சர்வே..! பிரதமருக்கான லிஸ்டில் CM விஜய் மூன்றாவது இடம், அப்ப கூட்டணி?
Nepal Flood: பலி எண்ணிக்கை 392 ஆக அதிகரிப்பு - 288 இந்தியர்கள் உட்பட 1,468 பேர் எங்கே? நேபாளம் வெள்ள அவலம்
பலி எண்ணிக்கை 392 ஆக அதிகரிப்பு - 288 இந்தியர்கள் உட்பட 1,468 பேர் எங்கே? நேபாளம் வெள்ள அவலம்
Vanni Arasu: சாதிய அடக்குமுறை பற்றி பேசத் தொடங்கிய வன்னியரசு..! கும்பலாக கூச்சலிட்ட திமுக, அதிமுக எம்எல்ஏ-க்கள்! வீடியோவை பாருங்க
Vanni Arasu: சாதிய அடக்குமுறை பற்றி பேசத் தொடங்கிய வன்னியரசு..! கும்பலாக கூச்சலிட்ட திமுக, அதிமுக எம்எல்ஏ-க்கள்! வீடியோவை பாருங்க
China Warning to Nepal: இன்னும் முடியவில்லை.! 3 நாட்களில் நேபாளத்திற்கு பேரழிவு காத்திருக்கிறது.! பீதியை கிளப்பும் சீனா
இன்னும் முடியவில்லை.! 3 நாட்களில் நேபாளத்திற்கு பேரழிவு காத்திருக்கிறது.! பீதியை கிளப்பும் சீனா
"விடிவெள்ளி திட்டம் முதல் புதிய கான்கிரீட் வீடுகள் வரை.." சமூக நலத்துறையில் பொன்னான 20 அறிவிப்புகள் - என்னென்ன?
Russia Ukraine War: உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமா.? சிஐஏ தலைவரின் அவசர மாஸ்கோ பயணத்தால் பரபரப்பு
உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமா.? சிஐஏ தலைவரின் அவசர மாஸ்கோ பயணத்தால் பரபரப்பு
நேபாளத்தில் தமிழர்களின் நிலை என்ன? - : முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு.. டெல்லி செல்லும் 4 அமைச்சர்கள்
நேபாளத்தில் தமிழர்களின் நிலை என்ன? - முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு.. டெல்லி செல்லும் 4 அமைச்சர்கள்
iPhone 18 Pro Foldable Launch: ஐபோன் பிரியர்களே, சர்ப்ரைஸ் காத்திருக்கு.! செப்., 9 ஆப்பிளின் பிரமாண்ட விழா; 18 ப்ரோ Foldable அறிமுகம்.?
ஐபோன் பிரியர்களே, சர்ப்ரைஸ் காத்திருக்கு.! செப்., 9 ஆப்பிளின் பிரமாண்ட விழா; 18 ப்ரோ Foldable அறிமுகம்.?
Embed widget