நாகையில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வந்த மாணவிகளுக்கு ஆரத்தி
பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு தீப ஆரத்தி காட்டப்பட்டு கொண்டு வழிபட்ட மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறுவதோடு கூடுதல் மதிப்பெண்கள் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்தனர்.
நாகை மாவட்டத்தில் 70 அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 34 மையங்களில் 8208 பேர் தேர்வு எழுதினர். தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடுவோரை கண்காணிக்க பறக்கும்படை அமைக்கப்பட்டது.
12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பொதுத்தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 3, ம் தேதி வரை நடைபெறுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 70 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 8208 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 3891 மாணவர், 4317 மாணவிகளும் 34 தேர்வு மையங்களில் இன்று 12 ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர். நாகப்பட்டினத்தில் உள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் நடைபெறும் தேர்வினை நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் காலை பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய மாவட்ட ஆட்சியர், மாணவ,மாணவிகள் எந்தவித குழப்பமும் இன்றி தேர்வு எழுதுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளதாகவும்,மேலும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்கும் விதமாக அனைத்து மையங்களுக்கும் சென்று சோதனை மற்றும் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 81 தேர்வு எழுதுகின்றனர் அவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.
முன்னதாக, பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு தீப ஆரத்தி காட்டப்பட்டு கொண்டு வழிபட்ட மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறுவதோடு கூடுதல் மதிப்பெண்கள் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்து கொண்டு சக நண்பர்களும் திருநீறு இட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..