மேலும் அறிய

திருச்சி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுதேர்வை 1,079 பேர் தேர்வு எழுதவில்லை

திருச்சி மாவட்டத்தில் 33,610 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர்.

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கி கடந்த 3-ந் தேதியும், பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கி நேற்று முன்தினமும் நிறைவடைந்தன. இந்தநிலையில் நேற்று காலை எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை எழுத 34,689 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் மாணவர்கள் 17,581 பேர், மாணவிகள் 17,108 பேர் அடங்குவர். இவர்களுக்காக 173 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் தனித்தேர்வர்களுக்கான 6 மையங்களும் அடங்கும். இந்தநிலையில் நேற்று நடந்த மொழிப்பாட தேர்வை மாணவர்கள் 16,647 பேர், மாணவிகள் 16,963 பேர் என்று மொத்தம் 33,610 பேர் எழுதினர். திருச்சி மத்திய சிறையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 40 கைதிகள் எழுதினர். காலை 10 மணி முதல் பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெற்றது. இதில் 10 மணி முதல் 10.10 மணி வரை வினாத்தாளை படிப்பதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டது. 10.10 மணி முதல் 10.15 மணி வரை விவரங்களை சரி செய்ய நேரம் ஒதுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 3 மணி நேரம் தேர்வு நடந்து முடிந்தது. 

திருச்சி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுதேர்வை 1,079 பேர் தேர்வு எழுதவில்லை

மேலும் நேற்று  நடந்த மொழிப்பாடத்துக்கான தேர்வை மாணவர்கள் 934 பேர், மாணவிகள் 145 பேர் என்று மொத்தம் 1,079 பேர் எழுத வரவில்லை. காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்க பறக்கும் படையினர் அவ்வப்போது சோதனை மேற்கொண்டனர். இந்த தேர்வை கண்காணிக்க 350 நிலையான மற்றும் பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் 20 பேருக்கு ஒரு தேர்வுக்கூட கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டிருந்தனர். 9 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வினாத்தாள் கட்டு காப்பகத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உப்பிலியபுரத்தை அடுத்த பச்சமலை டாப்செங்காட்டுப்பட்டியில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை முன்னிட்டு காலை 8 மணிக்கே வந்திருந்த மலைவாழ் மாணவர்கள், பள்ளி வளாகத்தில் அமர்ந்து, பாடங்களை படித்தனர். நேற்று நடந்த மொழிப்பாட தேர்வை 27 மாணவர்களும், 23 மாணவிகளும் எழுதினர்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

School Student: 6 முதல் 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
School Student: 6 முதல் 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு
CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget