திருப்பத்தூர்: திருவிழாவில் சண்டை.! அரசு மருத்துவமனையில் இளைஞர் ஓடஓட வெட்டிக்கொலை!
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கொலைகள் நடந்து வருவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் கொலை செய்வதும், கொலை செய்யப்படுவதும் அதிகரிப்பது அச்சத்தை ஏற்படுகிறது.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்டார். மருத்துவமனை வளாகத்தில் முகிலன் என்ற 22 வயது இளைஞர் மர்ம நபர்களால் ஓடஓடவிரட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். திருவிழாவில் ஏற்பட்ட இருதரப்பு மோதலால் இந்த கொடூர கொலை நடந்தேறியதாக கூறப்படுகிறது. இந்தக் கொலையால் அந்தப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளார். கொலை தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்றொரு சம்பவமாக சென்னையில் இரட்டை கொலை நடந்துள்ளது. இதுதொடர்பாக ஒருவர் சரணடைந்துள்ளார். திருவான்மியூர் பகுதியில் மதுபோதையில் நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் 2 பேர் குத்திக்கொல்லப்பட்டனர். நண்பர்கள் சதீஷ்குமார், அருண் ஆகியோரை போதையில் குத்திக்கொலை செய்த தினேஷ் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார்.
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கொலைகள் நடந்து வருவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் கொலை செய்வதும், கொலை செய்யப்படுவதும் அதிகரிப்பது அச்சத்தை ஏற்படுகிறது. மது மற்றும் போதை பழக்கத்தினால் இதுபோன்ற செயலில் பயமில்லாமல் ஈடுபடுகின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சரியாக இல்லை எதிர்க்கட்சிகள் தரப்பினர் தொடர்ந்து குற்றம்சுமத்தி வருகின்றனர். அவர்கள் கூறுவது போல், நடந்துவரும் சம்பவங்கள் அதனை உண்மையாக்குகின்றன. முதலமைச்சரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கு காவல்துறை சட்டம் - ஒழுங்கு பிரச்னை தொடர்பான தீவிர கவனம் செலுத்தி பொதுமக்கள் அச்சமின்றி நடமாட வேண்டும் என்று பலரின் கோரிக்கையாக இருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்