மேலும் அறிய

Madurai: கல்லூரி விடுதியில் புகுந்து மாணவிகளுக்கு தொல்லை; மதுரையில் இளைஞர் கைது!

அரசியல் அழுத்தமும் இன்றி முறையான விசாரணையை வெளிப்படையாக நடத்த வேண்டும் என மாணவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

மதுரையில் யாதவா மகளிர் கல்லூரி விடுதியில் புகுத்து மாணவிகளுக்கு தொல்லை ஏற்படுத்திய புகாரில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மகளிர் விடுதிக்குள் இளைஞர் புகுந்த விவகாரத்தில் விசாரணையை வெளிப்படையாக நடத்த மாணவிகள் சமூகவலைதளங்கள் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவிகளுக்கு பல்வேறு தொல்லை

மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் யாதவா மகளிர் கல்லூரியில் மதுரை மட்டுமின்றி ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு கல்லூரியில் கல்லூரி மாணவிகள் தங்குவதற்கான விடுதி செயல்பட்டுவருகிறது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக மாணவிகள் விடுதிக்கு பெண்கள் அணியும் ஆடையை அணிந்தபடி மர்ம நபர்கள் சிலர் நடமாடுவதாகவும், அவர்கள் தனியாக இருக்கும் மாணவிகளுக்கு பல்வேறு தொல்லை தருவதாகவும் மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். 

மதுரை தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Rajinikanth: கருங்கல்லில் நடிகர் ரஜினிக்கு சிலை.. இப்படியும் ஒரு ரசிகரா.. பொதுமக்கள் வியப்பு..!

Madurai: கல்லூரி விடுதியில் புகுந்து மாணவிகளுக்கு தொல்லை; மதுரையில் இளைஞர் கைது!

புறக்கணிப்பு போராட்டம்

ஆனாலும் கல்லூரி நிர்வாகம் மகளிர் விடுதியில் ஆட்கள் நடமாட்டம் குறித்த மாணவிகளின் புகார் குறித்து கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கல்லூரி விடுதிக்குள் நுழைந்து  மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த   இளைஞர்களை கைது செய்ய கோரியும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டியும்  கல்லூரியில் பயிலும் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் நேற்று முன்தினம் மதியம் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது மாணவிகள் கல்லூரி நுழைவாயில் முன்பாக போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வந்தபோது அங்கிருந்த பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவிகளை கல்லூரிக்குள் செல்லுமாறு விரட்டினர்.

Madurai: கல்லூரி விடுதியில் புகுந்து மாணவிகளுக்கு தொல்லை; மதுரையில் இளைஞர் கைது!

குற்றவாளி கைது 

இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் திருப்பாலை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் கீழ் மதுரை கண்ணனேந்தல் பகுதியை சேர்ந்த அழகர்பாண்டி (32) என்பவரை திருப்பாலை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மதுரையிலுள்ள யாதவா மகளிர் கல்லூரி விடுதியில் இளைஞர் நுழைந்து தொல்லை அளித்த விவகாரத்தில் எந்தவித அரசியல் அழுத்தமும் இன்றி முறையான விசாரணையை வெளிப்படையாக நடத்த வேண்டும் என மாணவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget