மேலும் அறிய

Crime: காதல் திருமணம் செய்த இளம்பெண் வீடு புகுந்து கடத்தல்..! நெல்லையில் ஒரு தென்காசி சம்பவம் - பகீர் பின்னணி?

காதல் திருமணம் செய்த பெண் பெற்றோரால் கடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசியையடுத்து நெல்லையிலும் காதல் திருமணம் செய்த பெண் பெற்றோரால் கடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல் திருமணம்:

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஸ்ரீ ரங்கநாராயணபுரம் அம்மன் கோவிலை தெருவை சேர்ந்தவர் முருகன். 24 வயதான இவரும் அதே தெருவை சேர்ந்த 19 வயதான  சுமிகாவும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் கடந்த ஜனவரி 18ஆம் தேதி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. அதன் பின்னர் ஜனவரி 25ஆம் தேதி தங்கள் காதல் திருமணத்தை பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சுமிகாவின்  தாயார் பத்மா சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனது மகளைக் காணவில்லை என ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து உள்ளார். இதனையடுத்து கடந்த 30 ஆம் தேதி கூடங்குளம் காவல்துறையினர் சுமிகாவை மீட்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜர் படுத்தினர். அப்போது நீதிபதியின் முன்பு சுமிகா தான் திருமணம் செய்த கணவர் முருகனுடன் செல்வதாக தெரிவித்ததை அடுத்து நீதிமன்றம் சுமிகாவை கணவருடன் அனுப்பி வைத்தது.இந்த நிலையில் முருகன் தனது மனைவியை அழைத்துக் கொண்டு தங்களது சொந்த ஊரான ஸ்ரீ ரங்க நாராயணபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். 

வீடு புகுந்து தூக்கிய உறவினர்கள்:

அப்போது சுமிகாவின் தந்தை முருகேசன் மற்றும் அவரது உறவினர்கள் சுமார் 12 பேர் முருகனின் வீட்டிற்குள் நுழைந்து தகாத வார்த்தைகளால் பேசி சுமிகாவை தர தரவென்று இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக சுமிகாவின் கணவர் முருகன் கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் கூடங்குளம் போலீசார் சுமிதாவின் தந்தை முருகேசன், அவரது அம்மா பத்மா, உறவினர்கள் தங்க முத்து, அமுதா, அனுசியா, விஜயகுமார், செல்வகுமார், பாப்பா, தங்கம்மாள், வைகுண்டமணி, பஞ்சு பழம் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். 

அதே போல கடத்தப்பட்ட சுமிகாவை அவரது பெற்றோர்கள்  தலைமறைவாக வைத்துள்ள நிலையில் சுமிகாவை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.. நீதிமன்ற உத்தரவின் படி கணவர் வீட்டில் இருந்த சுமிகாவை அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கடத்தி சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தென்காசியில் காதல் திருமணம் செய்த கிருத்திகா வினித் தம்பதியரை தாக்கி கிருத்திகாவின் பெற்றோர் அவரை கடத்தி சென்ற வீடியோ  வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நெல்லையிலும் அதே போன்று ஒரு சம்பவம் நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

டியூசன் மாஸ்டரை கொல்ல திட்டம்... கையில் குண்டு வெடித்து சிதைந்த கை!
டியூசன் மாஸ்டரை கொல்ல திட்டம்... கையில் குண்டு வெடித்து சிதைந்த கை!
சீர்காழியில் பரபரப்பு: வீதிக்கு வர அஞ்சும் மக்கள் - ஓட ஓட விரட்டி 4 பேரை கடித்து குதறிய வெறிநாய்!
சீர்காழியில் பரபரப்பு: வீதிக்கு வர அஞ்சும் மக்கள் - ஓட ஓட விரட்டி 4 பேரை கடித்து குதறிய வெறிநாய்!
பாங்காக் விமானத்தில் வந்த 'கடத்தல் குருவி': சென்னை ஏர்போர்ட்டில் மடக்கிப் பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள்!
பாங்காக் விமானத்தில் வந்த 'கடத்தல் குருவி': சென்னை ஏர்போர்ட்டில் மடக்கிப் பிடித்த அதிகாரிகள்!
மயிலாடுதுறை பரபரப்பு: கணவர் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்காதலன் கைது; தப்பியோடிய மனைவிக்கும் வலைவீச்சு!
மயிலாடுதுறை பரபரப்பு: கணவர் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்காதலன் கைது; தப்பியோடிய மனைவிக்கும் வலைவீச்சு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
LIVE | Kerala Lottery Result Today (22.08.2026): காருண்யா கேரளா லாட்டரி; காசு கொட்டுமா? கட்டைய போட்ருமா?
LIVE | Kerala Lottery Result Today (22.08.2026): காருண்யா கேரளா லாட்டரி; காசு கொட்டுமா? கட்டைய போட்ருமா?
Embed widget