மேலும் அறிய

அண்ணா பல்கலை. மாணவி மீது பாலியல் தாக்குதல்; தலைநகரிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல்!

உலகளவில் புகழ் பெற்ற சென்னை கிண்டி அண்ணா பல்கலைகழக வளாகத்தில் காதலனை மிரட்டி துரத்தி விட்டு என்ஜினியரிங் மாணவி மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

 மர்ம நபர்கள் இருவர்

நேற்று இரவு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் தனது ஆண் நண்பரிடம் தனியாக நின்று பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்போது அந்த இடத்திற்கு வந்த மர்ம நபர்கள் இருவர் அந்த ஆண் நண்பரை தாக்கி அங்கிருந்து விரட்டிய நிலையில், அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் சம்பந்தப்பட்ட பெண் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் பாதிக்கப்பட்ட மாணவி குறிப்பிட்டுள்ளதாவது, நானும் எனது ஆண் நண்பரும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நின்று பேசிக்கொண்டிருந்த போது, அங்கு திடீரென வந்த மர்ம நபர்கள் இருவர், எனது ஆண் நண்பரை தாக்கிவிட்டு என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறை விசாரணை

இந்த புகாரின் அடிப்படையில் பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மர்ம நபர்கள், அங்கு படிக்கும் மாணவர்களா இல்லை வெளியே இருந்து உள்ளே வந்தவர்களா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரமடைந்துள்ளது. மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கல்வி நிறுவனங்களில் மாணவ மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

அண்ணாமலையின் எக்ஸ் பதிவு

இதைத்தொடர்ந்து இச்சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள், மாணவி ஒருவருக்குப் பாலியல் தாக்குதல் நடைபெற்றிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்து விட்டது. தினமும் படுகொலைச் சம்பவங்கள், போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிப்பு, பொதுமக்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர், பெண்கள், குழந்தைகள் என யாருக்கும் பாதுகாப்பில்லாத இருண்ட காலத்தில் இருப்பது போன்ற சூழ்நிலையில் தமிழகம் தற்போது இருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. குறிப்பாக, குற்றவாளிகள் திமுகவினர் என்றால், அவர்கள் மீதான நடவடிக்கை தாமதப்படுத்தப்படுகிறது. 

பெண்களுக்குப் பாதுகாப்பில்லை

மாநிலத் தலைநகரத்தின் மையப்பகுதியில், பொறியியல் கல்வி தலைமை நிறுவன வளாகத்தின் உள்ளே, பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது என்றால், சமூக விரோதிகளுக்கு, அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ எந்த பயமும் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. உடனடியாக, இந்தக் குற்றத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாநகர காவல்துறையும், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சரும், மாணவி மீதான பாலியல் தாக்குதலுக்கு முழு பொறுப்பேற்று, பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைகழக வளாகத்தில் பெண் மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
IND vs AUS: ரஞ்சி வீரர்கள் எதுக்கு இருக்காங்க? இனியாவது வாய்ப்புத் தருமா பிசிசிஐ?
IND vs AUS: ரஞ்சி வீரர்கள் எதுக்கு இருக்காங்க? இனியாவது வாய்ப்புத் தருமா பிசிசிஐ?
சூப்பர்ஸ்டார்னா சும்மாவா? ப்ரெஞ்சு படத்துலயே ரஜினிதான் மாஸ் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
சூப்பர்ஸ்டார்னா சும்மாவா? ப்ரெஞ்சு படத்துலயே ரஜினிதான் மாஸ் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
Embed widget