மேலும் அறிய

Crime: நடுரோட்டில் துடிதுடிக்க மனைவியை கொலை செய்த நபர்.. பரமக்குடியில் பயங்கரம்

பரமேஸ்வரனை மேகலா பிரிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ளது. குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டில் மேகலா வசித்து வந்தார். இப்படியான நிலையில் மணிகண்டன் என்பவருடன் மேகலாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் பட்டப்பகலில் இளம்பெண் ஒருவர் இரண்டாவது கணவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பகுதியில் லெனின் தெருவைச் சேர்ந்தவர் மேகலா. 25 வயதான இவருக்கு பரமேஸ்வரன் என்பவருடன் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக பரமேஸ்வரனை மேகலா பிரிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ளது. குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டில் மேகலா வசித்து வந்தார். இப்படியான நிலையில் மணிகண்டன் என்பவருடன் மேகலாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் இருவருமிடையே நெருக்கம் அதிகரித்து பின்னர் திருமணமும் செய்துக் கொண்டனர். மணிகண்டன், மேகலா இருவரும் பரமக்குடி பாரதிநகர் பகுதியில் வீடு எடுத்து வசித்து வந்தனர். இதற்கிடையில் கடந்த ஒரு மாதமாக இந்த தம்பதியினர் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மேகலா மணிகண்டனுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். மேலும் அவர் மீது பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். மணிகண்டன், மேகலா இருவரையும் தனித்தனியாக அழைத்து போலீசார் விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர். 

இப்படியான நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் மேகலா தனது தாயார் வேலை பார்த்து வரும் பெரிய கடை பஜாரில் உள்ள கடையில் விற்பனைக்காக பணியாரம் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மணிகண்டன், என்னிடம் ஏன் பேச மறுக்கிறாய், சேர்ந்து வாழ மறுக்கிறாய் என கேட்டு தகராறு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மேகலாவை சரமாரியாக முதுகில் குத்தினார். இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் கடை வாசலிலேயே சரிந்தார். உடனடியாக மணிகண்டன் அப்பகுதியில் இருந்து தப்பியோட முயன்றார். ஆனால் அப்பகுதி மக்கள் துணிச்சலாக செயல்பட்டு அவரை விரட்டி பிடித்தனர். பின்னர் அங்குள்ள கம்பம் ஒன்றில் கட்டி வைத்தனர். மேலும் உயிருக்கு போராட்டிய மேகலா சற்று நேரத்தில் உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து அறிந்த பரமக்குடி போலீசார் விரைந்து வந்து மேகலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மணிகண்டனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொலை சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

தலைப்பு செய்திகள்

கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
Embed widget