மேலும் அறிய

காலையில் அக்காவிற்கு  திருமணம், இரவு தங்கை உயிரிழப்பு - மயிலாடுதுறையில் சோகம்

தனது மருமளின் அக்காவிற்கு செய்த சீர்வரிசையை பார்த்த  மாமியார் தனது மருமகளை கொடுமைப்படுத்தியதால் பெண் உயிரிழந்த சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மயிலாடுதுறை அருகே திருமண ஆன 3 மாதத்தில் பெண் உயிரிழந்ததை அடுத்து கோட்டாட்சியர் விசாரணையை மேற்கொண்டுள்ளார்.
 

காதல் திருமணம் செய்துக்கொண்ட பெண் 3 மாதத்தில் உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நரசிங்கம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் திவ்யராஜ் - ஆரோக்கியசெல்வி தம்பதியினர். இவர்களுக்கு நான்கு 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மூன்றாவது மகள் 23 வயதான பட்டதாரி ஜெனிபர், இவரும்  இவர்களது உறவினரான மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா செங்குடி கிராமத்தை சேர்ந்த சவுரிராஜ் - இருதயமேரி தம்பதியினரின் மகன் மார்ட்டின் ராஜ் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார்.  இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இருவருக்கும் திருமணம் செய்ய மார்ட்டின் ராஜ் குடும்பத்தினர் பேசியபோது 2 -வது மகளுக்கு திருமணம் செய்யாமல் 3 -வது மகள் ஜெனிபருக்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். அதற்கு பெண்ணை மட்டும் கொடுத்தால் போதும், சீர்வரிசை எதுவும் வேண்டாம் என்று கூறி மார்ட்டின் ராஜ் கடந்த பிப்ரவரி மாதம் 9-ம் தேதி ஜெனிபரை திருமணம் செய்துள்ளார். இரண்டாவது மகள் திருமணம் முடிந்தவுடன் சீர்வரிசை செய்வதாக ஜெனிபரின் பெற்றொர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்.


காலையில் அக்காவிற்கு  திருமணம், இரவு தங்கை உயிரிழப்பு - மயிலாடுதுறையில் சோகம்

சீர்வரிசை பொருட்களுடன் ஒப்பீடு செய்த மாமியார்

இந்நிலையில் திருமணம் முடிந்து பத்து நாட்கள் மட்டுமே மணப்பெண் ஜெனிபருடன் குடும்பம் நடத்திய மார்ட்டின்ராஜ் அப்போதே மலேசியாவிற்கு வேலைக்கு சென்றுவிட்டார். இந்த சூழலில் ஜெனிபரின் அக்காவுக்கு நேற்று முன்தினம் 19-ம் தேதி குடவாசல் அருகே பருத்தியூர் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு ஜெனிபர், அவரது மாமியார் இருதயமேரி, நாத்தனார் லவன்சியாமேரி ஆகியோர் சென்றுள்ளனர். அப்பொழுது ஜெனிபரின் அக்காவிற்கு கொடுக்கப்பட்ட சீர்வரிசை பொருட்களை அவர்களது செல்போனில் புகைப்படம் எடுத்த மாமியாரும், நாத்தனார் ஜெனிபரிடம் உனக்கு சீர்வரிசை எதுவும் செய்யவில்லை என்று அங்கேயே கடும் சண்டையிட்டு ஜெனிபரை ஊருக்கு அழைத்து சென்றுவிட்டனர்.


காலையில் அக்காவிற்கு  திருமணம், இரவு தங்கை உயிரிழப்பு - மயிலாடுதுறையில் சோகம்

அதனைத் தொடர்ந்து நேற்று இரவு தனது வீட்டிற்கு தொலைபேசியில் பேசிய ஜெனிபர் அக்காவிற்கு மட்டும் இவ்வளவு சீர்வரிசை பொருட்களை உன் குடும்பத்தார் செய்துள்ளனர், உனக்கு மட்டும் ஏன் சீர்வரிசை எதுவும் செய்யவில்லை என சொல்லி கொடுமைப்படுத்தி தாக்கியதாக தொலைபேசியில் தெரிவித்துள்ளார். அப்போது ஜெனிபர் பேசிக்கொண்டு இருக்கும்போதே தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பதற்றம் அடைந்த ஜெனிபர் குடும்பத்தினர் தங்கள் மகனை ஜெனிபர் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். அங்கு ஜெனிபர் பேச்சு மூச்சு இன்றி மயங்கி கிடந்துள்ளார். 


காலையில் அக்காவிற்கு  திருமணம், இரவு தங்கை உயிரிழப்பு - மயிலாடுதுறையில் சோகம்

கோட்டாச்சியர் விசாரணை

உடனே அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே ஜெனிபர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஜெனிபரின் சாவுக்கு காரணமான அவரது மாமியார் இருதயமேரியை கைது செய்ய வலியுறுத்தி ஜெனிபரின் உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் மயிலாடுதுறை மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சீர்காழி கோட்டாட்சியர் பொறுப்பு அர்ச்சனா நேரில் ஜெனிபர் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் ஜெனிபரின் உடல் உடற்கூறு ஆய்வு செய்ய அனுமதித்தனர். 2 வது மகள் திருமணநாளில் காதல் திருமணம் செய்த 3 -வது மகள் வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
தூத்துக்குடி: 12ம் வகுப்பு மாணவி கொடூர கொலை! குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம், பதற்றம்!
தூத்துக்குடி: 12ம் வகுப்பு மாணவி கொடூர கொலை! குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம், பதற்றம்!
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது! - மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து அன்புமணி ஆவேசம்!
பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது! - மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து அன்புமணி ஆவேசம்!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Petrol Diesel Issue India: பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
‘நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
Petrol Diesel Stock : வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
Embed widget