மேலும் அறிய

கருத்தடை அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு... மருத்துவர் கைது; மருத்துவமனைக்கு சீல்!

நேற்று முன்தினம் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை அந்த மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு 3 வது முறையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

எடப்பாடி தனியார் மருத்துவமனையில், கருத்தடை அறுவை சிகிச்சை செய்த பெண் திடீரென உயிரிழந்தார். தவறான சிகிச்சை அளித்ததால் அவர் இறந்தார் எனக் கூறி, மருத்துவமனையை சூறையாடிய உறவினர்கள், முற்றுகை ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்தடை அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு... மருத்துவர் கைது; மருத்துவமனைக்கு சீல்!

சேலம் மாவட்டம், எடப்பாடி அடுத்துள்ள ஜலகண்டாபுரம் சவுரியூர் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (31), விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா (28). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகின்றது. இந்த தம்பதிக்கு 11 வயதில் பெண் குழந்தையும், 7 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், சங்கீதாவிற்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக, கடந்த 20 நாட்களுக்கு முன்பு, எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு, வீடு திரும்பிய சங்கீதாவுக்கு 2 வாரங்கள் கழித்து, அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால், மீண்டும் அதே மருத்துவமனை சங்கீதாவை சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர், வயிற்றில் ரத்தம் கட்டியுள்ள தாகவும், மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் கூறியதன் பேரில், 2 வது முறையாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப் பட்டது.

கருத்தடை அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு... மருத்துவர் கைது; மருத்துவமனைக்கு சீல்!

அதன் பின்னர், வீட்டில் இருந்தபடி மருந்து, மாத்திரைகள் உட்கொண்டு வந்த சங்கீதாவுக்கு, நேற்று முன்தினம் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை அந்த மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு 3 வது முறையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று காலை 11.30 மணி அளவில் உடல்நிலை மோசமான நிலையில் சங்கீதா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததால் தான், சங்கீதா உயிரிழந்ததாக கூறிய அவரது உறவினர்கள், தனியார் மருத்துவமனையில் இருந்த பொருட்களை உடைத்து சூறையாடினர். இதுபற்றி தகவலறிந்த தாசில்தார் லெலின், மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் விசாரணை நடத்தினர். ஆனால், அதனை ஏற்க மறுத்து, சங்கீதாவின் உறவினர்கள் சங்கீதா மறைவிற்கு காரணமான மருத்துவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மருத்துவமனை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

இதுகுறித்து சங்கீதாவின் உறவினர்கள் கூறுகையில், மருத்துவர் அளித்த தவறான சிகிச்சையால் தான் சங்கீதா இறந்துள்ளார். எனவே, அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் கைது செய்து, மருத்துவமனைக்கு சீல் வைக்க தாசில்தார் மற்றும் மருத்துவதுறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதனைத் தொடர்ந்து மூன்று முறை அறுவை சிகிச்சை செய்த மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பின்னர், எடப்பாடி அரசு தலைமை மருத்துவர் செந்தில்குமரன் முன்னிலையில் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. முன்னதாக, தீவிர சிகிச்சையில் இருந்த மூன்று நோயாளிகள் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கும், சாதாரண சிகிச்சையில் இருந்த சுமார் 20 நோயாளிகளை வெவ்வேறு மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனையடுத்து, சங்கீதாவின் உடல், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தலைப்பு செய்திகள்

தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget