மேலும் அறிய

குடிபோதையில் இருந்த கணவன்..! கழுத்தை நெரித்து கொன்ற மனைவி, கள்ளக்காதலன் கைது..!

குடிபோதையில் இருந்த கணவனை கள்ளக்காதலுனுடன் இணைந்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம், தாதகாப்பட்டி கேட் அருகே மூணங்கரடு அமைந்துள்ளது கொத்தடிமை காலனி. இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் பெருமாள். இவருடைய மகன் ஜீவா. 29 வயதான இவர் தச்சுத்தொழில் செய்து வந்தார். இவருக்கு கவிதா (வயது 25) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 16-ந் தேதி ஜீவா திடீரென உயிரிழந்தார். இதுதொடர்பாக, அவரது மனைவி கவிதா அன்னதானப்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். மதுபோதை பழக்கம் உள்ள ஜீவா அளவுக்கதிகமாக மது குடித்து கீழே விழுந்ததால் உயிரிழந்தார் என்று அவரது மனைவி கவிதா தகவல் தெரிவித்தார்.

அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியிருந்தனர். பிரேத பரிசோதனையில் ஜீவாவின் முகம், வாய், கழுத்து ஆகிய பகுதிகளில் பலத்த காயங்கள் இருப்பது தெரியவந்தது. மேலும், இந்த காயங்கள் கீழே விழுந்ததால் ஏற்படவில்லை என்றும், யாரோ தாக்கியுள்ளனர் என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினர்.


குடிபோதையில் இருந்த கணவன்..! கழுத்தை நெரித்து கொன்ற மனைவி, கள்ளக்காதலன் கைது..!

ஜீவாவின் மரணத்தில் அவரது நண்பர் ராஜா ( வயது 39) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ராஜா மற்றும் கவிதாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், இவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணாக தகவல் அளித்தனர். இதனால், சந்தேகமடைந்த போலீசார் இருவரையும் தீவிரமாக விசாரித்தனர்.

அப்போது, ஜீவாவின் நண்பரான ராஜா கவிதாவின் வீட்டிற்கு அடிக்கடி சென்றுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. கவிதா மற்றும் கவிதாவின் குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை, ராஜா, கவிதாவுடன் உல்லாசமாக இருப்பதற்காக தனியாக எடுத்து வைத்திருந்த வாடகை வீட்டில் மாட்டி வைத்துள்ளார். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் அறிந்த ராஜாவின் மனைவி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மேலும், ஜீவாவிடம் இந்த தகவலையும் கூறியுள்ளார்.


குடிபோதையில் இருந்த கணவன்..! கழுத்தை நெரித்து கொன்ற மனைவி, கள்ளக்காதலன் கைது..!

இதனால், ஜீவா ராஜாவையும் கவிதாவையும் கண்டித்துள்ளார். இந்த நிலையில், கடந்த 16-ந் தேதி இரவு ராஜாவும், கவிதாவும் உல்லாசமாக இருப்பதை ஜீவா பார்த்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஜீவா அவர்கள் இருவரையும் கடுமையாக கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ராஜாவும், கவிதாவும் ஜீவாவின் வாயையும், மூக்கையும் மூச்சுவிட முடியாமல் மூடியும், அவரது கழுத்தை நெரித்தும் கொலை செய்தததாக தங்களது வாக்குமூலத்தில் தெரிவித்தனர். காவல்துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக அவர் தவறி விழுந்ததாக தெரிவித்தனர்.

கணவனை கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget