பெரியார் பல்கலைக்கழகத்தில் நடப்பது என்ன ? பாலியல் வழக்கில் பேராசிரியர் தலைமறைவு; கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட மனைவி
"இன்னும் இரண்டு வாரங்களில் எனக்கு குழந்தை பிறக்க இருக்கிறது. இந்த காலகட்டத்தில் அனைத்து பெண்களுக்கும் தனது கணவன் கூட இருக்கணும்னு ஆசை படுவா ஆனால் இப்போது என் கணவர் என்னுடன் இல்லை".
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் வரலாறு துறை முதுகலை இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 31 ஆம் தேதி சேலம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் பிரேம் குமார் என்பவர் கடந்த ஓராண்டு காலமாக பாலியல் ரீதியாக தொட்டு பேசுவதும், இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும், ஜாதி பெயரை சொல்லி திட்டுவது அதனை வெளியே சொன்னால் ஃபெயில் ஆகி விடுவதாக மிரட்டுவதாகவும் கூறியிருந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய சேலம் சூரமங்கலம் மகளிர் ஆய்வாளர் சுப்பு லட்சுமி உதவி பேராசிரியர் பிரேம் குமார் மீது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது கொலை மிரட்டல் விடுத்தது, ஜாதி பெயரை சொல்லி திட்டியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார். மேலும் சூரமங்கலம் உதவி ஆணையாளர் சரவண குமரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவாக உள்ள உதவி பேராசிரியர் பிரேம் குமாரை தேடி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார் பெரியார் பல்கலைக்கழக வரலாறு துறை மாணவர்கள், உதவி பேராசிரியர் பிரேம் குமார் மீது வேண்டுமென்று உள்நோக்கத்துடன் பாலியல் தொந்தரவு, ஜாதி பெயர் சொல்லி நடத்துவது ரொம்ப காரியங்களில் அவர் ஒருநாளும் ஈடுபட்டதில்லை. திட்டமிட்டு சிலரால் ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு இது என்று குற்றம் சாட்டினார். மேலும் அவரைப் பற்றி விசாரிக்க தனி குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. விசாரணைக் குழுவில் எங்களை விசாரித்த ஆசிரியர்கள் ஜாதி அடிப்படையில் விசாரணை நடத்துகின்றனர் என்று கூறினார்.
இதற்கிடையே பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மாணவர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பெரியார் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவ - மாணவிகள் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு பல்கலைக்கழக அனுமதி இன்றி பேட்டி அளிப்பது போன்ற காரியங்களை ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கருத்து சுதந்திரம் அளிக்கப்படுவதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மாணவர்களை வரலாறு துறையில் பேராசிரியர்கள் மிரட்டும் ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த நிலையில் நேற்று உதவி பேராசிரியர் பிரேம்குமாரின் மனைவி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார், "அதில் நான் 9 மாத கர்ப்பிணியாக உள்ளேன். இன்னும் இரண்டு வாரங்களில் எனக்கு குழந்தை பிறக்க இருக்கிறது. இந்த காலகட்டத்தில் அனைத்து பெண்களுக்கும் தனது கணவன் கூட இருக்கணும்னு ஆசை படுவா ஆனால் இப்போது என் கணவர் என்னுடன் இல்லை". வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் பல்கலைக்கழக நிர்வாகம் இது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகிறது என்று கண்ணீருடன் பேசிய வீடியோ வேகமாக பரவி வருகிறது.