மேலும் அறிய

மயிலாடுதுறை: போலி ஆவணங்கள் மூலம் விவசாயிகளின் பணத்தை சுருட்டிய விஏஓ!

மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி ஊராட்சியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து பல லட்சங்கள் மோசடி செய்த வி.ஏ.ஓவை பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியர் உத்தரவு!

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தாலுக்கா அகரகீரங்குடி ஊராட்சியில் உள்ளது முட்டம் கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு சுமார் 450 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்திருந்தனர். அந்த பயிர்களுக்கு, சிட்டா, அடங்கலுடன் கிராம நிர்வாக அலுவலர் திருமலைசங்கு என்பவரிடம் சமர்ப்பித்து பயிர்க்காப்பீட்டினையும் செய்திருந்தனர். 

மயிலாடுதுறை: போலி ஆவணங்கள் மூலம் விவசாயிகளின் பணத்தை சுருட்டிய விஏஓ!

அந்த பருவத்தில் பெய்த கனமழையின் காரணமாக சம்பா பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு 68 சதவீதத் தொகையாக 22 ஆயிரம் ரூபாய் காப்பீட்டு நிறுவனம் அறிவித்தது. இந்த காப்பீட்டுத் தொகையானது பல விவசாயிகளுக்கு  வந்து சேரவில்லை. இதையடுத்து, இழப்பீட்டுத் தொகை கிடைக்காத விவசாயிகள் வேளாண்துறை அதிகாரிகளை அணுகி விபரம் கேட்டுள்ளனர். வேளாண் துறை அதிகாரிகள் அவர்களிடம் உழவன் செயலியை பயன்படுத்தி காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம் என விளக்கியுள்ளனர். 

மயிலாடுதுறை: போலி ஆவணங்கள் மூலம் விவசாயிகளின் பணத்தை சுருட்டிய விஏஓ!

அதனைத் தொடர்ந்து விவசாயிகள் உழவன் செயலில் பார்த்த போது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது, அதில் அதே புல எண்ணில் வேறொரு நபர்களுக்கு தொகை செலுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபர்கள் யார் எனப்பார்த்ததில், அவர்கள் அனைவருமே கிராம நிர்வாக அலுவலர் திருமலைசங்குவின் மனைவி, மகள் மற்றும் உறவினர்கள் என்பது தெரியவந்தது. மேலும் அதிர்ச்சியாக சிலரது புல எண்ணுக்கான காப்பீட்டுத் தொகை கிராம நிர்வாக அலுவலர் திருமலைசங்குவின் பெயருக்கே வரவு வைக்கப்பட்டிருந்தது. 

மயிலாடுதுறை: போலி ஆவணங்கள் மூலம் விவசாயிகளின் பணத்தை சுருட்டிய விஏஓ!

இதையடுத்து, அவரிடம் நேரில் சென்று விவசாயிகள் கேட்டபோது அவர் அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர். அப்புகாரில் கிராம நிர்வாக அலுவலர் திருமலைசங்கு போலியான சிட்டா, அடங்கல் வழங்கி மறையூர் கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றும், அதன்பேரில் பயிர்க்காப்பீடு பெற்றும் ஊழல் செய்துள்ளதாகவும், அவர் மீது விசாரணை செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். 

மயிலாடுதுறை: போலி ஆவணங்கள் மூலம் விவசாயிகளின் பணத்தை சுருட்டிய விஏஓ!

காப்பீடு மூலம் மட்டுமே சுமார் 100 ஏக்கர் பயிருக்கு 22 லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், வங்கிக் கடன் பெற்ற வகையில் பல லட்சம் முறைகேடு செய்துள்ளதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் உத்தரவின் பேரில் கோட்டாட்சியர் பாலாஜி அவர்கள் ஆவணங்களை சரிபார்த்ததில் வி.ஏ.ஓ போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து வி.ஏ.ஓ திருமலைசங்கு அவர்களை பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுபோல் முறையீட்டில் வேறு சில கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று சந்தேகம் எழுந்துள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

விமான நிலைய பார்சல்களை ஆட்டையை போட்ட துப்புரவுத் தொழிலாளி !! ரூ.3 லட்சம் மோசடி பெண் கைது
விமான நிலைய பார்சல்களை ஆட்டையை போட்ட துப்புரவுத் தொழிலாளி !! ரூ.3 லட்சம் மோசடி பெண் கைது
பள்ளி தோழியுடன் அந்தரங்க உறவு !! செல்போனில் வீடியோ காட்சிகள் - மிரட்டிய இளைஞர்
பள்ளி தோழியுடன் அந்தரங்க உறவு !! செல்போனில் வீடியோ காட்சிகள் - மிரட்டிய இளைஞர்
‘பாத்ரூம்’ முருகன் கொலைக்கு பழிக்குப் பழியா? முக்கிய குற்றவாளி வீரபத்திரன் பட்டப்பகலில் கொடூரக் கொலை!
‘பாத்ரூம்’ முருகன் கொலைக்கு பழிக்குப் பழியா? முக்கிய குற்றவாளி வீரபத்திரன் பட்டப்பகலில் கொடூரக் கொலை!
நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணின் தாலிச் செயினை பறிக்க முயற்சி: பெயிண்டரை தட்டித்தூக்கிய போலீசார்
நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணின் தாலிச் செயினை பறிக்க முயற்சி: பெயிண்டரை தட்டித்தூக்கிய போலீசார்

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget