மேலும் அறிய

அதிர்ச்சிதரும் வாட்சப் சாட்.. குடும்பத்தினரின் கதறல் : கேரள இளம்பெண் விஸ்மயாவின் கணவர் போலீஸில் சரண்..!

திருமணத்தின் போது கிரண்குமாருக்கு அவரது பெற்றோர் 100 பவுன் தங்கநகைகள், ஒரு டொயோட்டா யாரிஸ் கார் மற்றும் ஒரு ஏக்கர் நிலம் ஆகியனவற்றை வரதட்சணையாகக் கொடுத்துள்ளனர். கிரண் குமார் மோட்டார் வாகனத் துறையில் அதிகாரியாக இருக்கிறார்.

மர்மமான முறையில் உயிரிழந்த கேரள இளம் பெண் விஸ்மயாவின் கணவர் போலீஸில் சரணடைந்தார். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதே நிரம்பிய இளம் பெண் விஸ்மயா. ஆயுர்வேத மருத்துவ இறுதி ஆண்டு பயிலும் மாணவி. இவருக்கும் கொல்லம் மாவட்டம் சாஸ்தம்கோட்டா பகுதியைச் சேர்ந்த கிரண் குமாருக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது கிரண் குமாருக்கு அவரது பெற்றோர் 100 பவுன் தங்கநகைகள், ஒரு டொயோட்டா யாரிஸ் கார் மற்றும் ஒரு ஏக்கர் நிலம் ஆகியனவற்றை வரதட்சனையாகக் கொடுத்துள்ளனர். கிரண் குமார் மோட்டார் வாகனத் துறையில் அதிகாரியாக இருக்கிறார்.

இந்நிலையில், தனக்கு வாங்கிக் கொடுக்கப்பட்ட யாரிஸ் காரின் மைலேஜ் சரியில்லை என்று கூறி அந்தக் காருக்குப் பதிலாக விஸ்மயா குடும்பத்தினரிடமிருந்து பணம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக அடிக்கடி மனைவி விஸ்மயாவை துன்புறுத்தியும் வந்துள்ளார்.

அதிர்ச்சிதரும் வாட்சப் சாட்.. குடும்பத்தினரின் கதறல் : கேரள இளம்பெண் விஸ்மயாவின் கணவர் போலீஸில் சரண்..!

ஒருமுறை விஸ்மயாவை அவரின் பெற்றோர் முன்னிலையிலேயே தாக்கியுள்ளார். அப்போதே போலீஸில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், போலீஸார் இருதரப்பையும் சமரசம் செய்து அனுப்பிவைத்தனர். அதன் பின்னர் விஸ்மயா பெற்றோரின் வீட்டிலேயே இருந்துவிட்டார். மூன்று மாதங்களுக்கு முன்னர் விஸ்மயாவின் வீட்டுக்குவந்து சமரசம் பேசி மனைவியை அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அதன்பின்னர் விஸ்மயா தந்தையுடனும், சகோதரனுடனும் பேசவில்லையாம். தாயிடம் மட்டுமே பேசிவந்துள்ளார். தாயாரிடம் தான் கணவரால் அடித்துத் துன்புறுத்தப்படுவதை கூறியிருக்கிறார். மேலும் தனது உறவினர் ஒருவருக்கு தான் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட காயங்களை புகைப்படமாக எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பியிருக்கிறார்.
ஒருமுறை தாயாரிடம் பேசியபோது கணவர் தனது தலைமுடியைப் பிடித்து இழுத்து முகத்தில் குத்தி காயப்படுத்தியாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில், நேற்று ஜூன் 21 விஸ்மயா கணவரின் வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவர் நிச்சயம் தற்கொலை செய்திருக்கமாட்டார் கணவர் கிரண் குமார் தான் கொலை செய்திருப்பார் என விஸ்மயாவின் வீட்டார் போலீஸில் புகார் அளித்தனர்.

இதற்கிடையில் விஸ்மயாவின் கணவர் கிரண்குமார் நேற்றிரவு சூரானந்த் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவர் மீது சட்டப்பிரிவு 304, வரதட்சனை மரணம், சட்டப்பிரிவு 408 ஏ ஆகியனவற்றின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கேரளாவில் கடந்த 2016 முதல் 2020 வரை 56 வரதட்சனை மரணங்கள் நிகழ்துள்ளன. ஏப்ரல் மாதம் வரையில் 1080 வழக்குகள் பதிவாகியுள்ளன. விஸ்மயாவின் மரணம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மாவட்ட அளவில் குடும்பப் பிரச்சினைகள் தீர்வு மையங்களை வலுப்படுத்தக் கூறியுள்ளார். மேலும், பெண்களிடமிருந்து வரும் குடும்ப வன்முறைப் புகார்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும்படி மாவட்ட எஸ்.பி.க்களுக்கு வலியுறுத்தியிருக்கிறார்.

குடும்ப வன்முறையா உடனே இந்த எண்ணை அழையுங்கள்..

குடும்ப வன்முறையை சகித்துக் கொண்ட காலங்கள் ஓயட்டும். கணவராலோ, கணவரின் குடும்பத்தாராலோ உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ துன்புறுத்தப்பட்டால் உடனடியாக த்வானி என்ற அமைப்பின் ஹாட்லைன் எண்ணை 1800 102 7282 தொடர்பு கொள்ளுங்கள். அல்லது 1098 என்ற வுமன் ஹெல்ப்லைனில் அழையுங்கள். இது 24 மணிநேரமும் இயங்கக்கூடியது. இந்த ஹெல்ப்லைன் காவல்துறை, மருத்துவமனை அல்லது தேவைப்படும் உடனடி உதவியை செய்யக்கூடிய அதிகாரம் உள்ளவர்களை இணைக்கும். ஒருவேளை நீங்கள் இந்த எண்ணை அழைத்துவிட்டு பேசமுடியாமல் போனாலோ அல்லது உங்களது அழைப்பை யாரேனும் துண்டித்துவிட்டாலோ கூட வுமன் ஹெல்ப்லைன் உங்களை மீண்டும் தொடர்புகொள்ளும். ஹெல்ப்லைன் ஊழியர்கள் உங்களைப் பற்றிய ரகசியம் காப்பர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
"மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தி.மு.க நிர்வாகி" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
"மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தி.மு.க நிர்வாகி" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
Embed widget