மசூதி சூறையாடப்பட்டதா? விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரால் கடைகள் எரிக்கப்பட்டதா? என்ன நடக்கிறது திரிபுராவில்..?
மசூதியை நோக்கி தாக்குதல் நடத்தச்சென்ற விஷ்வ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்தவர்கள் இஸ்லாமிய வீட்டுக்குள் நுழைந்து பெண்களிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக காவல்நிலையத்தில் 2 பேர் புகார் அளித்து உள்ளனர்
திரிபுராவில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் மசூதிகளை தாக்கி இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகளை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடந்த வன்முறையை கண்டித்து கடந்த புதன்கிழமை பாஜக ஆளும் திரிபுரா மாநிலத்தின் பல பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தல் அமைப்பை சேர்ந்த 3,500 க்கும் மேற்பட்டவர்கள் காவிக் கொடிகளை ஏந்தி ஊர்வலம் சென்றனர். அப்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக மதவெறியை தூண்டும் வகையில் முழக்கங்களை எழுப்பிய விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர், அவ்வழியாக கண்ணில் தென்பட்ட இஸ்லாமியர்கள் மீது பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தினர்.
Visuals of grocery and ration shops burnt in Rowa yesterday. They were owned by Nizamuddin and Amir Hussain. This happened at around 3:30-4pm yesterday after the rally turned violent. As per Police the situation is under control. #TripuraMuslimsUnderAttack #Tripura pic.twitter.com/qNqqcllLVt
— Samriddhi K Sakunia (@Samriddhi0809) October 27, 2021
மேலும் அங்குள்ள மசூதிகள், இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகளுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களை அடித்து உடைத்ததாகவும், இதை தடுக்க சென்ற இஸ்லாமியர்களும் கடுமையாக தாக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விஷ்வ இந்து பரிஷத்தின் இந்த வன்முறை வெறியாட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட மசூதிகள் இலக்கானதாகவும், நூற்றுக்கணக்கான கடைகள், வீடுகள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது. தாக்கப்பட்ட மசூதிகள், கடைகள் சிலவற்றை விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் தீ வைத்து எரித்த காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
3 shops in this area were owned by Amirudin. Out of which 2 were grocery stores& remaining was a godown. Allegedly, the goons burnt down his shop&godown which led to loss of at least Rs10 Lakh. This was the sole earning member in a family of 13 people. #TripuraMuslimsUnderAttack pic.twitter.com/C9vP7FA2Qr
— Samriddhi K Sakunia (@Samriddhi0809) October 27, 2021
இவ்வாறு தாக்கப்பட்ட மசூதிகள், வீடுகளின் கதவுகளில் காவிக் கொடியை நட்டு வைத்து சென்று உள்ளனர் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர். இந்த தாக்குதல் சம்பவத்தின் ராவோவில் உள்ள ஜமா மசூதியை நோக்கி தாக்குதல் நடத்த சென்ற விஷ்வ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்தவர்கள் இஸ்லாமிய வீட்டுக்குள் நுழைந்து பெண்களிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக காவல்நிலையத்தில் 2 பேர் புகார் அளித்து உள்ளனர்.
Here is the copy of FIR. He has filed a formal Complaint against the mob. pic.twitter.com/olyBkE2m9P
— Samriddhi K Sakunia (@Samriddhi0809) October 27, 2021
கையில் வாள்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை சுமந்து சென்று ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தல் உள்ளிட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் போலீஸ் கண்முன்பாகவே வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்கள் வைரலாகி பதைபதைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு திரிபுரா, உனாகோட்டி, வட திரிபுரா, கோமதி, செபாஹிஜாலா உள்ளிட்ட பகுதிகள் வன்முறையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இஸ்லாமியர்களுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ் மற்றும் துணை அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இவை அனைத்தும் சிறிய சம்பவங்கள் என திரிபுரா வடக்கு மாவட்ட காவல்துறை தெரிவித்து உள்ளது. தற்போது சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருப்பதாகவும், மக்கள் அமைதியுடன் இருக்குமாறும் காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உறுதியளித்துள்ள போலீஸ், இதுகுறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.