மேலும் அறிய
Advertisement
Crime: கர்ப்பிணி மனைவி அடித்து கொலை; கணவன் வெறிச்செயல் - அதிர்ச்சி தரும் காரணம்
விருத்தாச்சலத்தில் வளைகாப்பு நடத்த வேண்டும் என கூறிய கர்ப்பிணி மனைவியை, காதல் கணவன் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாச்சலத்தில் வளைகாப்பு நடத்தகூறி, கர்ப்பிணி மனைவி கூறியதால், ஆத்திரத்தில் மனைவியை காதல் கணவன் அடித்துக் கொன்றுள்ளார். இறந்த பெண், அவர் வீட்டின் கதவில், ’உன்னை புரிஞ்சுக்காமல் போய்விட்டேன் அம்மா, நீ எனக்காக நல்லா இருக்கணும் அம்மா’ என்று எழுதி வைத்துள்ளார்.
விருத்தாச்சலம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் இரண்டாவது மகன் 20 வயதுகொண்ட அற்புதராஜ். இவர் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள நிலையில் விருத்தாச்சலம் காய்கறி சந்தையில் வேலை செய்து வருகிறார். இதேபோல் விருத்தாச்சலம் அடுத்த வீராரெட்டிகுப்பம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை- லதா தம்பதியினரின் ஒரே மகள் 18 வயது கொண்ட சக்தி.
காதல் திருமணம்:
ஏழுமலை இறந்த பின்பு, தனது ஒரே மகளுடன், தாய் லதா, விருத்தாச்சலம் பெரியார் நகரில் வீடு கட்டி வாழ்ந்து வந்தனர். பன்னிரண்டாம் வகுப்பு படித்திருக்கும் சக்தி, கடந்த கொரோனா கால கட்டத்தின்போது, விருத்தாச்சலம் பெரியார் நகர் பகுதியில் உள்ள தனியார் பேக்கரியில் வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது அதே பேக்கரியில் அற்புதராஜும் வேலை செய்துள்ளார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்தவுடன், கடந்த ஏழு மாதத்துக்கு முன்பு, இரு வீட்டாரின் எதிர்ப்பை மீறி, வீட்டைவிட்டு சென்று காதல் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் முடிந்த பின்பு, சக்தியின் வீடான விருத்தாச்சலம் பெரியார் நகரில் உள்ள தனது தாய் லதா வீட்டில், தனது கணவனுடன் ஒன்றாக வசித்து வந்தனர். சக்தி ஏழு மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், வழக்கம்போல் வேலைக்குச் சென்று வீட்டு, நேற்று முன்தினம் மதிய சாப்பாட்டிற்காக அற்புதராஜ் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் மீண்டும் வேலைக்குச் சென்றுள்ளார். அற்புதராஜ் சென்ற பின்பு, வீட்டிற்குள் நுழைந்த சக்தியின் தாயார் லதா, தனது மகள் உடல் அசைவு இல்லாத நிலையில் படுத்திருப்பதைக் கண்டு எழுப்பி உள்ளார்.
ஆனால் தனது மகள் சக்தி, மூச்சுப் பேச்சு இல்லாமல் கிடப்பதைக் கண்டு கதறி அழுது உள்ளார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் வந்து பார்த்தபோது சக்தி உயிரிழந்ததை கண்டு, காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த விருத்தாச்சலம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சக்தியின் கணவரான அற்புதராஜை, காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தனக்கு எதுவும் தெரியாததுபோல், நாடகம் ஆடிவந்த அற்புதராஜ், ஒரு கட்டத்தில் காவல்துறையினரின் கிடுக்குப்பிடி விசாரணையில், தனது மனைவியை அடித்து கொன்றதை ஒப்புக்கொண்டார்.
காவல்துறையினர் விசாரணை :
7 மாத கர்ப்பிணியாக உள்ள தனது மனைவி, அடிக்கடி வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என கூறி வந்ததாகவும், இதனால் இருவருக்கும் வாக்குவாதம், சண்டைகள் ஏற்பட்டதாகவும், அவ்வாறு நடைபெற்ற சண்டையில் ஆத்திரமடைந்த அற்புதராஜ், தனது கர்ப்பிணி மனைவி அடித்துக் கொன்றது தெரிய வந்தது. இது குறித்து விருத்தாச்சலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கதவில் எழுதப்பட்ட வாசகம்:
இறந்துபோன சக்தி தனது வீட்டில் உள்ள கதவுகள், சுவர்களில் தனது அம்மா மீதும், தனது கணவர் மீதும் கொண்டுள்ள பாசத்தை எழுதி வைத்துள்ளார். அதில், ஐ லவ் யூ அம்மா, true lovers என கணவர் மற்றும் அம்மா பேரை வீடு முழுவதும் எழுதி வைத்துள்ளார். அது மட்டுமில்லாமல், அவரது வீட்டின் கதவில், அம்மா உன்ன நான் புரிஞ்சுக்காம போயிட்டேன். உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா, உன்ன என்னால மறக்க முடியாது அம்மா.
நீ எனக்காக நல்லா இருக்கணும் அம்மா என்று ஆங்கிலத்தில் எழுதி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வீடு முழுவதும் தனது அம்மா மற்றும் தனது கணவன் மீது கொண்ட பாசத்தை தனது எழுத்துக்களால் பதிவு செய்திருக்கும் சக்தியின் குழந்தைத்தனமான பாசத்தை புரிந்து கொள்ளாமல், கணவன் அடித்துக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் முதுநகர் அருகே உள்ள வழி சோதனை பாளையம், தெற்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் சங்கர் (53). விவசாயியான இவர் கடந்த 24ம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் மோதியதில் இவரது வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
தூக்கிட்டு தற்கொலை
பின்னர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அதிகாலை சங்கருக்கு தோள்பட்டை வலி அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் காணப்பட்ட அவர் திடீரென கழிவறைக்கு சென்று தனது கைலியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைப் பார்த்த அவரது மனைவி அலறி துடித்துள்ளார். இது குறித்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion