மேலும் அறிய

காதலனா? காசு? - இயக்குநரைத் துடிக்கத் துடிக்கக் கொன்ற துணை நடிகை! முன்னாள் காதலனுடன் சேர்ந்து அரங்கேற்றிய வெறிச்செயல்!

விழுப்புரம் அருகே காதலித்த குறும்பட இயக்குநரை, துணை நடிகை தனது முன்னாள் காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்: திரைப்படப் பாணியில் அரங்கேறிய ஒரு கொடூரக் கொலைச் சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது. காதலித்தவரைத் திருமணம் செய்ய மறுத்ததோடு, பண விவகாரத்தில் ஏற்பட்ட மோதலால் முன்னாள் காதலனுடன் சேர்ந்து இயக்குநரைத் துடிக்கத் துடிக்கக் கொலை செய்த துணை நடிகையின் விபரீத முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சவுக்குத் தோப்பில் அழுகிய சடலம்:

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அடுத்த மதுரா வேடாளம் கிராமத்தில் உள்ள ஒரு சவுக்குத் தோப்பில், கடந்த 7-ம் தேதி பயங்கர துர்நாற்றம் வீசியது. அங்கு சென்று பார்த்த பொதுமக்கள், முகம் சிதைந்து அழுகிய நிலையில் ஒரு இளைஞரின் சடலம் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அரகண்டநல்லூர் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

யார் அந்த இளைஞர்?

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் திருநெல்வேலி மாவட்டம், நந்திக்கரை அணை குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (வயது 28) என்பதும், அவர் சென்னையில் தங்கி குறும்பட இயக்குநராகப் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

கொலைக்கான பின்னணி - ஐந்து வருட காதல்:

சம்பவ இடத்தில் பதிவான செல்போன் எண்களை ஆய்வு செய்தபோது, துணை நடிகையான பூஜா என்பவருடன் ஜெயக்குமாருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. பூஜா மற்றும் ஜெயக்குமார் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இடையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. பூஜா திடீரென ஜெயக்குமாருடன் பேசுவதைத் தவிர்த்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜெயக்குமார், காதலித்த காலத்தில் பூஜாவிற்குத் தான் கொடுத்த பணத்தைத் திருப்பித் தரும்படி கேட்டுள்ளார். மேலும், தன்னையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் போலீஸில் புகார் அளிப்பேன் அல்லது கொலை செய்துவிடுவேன் என்றும் பூஜாவை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் காதலனுடன் தீட்டிய ஸ்கெட்ச்:

ஜெயக்குமாரின் தொல்லை தாங்க முடியாமல் போனதால், அவரைத் தீர்த்துக்கட்ட பூஜா முடிவு செய்தார். இதற்காகத் தனது முன்னாள் காதலனான கடப்பேரியைச் சேர்ந்த தேவா என்பவரின் உதவியை நாடினார். இருவரும் சேர்ந்து ஜெயக்குமாரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினர்.

திட்டமிட்டபடி கடந்த 3-ம் தேதி மாலை, சமாதானம் பேசுவதாகக் கூறி ஜெயக்குமாரை பில்ராம்பட்டு சவுக்குத் தோப்புப் பகுதிக்கு வரவழைத்துள்ளனர். அங்கு மறைந்திருந்த பூஜா, தேவா மற்றும் அவர்களது கூட்டாளிகள் ஜெயக்குமாரைச் சூழ்ந்துகொண்டு கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்தனர். பின்னர் அடையாளங்கள் தெரியாமல் இருக்கச் சடலத்தைச் சிதைத்துவிட்டுத் தப்பிச் சென்றனர்.

9 பேர் அதிரடி கைது:

செல்போன் சிக்னல் மற்றும் ரகசியத் தகவல்களின் அடிப்படையில் போலீஸார் தீவிர வேட்டை நடத்தினர். இதில் துணை நடிகை பூஜா, அவரது முன்னாள் காதலன் தேவா, மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த ஐயப்பன், துர்கா, குப்புசாமி, சடையாண்டி, பூங்காவனம், ஹரிகரன், சீனிவாசன் மற்றும் இரண்டு சிறுவர்கள் என மொத்தம் 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது கொலை வழக்கு மற்றும் தடயங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சினிமா வாய்ப்புக்காகச் சென்னைக்கு வந்த இளைஞர், ஒரு துணை நடிகையின் மோகத்தால் உயிரை இழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget