திண்டிவனத்தில் பரபரப்பு... கூட்டு பாலியலில் ஈடுபட்ட 3 பேர் கைது
விழுப்புரம் : திண்டிவனத்தில் 17 வயது பெண்ணை கூட்டு பாலியலில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனத்தில் 17 வயது பெண்ணை கூட்டு பாலியலில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சந்தைமேடு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பெண் ஒருவர் திண்டிவனம் செஞ்சி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கடை ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார். இந்த நிலையில், அந்தக் கடையின் எதிரில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் வீரணாமூர் பகுதி சேர்ந்த சிம்பு என்பவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகின்றார். அதனால் அந்த 17 வயது பெண்ணிற்கும் சிம்புவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிம்பு அந்த பெண்ணை பலமுறை தனியாக அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு அந்தப் பெண்ணை சிம்பு வழக்கம் போல் தனியாக அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவித்து விட்டு அவரது நண்பர்களான பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களான சிவா மற்றும் செல்வம் ஆகியோருக்கு தகவல் கொடுத்து வரவழைத்துள்ளார். இதனால் சிம்பு அழைத்த இடத்திற்கு சிவா மற்றும் செல்வம் ஆகியோர் அங்கு சென்று அந்த 17 வயது இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி கூட்டு பாலியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ரோஷனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கூட்டு பலகாரத்தில் ஈடுபட்ட சிம்பு, சிவா, செல்வம் ஆகியோரை கைது செய்தனர். 17 வயதுடைய இளம்பெண்ணை மூன்று வாலிபர்கள் கட்டாயப்படுத்தி கூட்டு பாலியலில் ஈடுபட்ட சம்பவத்தில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போக்சோ சட்டம் என்றால் என்ன?
போக்சோ சட்டத்தின்படி குழந்தைகளிடம் பாலியல் ரீதியான செய்கைகள் காட்டுவது, தொலைபேசி, அலைபேசியில் ஆபாசமாக பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, திட்டுவது, பாலியல் இச்சைக்கு அழைப்பது, பாலியல் உறவில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம். பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற கடந்த 2012ல் உருவான சட்டமே போக்சோ சட்டம் (Protection of Children from Sexual Offence). சட்டம் இருந்தாலும் கூட இச்சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கின்றன.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்