கொழுக்கட்டை கிடைக்காத விரக்தியில் 14 வயது சிறுமி தற்கொலை! அதிர்ச்சியில் உறைந்த மரக்காணம்
மரக்காணம் அருகே கொழுக்கட்டை செய்து தராத விரக்தியில் சிறுமி தற்கொலை.

விழுப்புரம்: மரக்காணம் அருகே கொழுக்கட்டை செய்து தராத விரக்தியில் சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொழுக்கட்டை செய்து தராத விரக்தியில் சிறுமி தற்கொலை
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி - விஜயலட்சுமி தம்பதி. இவர்களின் மகள் மோகனப்பிரியா வயது 14. இவர் மரக்காணத்தில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் தாய் விஜயலட்சுமியிடம் கொழுக்கட்டை செய்து தரச் சொல்லி கூறியுள்ளார். இதற்கு தாய் விஜயலட்சுமி நாளை மறுநாள் செய்து தருகிறேன் என தெரிவித்துள்ளார். இதனால் தாய்க்கும் மகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் இதில் மனம் உடைந்த மோகனப்பிரியா வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். விஜயலட்சுமி வீட்டிற்கு அவரது அக்கா சென்று பார்த்தபோது மோகனப்பிரியா தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, விஜயலட்சுமி கணவர் முனுசாமிக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து மரக்காணம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்த மரக்காணம் போலீசார் பிரேதத்தை மீட்டு புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை
தற்கொலை மன அழுத்தம், மனப்பித்து இருமுனையப் பிறழ்வு, ஆளுமைச் சிதைவு, குடிப்பழக்கம் குற்றவுணர்வு, இயலாமை, வெட்கம், கடுமையான உடல்வலி, பென்சோடையசிபைன்கள் பயன்பாடு போன்ற பல காரணங்களில் ஒன்றோ அல்லது பல காரணங்களோ ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டலாம் பொருளாதாரச் சிக்கல்கள், அடாவடியாக கொடுமைக்கு ஆளாதல், உறவுகளின் பிரச்சினைகள் போன்ற மன அழுத்தக் காரணங்களும் ஒருவரை தற்கொலைக்குத் துண்டலாம் . தற்கொலை முயற்சியில் ஒருமுறை ஈடுபட்ட ஒருவர் எதிர்காலத்தில் மீண்டும் தற்கொலைக்கு முயற்சி நேற்கோள்ளூம் சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060





















