மேலும் அறிய

அன்பு ஜோதி ஆஸ்ரமத்தை மூட விழுப்புரம் ஆட்சியர் அதிரடி உத்தரவு

உரிமையாளர் ஆசிரமத்திலிருந்தவர்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தி உள்ளார்.

விழுப்புரம்: குண்டலப்புலியூரில் உரிய அனுமதியின்றி செயல்பட்ட அன்பு ஜோதி அறக்கட்டளையை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அறக்கட்டளையில் இருந்தவர்களை பாலியல் ரீதியில் துன்புறுத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் சி. பழனி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூர் கிராமத்தில் இயங்கி வரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும் ஆசிரமத்தில் சேர்க்கப்படுவர்கள் மர்மமான முறையில் இறப்பதாகவும் புகார்கள் வந்தன.

திருப்பூரை சார்ந்த வயதான முதியவர் ஜபருல்லாவை கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவரது மருமகன் சலீம்கான் அமெரிக்காவில் இருந்து கொண்டு தனது நண்பர் ஹாலிதின் என்பவர் மூலம் குண்டலப்புலியூரில் இயங்கி வரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஜபருல்லாவை சேர்த்துவிட்டார். அதன்பின் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய சலீம்கான் தனது மாமாவை பார்க்க சென்றபோது அங்கு இல்லை என்பதாலும், உரிய பதில் அன்பு ஜோதி அறக்கட்டை நிர்வாகியிடம் இருந்து கிடைக்கவில்லை என்பதால் பாதிக்கப்பட்ட சலிம்கான் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தாக்கலின் படி விசாரனை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம் உரிய விசாரனை செய்ய கெடார் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டனர்.

அந்த உத்தரவின் பேரில் போலீசார் கடந்த 10 ஆம் தேதி அன்பு ஜோதி அறக்கட்டளையில் ஆய்வு செய்தபோது 15க்கும் மேற்பட்டோர் அறக்கட்டளையிலிருந்து காணாமல் போய் இருந்ததும் ஆசிரமத்தில் இருந்தவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கபட்டு கொடுமை படுத்தப்பட்டது போலீசார் விசாரனையில் தெரியவந்தது. மேலும் ஆசிரமம் உரிய அனுமதி இல்லாமல் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்ததது தெரியவரவே மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார்  ஆசிரமத்தில் இருந்து 86 பேரை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆசிரமத்தின் உரிமையாளர் ஜீபின் மற்றும் நிர்வாகத்தை சார்ந்த பியூ மோகன், அய்யப்பன், முத்துமாரி, கோபிநாத் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி. பழனி மற்றும் எஸ் பி ஸ்ரீநாதா ஆகியோர் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை நேரில் பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து பேட்டியளித்த ஆட்சியர் சி.பழனி, விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வரும் அறக்கட்டைகள் குறித்து கணக்கெடுத்து உரிமம் இல்லாமல் செயல்படும் அறக்கட்டைகளை மூடவும் அன்பு ஜோதி அறக்கட்டளையை மூட உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அன்பு ஜோதி அறக்கட்டளையில் போலீசார் விசாரனையில் அதன் உரிமையாளர் ஆசிரமத்திலிருந்தவர்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தி உள்ளதும் அடிப்படை வசதிகள் இல்லாமல் கொடுமை படுத்தியதும் தெரியவந்துள்ளதால் சட்டபடி நேர்மையான முறையில் தீவிர விசாரனை செய்து நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Embed widget