மேலும் அறிய
Advertisement
‘இந்த பைக் பூட்டை ஒடைக்க ஈஸியா இருக்கும் சார்’ - பிரபல டூ வீலர் திருடன் சிக்கியது எப்படி?
திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கைது, மேலும் அவனிடமிருந்து 10 பைக்குகள் பறிமுதல்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இருசக்கர வாகன தொடர் திருட்டில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டு அவனிடமிருந்து 10 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பிரபல ஸ்ப்ளெண்டர் பைக் திருடன் கைது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தை குறிவைத்து அதிக அளவில் திருட்டு சம்பவம் அரங்கேறி வந்தது. இந்த நிலையில் திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார காவல் நிலையங்களில் இரு சக்கர வாகன திருட்டு தொடர்பான புகார்கள் குவிந்து வந்தன. இதனை கையில் எடுத்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் திண்டிவனம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் மயிலம் உதவி காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை நீண்ட நாட்களாக இருசக்கர வாகன திருடனை தேடிவந்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் திண்டிவனம் அருகே உள்ள கூட்டேரிப்பட்டு - தீவனூர் கூட்டு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த ஒரு நபரை போலீசார் நிறுத்த முயன்றனர். அப்பொழுது அவன் போலீசாரை இடிப்பது போல் வேகமாக வந்து தப்பிச் சென்றான்.
உடனடியாக போலீசர் அவணை இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர். அப்பொழுது அவன் போலீசாரிடம் இருந்து தப்பித்து ஓட முயன்றான். போலீசார் அவனை லாக் செய்து பிடித்தனர். பின்னர் அவனை காவல் நிலையம் அழைத்து வந்து போலீஸ் அவனிடம் விசாரணை மேற்கொண்டனர்..
புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கைவரிசை
போலீசார் விசாரணையில் அவன் திண்டிவனம் ரோசனை பாட்டை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பது தெரியவந்தது. இவன் திண்டிவனம், மயிலம், ரோசனை, ஆரோவில், பிரம்மதேசம், மரக்காணம் மற்றும் புதுவை மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இரு சக்கர வாகனங்களை திருடி அதை பலருக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
ஸ்ப்ளெண்டர் பைக் பூட்டை உடைப்பதற்கு ஈசியாக இருக்கும்
குறிப்பாக அவன் இரவு மட்டும் மாலை நேரங்களில் மட்டுமே வாகனங்களை திருடுவதாகவும் ஸ்ப்ளெண்டர் பைக் மட்டுமே திருடி வருவதாகவும் தெரிவித்தான். ஏனென்றால் ஸ்ப்ளெண்டர் பைக் பூட்டை உடைப்பதற்கு ஈசியாக இருக்கும் உடனடியாக ஒயரை கட் செய்து ஜாயின் பண்ணினால் பைக்கை ஓட்டிக்கொண்டு செல்லலாம் என திருடன் தெரிவித்துள்ளான். இதனை அடுத்து போலீசார் அவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இருந்து 10 ஸ்ப்ளெண்டர் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் இதுகுறித்து போலீசார் கூறுகையில், வீடுகள் மற்றும் முக்கிய இடங்களில் முன்பாக சிசிடிவி கேமராக்களை அமைக்க வேண்டும் எனவும் வாகனம் நிறுத்தும் போது பாதுகாப்பான இடத்தில் நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்து மேலும் வாகனத்தில் முடிந்த அளவு ஜிபிஎஸ் கருவியை பொருத்தினால் உடனடியாக வாகனம் எங்கு இருக்கிறது என்பதை அறியலாம். இதுபோன்று கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion