விழுப்புரம்: அசுரன் படம்போல துயர சம்பவம்! காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி பலியான 3 பேர்!
விழுப்புரம்: திண்டிவனம் அருகே ராஜாம்பாளையம் கிராமத்தில் மின் வேலியில் சிக்கி 3 பேர் பலி
அசுரன் படத்தில் காட்டுப்பன்றிக்கு வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி தனுஷுன் நாய் உயிரிழக்கும். மின்வேலியின் கொடூரத்தை விளக்கும் காட்சியாக அது இருக்கும். ஆனால் நிஜத்தில் மின்வேலியில் சிக்கி 3 பேர் உயிரிழந்த துயர சம்பவம் விழுப்புரத்தில் அரங்கேறியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மின் வேலியில் சிக்கி 3 பேர் பலி, போலீசார் விசாரணை. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த ஏந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சடகோபன், இவருக்கு ராஜாம்பாளையம் கிராமத்தில் உள்ள நிலத்தில் வாழை தோப்பு மற்றும் மணிலா வைத்துள்ளார். இதில் காட்டு பன்றிகள் சேதப்படுத்துவதால் வாழைதோப்பை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார், இந்த வாழைதோப்பிற்கு வன்னிப்பேர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் காவலாளியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக வன்னிப்போர் கிராமத்தை சேர்ந்த முருகதாஸ் (வயது 40), வெங்கடேசன் (வயது 45), சுப்ரமணி (வயது 38) ஆகிய மூவரும் சென்றதாக கூறப்படுகிறது. அப்பொழுது எதிர்பாராத விதமாக சடகோபன் என்பவருக்கு சொந்தமான வாழை தோப்பில் காட்டு பன்றிக்காக வைத்த மின்சார வேலியில் சிக்கி மூவரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பிரம்மதேசம் போலீசார் 3 பேரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள மின் வேலியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காட்டுப்பன்றி ஒன்று சிக்கி இறந்துள்ளது. இந்த நிலையில் தான் வன்னிப்பேர் கிராமத்தைச் சேர்ந்த மூன்று விவசாயிகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் மின்சார வேலி அமைத்த இடத்தில் எவ்வித எச்சரிக்கை பலகையும் மற்றும் எந்த ஒரு ஒளி வெளிச்சமும் இல்லாததினால் இது போன்ற அசம்பாவிதங்கள் அரங்கேறி வருகின்றன.
குறிப்பாக விவசாய நிலங்களில் விலங்குகள் அட்டகாசம் செய்வதனால் மின் வேலி அமைக்கும் விவசாயிகள் அதனை எவ்வாறு கவனிக்க வேண்டும் என்பதனை மறந்து விடுகின்றனர், இதனால் உயிர் சேதாரங்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் சட்டதிற்கு புறம்பாக மின்வேலி அமைத்தவர் மீது நடைவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், மின்சார வேலியில் சிக்கி ஒரே கிராமத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Kallakurichi Issue : ”புள்ளைய கண்ணுல காட்டுங்க” கள்ளக்குறிச்சியில் கைதானவர்களின் பெற்றோர் கதறல்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்