மேலும் அறிய

திருமணத்திற்கு முன்பே காதல்! காதலனோடு சேர்ந்து கணவருக்கு ஸ்கெட்ச் போட்ட மனைவி!

மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில், தனது கணவரை வேண்டுமென்றே ஒரு கார் மோதி கொலை செய்ய முயன்றதாக ஒரு பெண்ணும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில், தனது கணவரை வேண்டுமென்றே ஒரு கார் மோதி கொலை செய்ய முயன்றதாக ஒரு பெண்ணும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர். மாருதி சுசுகி பிரெஸ்ஸா எஸ்யூவியால் அனில் பால் என்ற அந்த நபர் கிட்டத்தட்ட 50 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டார், இதனால் பலத்த காயம் ஏற்பட்டது.

ஆரம்பத்தில் ஒரு விபத்து வழக்காகத் தோன்றிய இந்த சம்பவம், சிசிடிவி காட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் வெளிவந்த பிறகு வியத்தகு திருப்பத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் மார்ச் 21 அன்று குவாலியர் நகரில் உள்ள ஜான்சி சாலை காவல் நிலைய எல்லைக்குள் நடந்தது.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அனில், தனது மனைவி ரஜினி பால் மற்றும் அவரது காதலர் மங்கள் சிங் குஷ்வா மீது புகார் அளித்ததை அடுத்து, இந்த வழக்கு புதிய திசையில் திரும்பியது. இருவரும் தன்னைக் கொல்ல சதி செய்ததாகக் கூறினார்.

தனது வீட்டிலேயே ஒரு எழுதுபொருள் கடை நடத்தி வரும் அனில் பால், 2016 இல் ரஜினி பாலை மணந்தார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

ரஜினி அடிக்கடி தனது தாய் வீட்டிற்கு செல்லத் தொடங்கியுள்ளார். ஆனால் கணவன் மனைவி சண்டையால் அடிக்கடி தாய் வீட்டிற்கு செல்வதாக தோன்றியது. ஆனால் ரஜினிக்கு ஏற்கெனவே ஒரு காதல் இருந்துள்ளது. தாய் வீட்டிற்கு அருகில் உள்ள மங்கள் சிங் குஷ்வா என்பவரை ரஜினி நீண்டகாலமாக காதலித்து வந்துள்ளார்.

இது கணவருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து கடந்த மார்ச் 20ஆம் தேதி ரஜினி வயிற்று வலி இருப்பதாகக் கூறி விட்டை விட்டு வெளியேறி சிகிச்சைக்கு செல்வதாக கூறியுள்ளனர். மாலை 6 மணி வரை அவர் வீடு திரும்பாததால் அணில் அவரைத் தேடி சென்றுள்ளார். அப்போது ஒரு நீல நிற பிரெஸ்ஸா காரில் இருந்து அவர் இறங்குவதை கண்டார்.

இதைப்பார்த்த அவர் ஆத்திரமடைந்தார். ஆனால் அவர்கள் இருவரும் வேண்டுமென்றே அவரை மோதி சாலையில் இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். படுகாயடமைந்தவரை மீட்ட அங்கிருந்தவர்கள் ஆபத்தான நிலையில் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவர் சிகிச்சைப்பெற்று குணமடைந்த பிறகு போலீசாரிடம் நடந்ததை விவரித்துள்ளார். இதையடுத்து சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

ஒரு மாத கால தேடுதலுக்குப் பிறகு, குவாலியர் போலீசார் ரஜினி மற்றும் மங்கள் சிங் குஷ்வா ஆகிய இருவரையும் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!

விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!

TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!

ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!

Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!

Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

ரூ. 3.50 லட்சம் மானியம்.. 6 % வட்டி மானியம்.! அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கெல்லாம்.? விண்ணப்பிப்பது எப்படி.?

Embed widget