watch video: 'நான் தான் போலீஸ், மாமூல் கொடு’ .... டிப்டாப் ஆசாமியின் மிரட்டல் வீடியோ..!
ஆரணி அருகே போலீசார் எனக்கூறி மது அருந்தும் நபர்களிடம் டிப்டாப் ஆசாமி மாமூல் கேட்டு மிரட்டும் வீடியோ. டிப்டாப் ஆசாமி கைது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வெட்டியாந்தொழுவம் பகுதியில் உள்ள மலை குன்று மற்றும் காப்புகாட்டில் கடந்த சில தினங்களாக கள்ளசாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தனர். மேலும் இந்த இடம் போதை ஆசாமிகள் மது குடிக்கும் கூடாராக மாறி வருகின்றது. இதனைக்குறித்து பல்வேறு ஊடகங்களில், செய்திகள் வெளியாகி இருந்தது. இதனையடுத்து கள்ளசாராயாம் விற்பனை செய்வதாககூறி 2 நபர்களை ஆரணி தாலுக்கா காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் ஆரணி அருகே அடையபுலம் ஊராட்சிக்குபட்ட என்.கே.தாங்கல் கிராமத்தை சேர்ந்த விஸ்வநாதன் வயது (25) இவர் தன்னுடைய நண்பர்களுடன் வெட்டியாந் தொழுவம் காப்பு காட்டில் மது அருந்து கொண்டிருந்தார். அப்போது அந்த இடத்தில் திடீரென ஒரு டிப்டாப் ஆசாமி ஒருவர் மது அருந்தும் நபர்களிடம் மிரட்டி மாமூல் கேட்டதாக கூறப்படுகிறது.
ஆரணி அருகே போலீசார் எனக்கூறி மது அருந்தும் நபர்களிடம் டிப்டாப் ஆசாமி மாமூல் கேட்டு மிரட்டும் வீடியோ வெளியானதை அடுத்து போலீசாரிடம் வசமாக சிக்கிய டிப்டாப் ஆசாமி @SRajaJourno@abpnadu @TVMalaiPolice #thiruvannamalai #abpnadu pic.twitter.com/jTqxQqjj8H
— Vinoth (@Vinoth05503970) August 8, 2022
அப்போது மது குடித்து இருந்த நபர்கள் நீங்கள் யார் என்று கேட்டுள்ளனர். அப்போது அந்த டிப்டாப் ஆசாமி நான் காவல்துறை என்று கூறியுள்ளார். மேலும் அங்கு விஸ்வநாதன் என்பவர் மது அருந்தி உள்ளார். அப்போது அந்த டிப்டாப் ஆசாமி விஸ்வநாதன் வைத்திருந்த சுமார் 5 ஆயிரம் ரூபாய் பணத்தை பிடுங்கி கொண்டு நீ காவல்நிலையத்திற்கு வந்து இது உன்னுடைய பணம்தானா என உறுதி படுத்தி விட்டு பெற்று கொள்ளுமாறு மிரட்டி பணத்தை எடுத்து கொண்ட அந்த டிப்டாப் ஆசாமி அங்கிருந்து சென்று விட்டார். இதனையடுத்து, பணத்தை பறிக்கொடுத்த விஸ்வநாதன் ஆரணி தாலுக்கா காவல்நிலையத்திற்கு சென்று தன்னுடைய பணத்தை கொடுங்கள் என்று கூறியுள்ளார். அப்போது அங்கு இருந்த காவலர்கள் எந்த பணம் யார் பெற்று வந்தார் என கேட்டுள்ளனர். அப்போது விஸ்வநாதன் நடந்தவற்றை பற்றி கூறியுள்ளார். இதனைக் கேட்ட காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், விஸ்வநாதன் அங்கு மது அருந்தும் நபர்களை மிரட்டும் ஆசாமியை அங்கிருந்த நபர்கள் வீடியோ எடுத்துள்ளனர். உடனடியாக காவல்துறையினர் வீடியோவை கொண்டு விசாரணை மேற்கொண்ட போது அந்த டிப்டாப் ஆசாமி காவல்துறையினரிடம் வசமாக சிக்கினார். பின்னர் அந்த டிப்டாப் ஆசாமியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அந்த ஆசாமி ஆரணி அருகே பையூர் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த ஓட்டுநர் பெருமாள் வயது (40) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து பெருமாளை காவல்துறையினர் கைது செய்து ஆரணி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்