மேலும் அறிய

Pocso : தென்காசியில் 2-ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை.. விசிக கவுன்சிலர் போக்சோவில் கைது

பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமியிடம் திண்பண்டம் வாங்கி தருவதாக கூறி, தனியே அழைத்துச்சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தாக விசிக கவுன்சிலர் கைது

தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை பகுதியை சேர்ந்தவர் ராஜா - லதா தம்பதியினர் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) இவர்களின் மகள் குணராமநல்லூர் அரசு பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் சிறுமி பள்ளிக்கு சென்று  வீடு திரும்பி உள்ளார், அப்போது அதே பகுதியை சேர்ந்த வீராசாமி என்பவர் 2-ஆம் வகுப்பு சிறுமியிடம் திண்பண்டம் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை தனியே அழைத்து சென்று உள்ளார், அப்போது தனியாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று சிறுமியிடம் தவறுதலாக நடந்துள்ளதாக தெரிகிறது,.

Pocso : தென்காசியில் 2-ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை.. விசிக கவுன்சிலர் போக்சோவில் கைது

பின்னர்  அச்சிறுமியிடம்  இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தால்  உன்னை  கொன்று விடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமிக்கு அதிகமான வயிறு வலி ஏற்பட்டு உள்ளது, உடனடியாக சிறுமியின் பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர், அப்போது மருத்துவர்கள் பரிசோதித்ததில் சிறுமி பாலியல் துண்புறுத்தலுக்கு உள்ளானது தெரியவந்துள்ளது,

Pocso : தென்காசியில் 2-ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை.. விசிக கவுன்சிலர் போக்சோவில் கைதுPocso : தென்காசியில் 2-ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை.. விசிக கவுன்சிலர் போக்சோவில் கைது

அதன்பின்னர் சிறுமியிடம் பெற்றோர் மற்றும் மருத்துவர்கள் விசாரித்து உள்ளனர், அப்போது சிறுமி தின்பண்டம் வாங்கி தருவதாக ஒருவர் அழைத்து சென்று பின்னர் மிரட்டி அனுப்பியதாக நடந்த உண்மையை கூறியதாக தெரிகிறது,  இதனையறிந்த பெற்றோர் உடனடியாக குற்றாலம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்து உள்ளனர். புகார் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வீராச்சாமி என்பவர் சிறுமியிடம் இக்குற்ற செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையின் அடிப்படையில் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட வீராச்சாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட வீராச்சாமி என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாக இருப்பதோடு மட்டுமின்றி குணராமநல்லூர் பஞ்சாயத்தில் 15-ஆவது வார்டு உறுப்பினர் என்பதும் தெரிய வந்துள்ளது,

Pocso : தென்காசியில் 2-ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை.. விசிக கவுன்சிலர் போக்சோவில் கைது

ஒரு கட்சியின் முக்கிய பொறுப்பிலும், ஒரு வார்டு உறுப்பினராகவும் இருந்து கொண்டு, 7 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - watch video | மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தபோதே உயிரிழந்த பரதநாட்டிய கலைஞர்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது" ஆளுநர் ரவி பேச்சு
Australian Open Women: அரையிறுதிக்குள் நுழைந்த சபலென்கா, படோஸா
ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் சபலென்கா, படோஸா
“மாட்டுக்கறி சாப்பிடலாம்; ஆனால் கோமியம்....” - காமகோடிக்கு ஆதரவாக களமிறங்கிய தமிழிசை 
“மாட்டுக்கறி சாப்பிடலாம்; ஆனால் கோமியம்....” - காமகோடிக்கு ஆதரவாக களமிறங்கிய தமிழிசை 
Ranji Trophy: ரஞ்சிக் கோப்பையில் களமிறங்கும் இந்திய நட்சத்திர வீரர்கள் யார் யார் தெரியுமா.?
ரஞ்சிக் கோப்பையில் களமிறங்கும் இந்திய நட்சத்திர வீரர்கள் யார் யார் தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vivek Ramaswamy DOGE Resign : பதவியேற்ற TRUMP..BYE சொன்ன விவேக்! திடீர் TWISTJagabar Ali Murder : ’’அநியாயம் பண்றாங்க’’அதிமுக நிர்வாகி படுகொலைஇறக்கும் முன் கடைசி வீடியோKomiyam Drinking Fact Check | கோமியம் குடிச்சா நல்லதா?IIT காமகோடி Vs மனோ தங்கராஜ் உண்மை நிலை என்ன?Appavu walk out : ஆளுநர் ரவி சர்ச்சை அப்பாவு வெளிநடப்பு !பீகார் சபாநாயகர்கள் மாநாடு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது" ஆளுநர் ரவி பேச்சு
Australian Open Women: அரையிறுதிக்குள் நுழைந்த சபலென்கா, படோஸா
ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் சபலென்கா, படோஸா
“மாட்டுக்கறி சாப்பிடலாம்; ஆனால் கோமியம்....” - காமகோடிக்கு ஆதரவாக களமிறங்கிய தமிழிசை 
“மாட்டுக்கறி சாப்பிடலாம்; ஆனால் கோமியம்....” - காமகோடிக்கு ஆதரவாக களமிறங்கிய தமிழிசை 
Ranji Trophy: ரஞ்சிக் கோப்பையில் களமிறங்கும் இந்திய நட்சத்திர வீரர்கள் யார் யார் தெரியுமா.?
ரஞ்சிக் கோப்பையில் களமிறங்கும் இந்திய நட்சத்திர வீரர்கள் யார் யார் தெரியுமா.?
TNTET Exam: எப்போதுதான் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு? ஏங்கி நிற்கும் தேர்வர்கள்! டிஆர்பி செவிசாய்க்குமா?
TNTET Exam: எப்போதுதான் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு? ஏங்கி நிற்கும் தேர்வர்கள்! டிஆர்பி செவிசாய்க்குமா?
6 நாட்களுக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நடிகர் சைஃப் அலிகான்! - மருத்துவர்கள் போட்ட கண்டிஷன்!
6 நாட்களுக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நடிகர் சைஃப் அலிகான்! - மருத்துவர்கள் போட்ட கண்டிஷன்!
மாமிசத்திற்கும் கழிவுக்கும் வித்தியாசம் தெரியலையா? தமிழிசைக்கு செல்வப்பெருந்தகை பதிலடி!
மாமிசத்திற்கும் கழிவுக்கும் வித்தியாசம் தெரியலையா? தமிழிசைக்கு செல்வப்பெருந்தகை பதிலடி!
Donald Trump; WHO-க்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; அமெரிக்கா விலகுவதால் பெரும் இழப்பு...
WHO-க்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; அமெரிக்கா விலகுவதால் பெரும் இழப்பு...
Embed widget