Crime : திருமணம் முடிந்து ஆட்டம் பாட்டம்.. மாப்பிள்ளைதான் குழந்தைக்கு அப்பா...போட்டுடைத்த பெண்.. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்..
திருமணத்தின்போது, இவர்தான் என குழந்தைக்கு அப்பா என கூறிய வேறு பெண்.. தம்பிக்கு மணமுடித்து வைக்கப்பட்ட மணப்பெண்
உத்தர பிரதேச மாநிலத்தில், ஒரு திருமண நிகழ்வானது காலையில் கொண்டாட்டத்துடனும், மதியம் மோதல் போக்குடனும், மாலையில் சமாதானத்துடனும்.. திரைக்காட்சியை மிஞ்சும் அளவிலான பல ட்விஸ்ட்டான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
கொண்டாட்டத்துடன் திருமணம்:
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தைச் சேர்ந்தவருக்கும், அருகில் உள்ள பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும், இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதையடுத்து இருவருக்கும், இரண்டு தினங்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. திருமணம் நடந்த முடிந்தவுடன், இருவீட்டார் தரப்பினரும் மகிழ்ச்சியில் ஆடலும் பாடலுமாக இருந்தனர்.
”மாப்பிள்ளைதான் என் குழந்தைக்கு அப்பா”:
அப்போது, திடீரென மேடைக்கு ஒரு பெண் வந்தார். அங்கிருந்த மைக்கை எடுத்து, என் கையில் உள்ள குழந்தைக்கு, இங்கு மணமேடையில் மாப்பிள்ளையாக இருப்பவர்தான் தந்தை என கூறினார். இதை கேட்டவுடன் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். மேலும், அங்கிருந்த மணப்பெண்ணுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டாரிடம் சண்டை போட ஆரம்பித்துவிட்டனர். அதன்பிறகுதான் உண்மை அனைவருக்கும் தெரிய வந்தது. அங்கு மாப்பிள்ளையாக இருந்தவருக்கு, ஏற்கனவே அந்த பெண்ணுடன், 5 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் நடந்தது என்றும் இருவருக்கும் மனம் ஒத்து வராததால் பிரிந்து வாழ்ந்து வருவதும் தெரிய வந்தது.
புகார்.
இதையடுத்து, ஆவேசமடைந்த பெண் வீட்டார், நேரடியாக காவல் நிலையத்துக்கு சென்று புகாரளித்தனர். பிரச்னை காவல்துறையினர் வசம் சென்றதையடுத்து தீவிரமடைந்தது. இந்த திருமணத்தை ரத்து செய்யுமாறு, பெண் வீட்டார் தரப்பில் கோரிக்கை விடுத்ததையடுத்து, திருமணத்தை ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மாப்பிள்ளையாக மாறிய தம்பி
இரு தரப்பினருக்கும் மோதல் போக்கு நீடித்து கொண்டிருக்கையில், திடீரென மோதல் மாறியது. இருவீட்டாரும் மாப்பிள்ளையாக இருந்த அண்ணனின் தம்பிக்கு மண பெண்ணை, திருமணம் செய்து முடிக்க ஒப்புக்கொண்டனர்.
இதற்கு மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் சம்மதம் தெரிவிக்க இருவருக்கும் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட்
இந்நிலையில், காலையில் அண்ணனுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு, அத்திருமணம் நடத்தப்பட்டு, இதனால் இரு வீட்டாரிடையே மோதல் ஏற்பட்டு காவல் நிலையம் வரை சென்றனர்.
ஆனால் மாலையில், அதே பெண்ணுடன், தம்பிக்கு திருமணம் முடித்து வைக்கப்பட்டு, இருவீட்டாரிடையே இருந்த மோதல் நீங்கி உறவுக்காரராக திரும்பி வந்ததனர், ஒரே நாளில் ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட்டாக நடந்ததை பார்த்த அப்பகுதி மக்கள், பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.