கரூர்: டாஸ்மாக் பாரில் கூலி தொழிலாளியை தாக்கிய 2 கல்லூரி மாணவர்கள் கைது
தான்தோன்றிமலை டாஸ்மாக் பாரில், முன்விரோதத்தில் கூலி தொழிலாளியை, பீர் பாட்டிலால் தாக்கிய இரண்டு கல்லூரி மாணவர்கள் கைது. தப்பி ஓடிய இரண்டு பேருக்கு வலைவீச்சு.
கரூர் தான்தோன்றிமலை டாஸ்மாக் பாரில், முன் விரோதம் காரணமாக நடந்த தகராறில் கூலித்தொழியாழியை பீர் பாட்டிலால் தாக்கிய, கல்லூரி மாணவர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தப்பி ஓடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் தாந்தோணி மலையை சேர்ந்தவர் யோகராஜ் 33. இவர் கூலி தொழிலாளி. கரூர் சுங்கேட் பகுதியை சேர்ந்த முகமது அன்சாரி 19 என்பவருக்கும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தாந்தோன்றி மலை டாஸ்மாக் கடை முன்பு தகராறு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு, யோகராஜ் தாந்தோணிமலை டாஸ்மாக் பாரில் அமர்ந்தபடி குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முகமது அன்சாரி, யோகராஜ் பார்த்ததும் தனது நண்பர்களான சஞ்சய் 19 மற்றும் தினேஷ், அஜித் ஆகிய மூவருக்கும் தகவல் கொடுத்து பாருக்கு வரவழைத்துள்ளார். அப்போது நான்கு பேர்களும் சேர்ந்து யோகராஜிடம் தகராரில் ஈடுபட்டனர். இதில் நண்பர்கள் நான்கு பேர்களும் சேர்ந்து, பீர் பாட்டிலால் யோகராஜை தாக்கினார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த யோகராஜ், கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் அளித்த புகாரின் பேரில் தாந்தோன்றி மழை போலீசார், முகமது அன்சாரி, சஞ்சய் ஆகிய இருவரையும் கைது செய்து, தப்பி ஓடிய தினேஷ் மற்றும் அஜித் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். இவர்களில் கைது செய்யப்பட்ட முகமது அன்சாரித் கோவையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டும், சஞ்சய் கோவையில் உள்ள கலைக் கல்லூரில் முதலாம் ஆண்டும் பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கரூர் - குளித்தலையில் பணம் வைத்து சூதாடிய 12 கைது. ரூ.11 ஆயிரம் பறிமுதல்.
கரூர் குளித்தலையில் பணம் வைத்து சூதாடிய 12 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடமிருந்து 11 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன. ஏழு பேர் கைது. கரூர் பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட, அமராவதி ஆற்று பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக, போலீசருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பெயரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் அமராவதி ஆற்றங்கரை ஒட்டிய பகுதிகளில், தீவிர சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அப்பகுதியில் பெண்கள் பள்ளி பின்புறம் உள்ள, காட்டுப் பகுதியில் சூதாடி கொண்டிருந்த, ஆட்டோ டிரைவர் ரவிக்குமார் வயது 46, மகாலிங்கம் வயது 58, விஸ்வநாதன் வயது 75, முருகன் வயது 53, ராஜேந்திரன் வயது 63, சக்திவேல் வயது 46, ஆறுமுகம் வயது 52 ஆகிய ஏழு பேரும் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். இதை அடுத்து ஏழு பேரையும் சுற்றி வளைத்து, போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து மொத்தம் 10 ஆயிரத்து 900 மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
குளித்தலை அருகே உள்ள கண்டியூர் பகுதியில், பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பெயரில் போலீசார் அங்கு சென்றபோது, அந்த பகுதியில் பணம் வைத்து சீட்டு கட்டுகள் விளையாடிக் கொண்டிருந்த, கண்டியூர் பகுதியைச் சேர்ந்த வடிவேல் வயது 40, திருப்பதி வயது 40 மற்றும் பூபதி வயது 53 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரொக்கம் ரூ. 200 மற்றும் சீட்டு கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கரூர், குளித்தலை பகுதிகளில் மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ஒரு 11 ஆயிரத்து 100 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.