மேலும் அறிய

திருச்சி: நள்ளிரவில் துணிகரம் - கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை

திருச்சி மாவட்டத்தில், கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு , கடந்த 9 மாத உண்டியல் வருமானம் சுமார் ரூ.40 ஆயிரத்திற்கும் மேல் இருக்கலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உப்பிலியபுரத்தில் இருந்து தம்மம் பட்டி செல்லும் பிரதான சாலையில் நாகநல்லூருக்கும், தளுகைக்கும் இடையே அமைந்துள்ளது கொங்கு செட்டிக்காடு மாரியம்மன் கோவில். இந்த கோவிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிக அளவிலான பக்தர்கள் வந்து தீபமேற்றி வழிபாடு செய்வது வழக்கம்.  வெள்ளிக்கிழமை பூஜைகளை முடித்த பின்னர் பூசாரி ராஜேந்திரன், கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை வேளையில் கோவில் திறந்து கிடந்தது கண்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுபற்றி அவர்கள் கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், செபாஸ்டின் சந்தியாகு, பிரபாகர் ஆகியோர் போலீசாருடன் சென்று விசாரணை மேற் கொண்டனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் நள்ளிரவில், பிரதான சாலையில் ஆள்நடமாட்டமில்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கோவில் கேட் மற்றும் இரு கதவுகளின் பூட்டை உடைத்துள்ளனர்.
 
திருச்சி: நள்ளிரவில் துணிகரம் - கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை
 
இதனை தொடர்ந்து  உள்ளே புகுந்த அவர்கள் உண்டியலையும் உடைத்து, அதிலிருந்த ரொக் கப்பணம் மற்றும் காணிக்கைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. வருடத்திற்கு ஒருமுறை இக்கோவில் உண்டியல் திறக்கப்படுவது வழக்கம் என தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கோவில் திறக்கப்பட்டு, உண்டியல் காணிக்கைகள் எடுக்கப்பட்டதன் பேரில் மீண்டும் உண்டியல் பூட்டப்பட்டது. கடந்த 9 மாத உண்டியல் வருமானம் சுமார் ரூ.40 ஆயிரத்திற்கும் மேல் இருக்கலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித் துள்ளனர். கோவில் நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோவில் பூட்டுகள் உடைக்கப்பட்டு, திருடு போனது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

தலைப்பு செய்திகள்

ஆட்சியர் அலுவலகமா? தவெக கட்சி அலுவலகமா? மயிலாடுதுறையில் விஜய் பிறந்தநாளில் வெடித்த பரபரப்பு!
ஆட்சியர் அலுவலகமா? தவெக கட்சி அலுவலகமா? மயிலாடுதுறையில் விஜய் பிறந்தநாளில் வெடித்த பரபரப்பு!
"எல்லாம் காதலுக்காக.." எம்.எல்.ஏ-விடமே சினிமா பாணியில் கைவரிசை காட்டிய மேலாளர்: கிடுக்கிப்பிடி விசாரணையில் உடைந்த மயக்க நாடகம்!
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: அடம்பிடிக்கும் துரைமுருகன்.. அப்செட்டில் மு.க.ஸ்டாலின்! திமுக-வில் நடப்பது என்ன?
DMK: அடம்பிடிக்கும் துரைமுருகன்.. அப்செட்டில் மு.க.ஸ்டாலின்! திமுக-வில் நடப்பது என்ன?
நாளை முதல் 11, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி? தேர்வு அட்டவணை!
நாளை முதல் 11, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி? தேர்வு அட்டவணை!
ஒரே சார்ஜில் 100 கி.மீட்டர் முதல் 170 கி.மீட்டர் மைலேஜ்! Pure EV இ ஸ்கூட்டர்கள், இ பைக் லிஸ்ட் இதான்
ஒரே சார்ஜில் 100 கி.மீட்டர் முதல் 170 கி.மீட்டர் மைலேஜ்! Pure EV இ ஸ்கூட்டர்கள், இ பைக் லிஸ்ட் இதான்
Netanyahu Vs Trump: “அவர் சொன்ன பேச்ச நான் கேப்பேனா.?“ ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நெதன்யாகு.! என்ன சொன்னார்னு பாருங்க
“அவர் சொன்ன பேச்ச நான் கேப்பேனா.?“ ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நெதன்யாகு.! என்ன சொன்னார்னு பாருங்க
நீட் பயிற்சி மையங்கள் வருவாய் ரூ.1.34 லட்சம் கோடி? தமிழ்நாடு கரப்பான்பூச்சி ஜனதா தலைவர் பகீர்
நீட் பயிற்சி மையங்கள் வருவாய் ரூ.1.34 லட்சம் கோடி? தமிழ்நாடு கரப்பான்பூச்சி ஜனதா தலைவர் பகீர்
US Iran Deal: அப்பாடா.! சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தையில் ஓகே ஆன டீல்; ட்ரம்ப் குட்டையை குழப்பியும் சக்சஸ்.!
அப்பாடா.! சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தையில் ஓகே ஆன டீல்; ட்ரம்ப் குட்டையை குழப்பியும் சக்சஸ்.!
சிங்கிள்சார்ஜ்தான் 117 கி.மீட்டர் மைலேஜ்! ஜாலியா போறதுக்கு Lectrix Nduro இஸ்கூட்டர் - விலை எப்படி?
சிங்கிள்சார்ஜ்தான் 117 கி.மீட்டர் மைலேஜ்! ஜாலியா போறதுக்கு Lectrix Nduro இஸ்கூட்டர் - விலை எப்படி?
‘அண்ணன் ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டுக்கே பவர் போய்டுச்சு’ - சட்டப்பேரவையில் சம்பவம் செய்த உதயநிதியின் மாஸ் ஸ்பீச்
‘அண்ணன் ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டுக்கே பவர் போய்டுச்சு’ - சட்டப்பேரவையில் சம்பவம் செய்த உதயநிதியின் மாஸ் ஸ்பீச்
Embed widget