மேலும் அறிய

'நம்மகிட்ட நல்லா பழகுறாரே..' ஏமாந்த வாலிபர் - ரூ.1 லட்சம் மோசடி செய்தவர் கைது

தெளபிக்கிடம், ஜெத்ரோ நான் போலீசில் பணியாற்றுகிறேன் என்று தெரிவித்துள்ளார். நம்மகிட்ட நல்லா பழகுறாரே. போலீசாக இருந்தாலும் நல்ல நண்பராக இருக்காரே என்று தௌபிக் நினைத்துள்ளார். 

திருச்சி: நான் போலீஸ் என்று கூறி ஏலத்தில் விடப்படும் வாகனங்களை குறைந்த விலையில் வாங்கி தருவதாக கூறி  ரூ.1 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் திருச்சி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,

திருச்சி வரகனேரி பகுதியைச் சேர்ந்தவர் தெளபிக். இவர், அரசு மருத்துவமனை எதிரே உள்ள ஒரு டீக்கடையில் பணியாற்றி வருகிறார். இந்த கடைக்கு அடிக்கடி டீ குடிக்க ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜெத்ரோ (எ) ஷியாம் (24) வந்துள்ளார். அப்போது தெளபிக்குக்கும், ஜெத்ரோவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் நண்பர்களாகி உள்ளனர்.

அப்போது தெளபிக்கிடம், ஜெத்ரோ நான் போலீசில் பணியாற்றுகிறேன் என்று தெரிவித்துள்ளார். நம்மகிட்ட நல்லா பழகுறாரே. போலீசாக இருந்தாலும் நல்ல நண்பராக இருக்காரே என்று தௌபிக் நினைத்துள்ளார். 

இந்நிலையில் போலீசார் ஏலம் விடும் வாகனங்களைக் குறைந்த விலைக்கு ஏலம் எடுத்துத் தருகிறேன். அதை நீங்கள் கூடுதல் விலைக்கு விற்கலாம் என்று ஜெத்ரோ, தெளபிக்கிடம் தெரிவித்துள்ளார். இதுவும் நல்ல ஐடியாவாக இருக்கே என்று நனைத்த தௌபிக் ரூ. 1 லட்சம் வரை ஜெத்ரோவிடம் வாங்கியுள்ளார்.

ஆனால் கூறியபடி வாகனங்களை குறைந்த விலைக்கு ஏலம் எடுத்துத் தராமல் இருந்துள்ளார் ஜெத்ரோ. இதனால் தௌபிக் பலமுறை இதுகுறித்து கேட்டுள்ளார். ஆனால் ஜெத்ரோ என்னனவோ கதைகள் கூறி வந்துள்ளார். இதனால் வெறுத்து போன தௌபிக் வாகனத்தை ஏலத்தில் எடுத்து தரவேண்டாம். எனது  பணத்தைத் திருப்பி தாருங்கள் என்று கேட்டுள்ளார். ஆனால் பணத்தையும் தராமலும் ஏமாற்றி வந்துள்ளார் ஜெத்ரோ.

இப்படி மாதக்கணக்கில் சென்றதால் இதுகுறித்து தெளபிக் அரசு மருத்துவமனை போலீசில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில்  போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஜெத்ரோ திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகே  ஜே.ஜே நகர்ப் பகுதியில் இருப்பதாகத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடன் அந்த பகுதிக்கு விரைந்து சென்ற போலீஸார் ஜெத்ரோவை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் போலீசில் பணியாற்றுகிறேன் எனக் கூறி ஏமாற்றியதும், தெளபிக்கிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கி மோசடி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, ஜெத்ரோவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போலீசில் பணியாற்றுவதாகக் கூறி வாலிபரிடம் ரூ. 1 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது

தலைப்பு செய்திகள்

3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி
3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி
நடத்தையில் சந்தேகம் ; பாத்ரூமில் கணவனை தள்ளி விட்டு கத்தியால் குத்தி தீர்த்துக் கட்டிய மனைவி
நடத்தையில் சந்தேகம் ; பாத்ரூமில் கணவனை தள்ளி விட்டு கத்தியால் குத்தி தீர்த்துக் கட்டிய மனைவி
பெற்ற தாயை பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட தொழிலாளி - வாக்குமூலத்தால் வெளியான அதிர்ச்சி தகவல்
பெற்ற தாயை பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட தொழிலாளி - வாக்குமூலத்தால் வெளியான அதிர்ச்சி தகவல்
யார் இந்த 'கோல்டு கோகிலா'? மறைமலைநகரையே உலுக்கிய போதை சாம்ராஜ்யம்... போலீசாரின் ஸ்கெட்ச்!
யார் இந்த 'கோல்டு கோகிலா'? மறைமலைநகரையே உலுக்கிய போதை சாம்ராஜ்யம்... போலீசாரின் ஸ்கெட்ச்!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!
AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!
"60 நாள் டைம் முடிஞ்சிருச்சு... நடவடிக்கை எங்கே?" - எம்ஜிஆர் பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி கேள்வி
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Embed widget