மேலும் அறிய

திருவாரூரில் பயிற்சி மருத்துவர் தற்கொலை; மனஅழுத்தம் காரணமா..?- போலீஸ் விசாரணை

காயத்ரி கடந்த ஆறு மாத காலமாக மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் இதன் காரணமாக அவருக்கு துணையாக அவரது அக்கா வந்து விடுதியில் 2 நாட்கள் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த லாரி டிரைவர் வேலுசாமி என்பவரின் மகள் காயத்ரி என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்று கடந்த நான்கு வருடங்களாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றுவிட்டு தற்போது திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருந்து வருகிறார். 
இவர் பயிற்சி மருத்துவர்களுக்கான விடுதியில் 38வது அறை எண் கொண்ட அறையில் தங்கி வந்துள்ளார்.

திருவாரூரில் பயிற்சி மருத்துவர் தற்கொலை; மனஅழுத்தம் காரணமா..?- போலீஸ் விசாரணை

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவர் பணிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து காயத்ரி இரண்டு நாட்களாக பணிக்கு வராதது குறித்து கேட்பதற்காக அதே விடுதியைச் சேர்ந்த அவரது தோழி ஒருவர் காயத்ரிக்கு போன் செய்தார் போனை எடுக்காத காரணத்தினால் கதவைத் தட்டியுள்ளார். கதவும் திறக்கப்படாததால் வாட்ச்மேன் மற்றும் இதர பயிற்சி மருத்துவர்கள் சேர்ந்தது கதவை உடைத்து பார்த்தபோது மின்விசிறியில் நைலான் கயிறு மூலம் காயத்ரி தூக்கில் தொங்கி உள்ளார். 

உடனடியாக அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததுடன் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து திருவாரூர் தாலுகா காவல்துறையினர் காயத்ரி எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.  காயத்ரி கடந்த ஆறு மாத காலமாக மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் இதன் காரணமாக அவருக்கு துணையாக அவரது அக்கா வந்து விடுதியில் 2 நாட்கள் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் திருவாரூர் டிஎஸ்பி சிவராமன் தலைமையில் காவல்துறையினர் விடுதியில் தங்கியிருந்த சகப் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் ஆகியோரிடம் இந்த தற்கொலை தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், தற்கொலை செய்து கொண்ட பயிற்சி மருத்துவரின் உடல்  பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விடுதி அறையில் பெண் பயிற்சி மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் இடையே பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. இப்பொழுது நாமக்கல் மாவட்டம் மோகனூர் கிராமத்திலிருந்து அவர்களுடைய பெற்றோர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகை தந்து உயிரிழந்த தனது மகளின் உடலை பார்த்து கதறி அழும் காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது. மேலும், நீட் தேர்வு முதன்முதலாக தமிழகத்தில் வந்த பொழுது அதிக மதிப்பெண் பெற்று மருத்துவராகி நம் கிராமத்திற்கும் நம் நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என எனது மகள் கூறி இருந்தால் ஆனால் இன்று தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்திருக்கிறார் இதற்கான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி உண்மை தன்மையை வெளிக்கு கொண்டு வர வேண்டும் என பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
Embed widget