மேலும் அறிய

Crime: திருமணம் செய்து வைக்காத தந்தையை வெட்டி கொன்ற மகன்... திருவண்ணாமாலை அருகே அதிர்ச்சி

தானிப்பாடி பகுதியில் திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் தந்தையை சராமரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த குபேரபட்டிணம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சகாதேவன் வயது (59), இவரது மனைவி அன்னக்கிளி வயது (55), இவர்களுக்கு மணிகண்டன் வயது (30), சக்திவேல் வயது (28) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. அதில், கடைசி மகனான சக்திவேலு என்பவருக்கு குபேரபட்டிணம் கிராமத்தை சேர்ந்த பெண்ணுடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரே மாதத்தில் இருவரும் பிரிந்து சென்றனர்.  பின்னர் இவர்கள் இருவருக்கும் விவாகரத்து செய்துள்ளனர். அதனைத்தொடர்ந்து, விவாகரத்து ஆனா பெண்ணுக்கு மற்றொரு நபருடன் திருமணம் நடைபெற்றது.

இதனால் மனவேதனை அடைந்த சக்திவேல், தனக்கு வேறு திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுதொடர்பாக, அவரது தந்தை சகாதேவனுக்கும், சக்திவேலுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோன்று, சக்திவேல் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டு அவரது தந்தை சகாதேவன், தாய் அன்னக்கிளியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சக்திவேல், திடீரென அரிவாளை எடுத்து தந்தை சகாதேவனை சராமாரியாக வெட்டியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் அன்னக்கிளி, அண்ணன் மணிகண்டன் ஆகியோர் தடுக்க முயன்றும் அவர்களால் தடுக்க முடியவில்லை. சக்திவேல் சரமாரியாக வெட்டியதில் படுகாயம் அடைந்த சகாதேவன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். கண்ணெதிரே துடிதுடித்து உயிரிழந்ததை பார்த்த மனைவி அன்னக்கிளி, மகன் மணிகண்டன் கதறி அழுதார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், இந்த சம்பவம் குறித்து தானிப் பாடி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். 

 


Crime: திருமணம் செய்து வைக்காத தந்தையை வெட்டி கொன்ற மகன்... திருவண்ணாமாலை அருகே அதிர்ச்சி

 

தகவல் அறிந்த தானிப்பாடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சகாதேவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், காவல்துறையினர் விசாரணை நடத்தினர். தந்தையை கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று, அங்குள்ள விவசாய நிலத்தில் பதுங்கியிருந்த சக்திவேலை தானிப்பாடி காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சக்திவேலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில், தந்தையை மகன் வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

தலைப்பு செய்திகள்

குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
" ரத்தக் கறை அரிவாளுடன் சரணடைந்த கணவன் " பின்னணியில் திடுக்கிடும் காரணம்
"வாயில் செல்லோ டேப் ஒட்டி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் " 5 மாத கர்ப்பம் - பெயிண்டரின் வெறிச்செயல்
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget