மேலும் அறிய

Crime: டாஸ்மாக் கடை அருகே ரத்த வெள்ளத்தில் தொழிலாளி உயிரிழப்பு - ஆரணியில் அதிர்ச்சி

ஆரணியில் டாஸ்மாக் கடை அருகே ரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் தொழிலாளி உயிரிழப்பு.

திருவண்ணாமலை (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையம் பெரிய சாயக்கார தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது (50). சலவை தொழிலாளியான இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், சுரேஷ்குமார், ஜெயக்குமார் என்ற 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் பிரகாஷ் தினந்தோறும் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வருவார். இதனால் பிரகாஷிற்க்கும் அவருடைய மனைவி சரஸ்வதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் வீட்டை விட்டு வெளியே சென்றனர். தற்போது மனைவி சரஸ்வதி, மகன் ஜெயக்குமார் சென்னையில் வசித்து வருகின்றனர். பிரகாசுடன் மற்றொரு மகன் சுரேஷ்குமார் மட்டும் வசித்து வருகிறார். மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் பிரகாஷ் மதுவுக்கு அடிமையாகி தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். பிரகாஷ் ஆரணி காந்தி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மதுபானம் வாங்க சென்றுள்ளார். ஆனால் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் தந்தையை தேடி மகன் சுரேஷ்குமார் சென்றுள்ளார்.

Crime: டாஸ்மாக் கடை அருகே ரத்த வெள்ளத்தில் தொழிலாளி உயிரிழப்பு - ஆரணியில் அதிர்ச்சி

தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழப்பு

அப்போது டாஸ்மாக் கடை முன் பிரகாஷ் ரத்தக்காயங்களுடன் உயிரிழந்துள்ளார். இதனைக் கண்டு சுரேஷ்குமார் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து ஆரணி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தகவல் அறிந்த ஆரணி நகர காவல்துறையினர் மகேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உடலில் ரத்தக்காயங்கள் இருப்பதால் அவரை யாரும் கொலை செய்தனரா?, போதையில் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சலவை தொழிலாளி சடலமாக கிடந்த டாஸ்மாக் கடை முன்பு மதுபோதையில் தகராறுகள் நடப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றது.

Crime: டாஸ்மாக் கடை அருகே ரத்த வெள்ளத்தில் தொழிலாளி உயிரிழப்பு - ஆரணியில் அதிர்ச்சி

அதனைத்தொடர்ந்து டாஸ்மாக் கடை நகரத்தின் முக்கிய இடத்தில் இருப்பதால் தினமும் மாலை நேரங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களில் அந்த இடத்தில் சாலையை கடந்தபோது 3 பேர் வரை விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். இந்த நிலையில்தான் சலவை தொழிலாளி பிரகாஷ் அங்கு பிணமாக கிடந்தார். இது போன்றவற்றாலும் மதுபிரியர்கள் குடிபோதையில் மோதிக்கொள்வதாலும் அருகில் உள்ள கடைகளில் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. எனவே டாஸ்மாக் கடையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என வலியுறுத்தி ஆரணி காந்தி ரோட்டில் வணிகர் அனைத்து வியாபாரிகளும் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்த ஆரணி நகர காவல்துறையினர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காவல்துறையினரிடம் வியாபாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு 500 டாஸ்மாக் கடைகளை அகற்றி நடவடிக்கை எடுத்தபோது நெருக்கடி மிகுந்த இடத்தில் உள்ள இந்த கடையை அகற்றவில்லை. எனவே உடனடியாக இதை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி மதுபான கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கிறோம் என அவர்களை காவல்துறையினர் சமாதானம் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்?  டாப் 10 செய்திகள்
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்? டாப் 10 செய்திகள்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK MP Meeting : அதானி To வக்பு வாரியம் நெருங்கும் குளிர்கால கூட்டத்தொடர் SCENE-க்கு வந்த ஸ்டாலின்”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்?  டாப் 10 செய்திகள்
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்? டாப் 10 செய்திகள்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
Anna University: அண்ணா பல்கலை. பேராசிரியர்களை குத்தகைக்கு வாங்குவதா? தற்கொலைக்கு சமமான முடிவு; எழும் கண்டனங்கள்!
Anna University: அண்ணா பல்கலை. பேராசிரியர்களை குத்தகைக்கு வாங்குவதா? தற்கொலைக்கு சமமான முடிவு; எழும் கண்டனங்கள்!
அதானியின் ஒப்பந்தங்கள் கேன்சல்..! கென்ய அதிபர் அதிரடி..!
அதானியின் ஒப்பந்தங்கள் கேன்சல்..! கென்ய அதிபர் அதிரடி..!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Embed widget