Crime: காரில் கடத்தப்பட்ட பைனான்சியர்- 24 மணி நேரத்தில் கைது செய்த தனிப்படை போலீசார்
செய்யார் அருகே முன்விரோத தகராறில் பைனான்சியரை காரில் கடத்தி பணம் கேட்டு நாடகமாடிய 6 நபர்களை தனிப்படை காவல்துறையினர் 24 மணிநேரத்தில் துரிதமாக செயல்பட்டு கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் , செய்யாறு அடுத்த வெம்பாக்கம் வட்டம் , நாட்டேரி கிராமம் , பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் வயது ( 43). இவர் உறவினர் வடிவேல், சுரேஷ் ஆகியோருடன் கூட்டாக சேர்ந்து சிறிய அளவில் பைனான்ஸ் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ராமச்சந்திரன் நேற்று முன்தினம் நாட்டேரி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த போது ராணிப்பேட்டை மாமண்டூர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் ஏற்கனவே கொடுக்கல் வாங்கலில் பழக்கமானவர் என்ற வகையில் பேசியுள்ளார். இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே இறங்கி பேசிக் கொண்டிருந்த ராமச்சந்திரன் 5 பேர் முகவரி கேட்பது போல் நடித்து திடீரென ராமச்சந்திரனை அடித்து காருக்குள் இழுத்துப்போடடு காரில் கடத்தி சென்றனர்.
காரில் வந்த நபர்களில் ஒருவர் ராமச்சந்திரன் இருச்சக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டு காரினை பின்தொடர்ந்தது சென்றுள்ளார். காரில் சென்றவர்கள் ராமச்சந்திரன் போனை பிடுங்கி அவரின் சகோதரன் ரவிச்சந்திரனுக்கு போன் செய்து உங்களின் அண்ணனை கடத்தியுள்ளோம் அவரை உயிரோடு விட வேண்டும் என்றால் ரூ.30 லட்சம் தரவேண்டும் பணத்தை எப்போது எங்கே தரவேண்டும் என்று கூறுகிறோம் என கூறி சொல்போனை சுச் ஆப் செய்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன் இதுகுறித்து பிரம்மதேசம் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். ஓச்சேரி பைபாஸ் சாலையில் இருந்து மீண்டும் கடத்தி கொண்டு சென்ற அதே இடத்தில் ராமச்சந்திரனை விட்டுவிட்டு சென்றுள்ளனர். மேலும் அவருடைய இருசக்கர வாகனத்தையும் விட்டு சென்றுள்ளனர். மேலும் ராமச்சந்திரன் வைத்திருந்த 50 லட்சம் ரூபாய் மற்றும் 3 பவுன் தங்க சங்கிலியையும் கடத்தல் கும்பல் பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த செய்யார் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் தூசி காவல்நிலைய ஆய்வாளர் குமார் ஆகியோர் ராமச்சந்திரனிடம் விசாரணை நடத்தினர். அதன் பிறகு தனிப்படை அமைக்கப்பட்டு ராமச்சந்திரனை எங்கு இருந்து எங்கு கடத்தப்பட்டார் என அறிந்து கொள்ள அவர் சென்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று நடந்த சம்பவங்களை நேரடியாக காவல்துறையின விசாரித்தனர் காரில் தப்பிய ஆசாமிகள் ஏன் ராமச்சந்திரனை கடத்தினார்கள் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் ராமச்சந்திரனை விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதில் கடந்த ஓராண்டுகளுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் வயது( 31) என்பவர் பைனான்ஸ் கேட்டதற்கு தர முடியாது என அசிங்கமாக பேசி அனுப்பியுள்ளார். அதனை மனதில் வைத்துக் கொண்டு ராமச்சந்திரனை எப்படியாவது பழி தீர்க்க வேண்டும் என நினைத்து தனது நண்பர்களுடன் மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் வயது (37) திரு கரும்பூர் ராஜேந்திர பிரசாந்த் வயது (27 ), காஞ்சிபுரம் தாலுகா தாமல் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் வயது (24), தமிழரசன் ( 27) ஆகியோர் ஒன்று சேர்ந்து நெமிலி தாலுக்கா பிள்ளையார்பாக்கம் அடுத்த பொய்கைநல்லூர் பகுதியில் சேர்ந்த மோகன்ராஜ் வயத (24) என்பவரது காரில் திட்டமிட்டு கடந்த 24-ஆம் தேதி இரவு கடத்தி சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அப்போது தான் அவர்கள், ராமச்சந்திரன் குடும்பத்தார் பணம்பலம் உள்ளவரா என விசாரிக்கதான் பல லட்சங்கள் கேட்டு குழப்பி உள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரித்து பழி தீர்ப்பதற்காக பல லட்சங்கள் கேட்டு நாடகம் ஆடியது தெரியவந்தது. அதனை தொடர்ந்து தனிப்படி போலீசார் மாமண்டூரில் பதுங்கி இருந்த பிரபாகரன் ரமேஷ் ராஜேந்திரன் பிரசாத் விக்னேஷ் தமிழரசன் உடந்தையாக இருந்த கார் டிரைவர் மோகன்ராஜ் உள்ளிட்ட 6 நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.