மேலும் அறிய

Crime: திருவண்ணாமலையில் டெய்லர் கொலை வழக்கில் 4 பேர் கைது

திருவண்ணாமலை டெய்லர் கொலை வழக்கில் 4 பேர் கைது. மேலும் 3 பேரை காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் நல்லவன் பாளையம் கிராமம் சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் வயது ( 55), இவர் திருவூடல் தெருவில் பைனான்ஸ் மற்றும் டெயிலர் கடை வைத்துள்ளார். ஆறுமுகம் தினந்தோறும் காலையில் திருவூடல் தெருவில் உள்ள கடையை திறந்து இறவு 9 மணக்கு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுவிடுவார். இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி வழக்கம்போல் கடையை காலையில் திறந்து பணியை முடித்துக்கொண்டு இரவு கடையை மூடிவிட்டு ஆறுமுகம் தாமரை நகர் பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது, அவரை பின் தொடரந்து வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் ஆறுமுகத்தை வழிமட்க்கி அறிவாலால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார்.

 
 

Crime: திருவண்ணாமலையில் டெய்லர் கொலை வழக்கில் 4 பேர் கைது
 
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவண்ணாமலை நகர காவல் துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக ஆறுமுகம் மனைவி பிரபாவதி கொடுத்த புகாரின்பேரில், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் எஸ்.குணசேகரன் தலைமையில், ஆய்வாளர் சுப்பரமணி உதவி ஆய்வாளர் சிவசங்கரன், கார்த்தி ஆகிேயார் அடங்கிய தனிப்படை அமைத்து தீவர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக திருவண்ணாமலை அடுத்த வரகூர் கிராமத்தை சேர்ந்த பரந்தாமன் வயது (40). இவருக்கும் ஆறுமுகத்திற்கும் கடந்த 7 வருடங்களாக பணம் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. இதில் பரந்தாமன் ரூபாய் 3 லட்சத்து 50 ஆயிரம் ஆறுமுகத்திடம் கடனாக பணத்தை வாங்கியுள்ளார். அதன் பிறகு கொடுத்த கடனை திரும்ப கேட்டு வீட்டுக்கே சென்று ஆறுமுகம் மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பரந்தாமன் தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து கடந்த 7-ம் தேதி ஆறுமுகத்தை கொலை செய்தது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது.
 
 

Crime: திருவண்ணாமலையில் டெய்லர் கொலை வழக்கில் 4 பேர் கைது
 
 
அதைத்தொடர்ந்து வரகூர் கிராமத்தை சேர்ந்த பரந்தாமன் மற்றும் அவரது கூட்டாளிகளான சாலையனூர் கிராமத்தை சேர்ந்த பாரதி வயது (22), கரையான் செட்டி தெருவை சேர்ந்த தமிழரசன் வயது (20), திருவண்ணாமலை எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த ஸ்ரீகாந்த என்கிற பூனை வயது (20) ஆகிய 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கொலை செய்வதற்காக அவர்கள் பயன்படுத்திய 2 வீச்சருவாள், 2 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து 4 பேரையும் காவல் துறையினர் திருவண்ணாமலை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் கவியரசன் முன்னிலையில் ஆஜர்படுத்தி 4 பேரையும் வேலூர் சிறைக்கு காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். மேலும் இந்த கொலை தொடர்பாக முக்கிய குற்றவாளிகள் 3 பேரை காவல் துறையினர் தொடர்ந்து வலைவீசித்தேடி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget