மேலும் அறிய

போலீஸிடம் எஸ்கேப் ஆகி பொதுமக்களிடம் தர்மஅடி வாங்கிய கள்ள நோட்டு கும்பல்: சேஸ் செய்த போலீசாரிடம் சிக்கியது!

அவர்கள் மூன்று பேரும் காவல் துறையினர் போல் நடித்து கள்ளநோட்டுகளை மாற்றுவது, வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுவது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டது. 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கிளி பகுதி சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் மாலை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டுப்புடவை வியாபாரியான கனகராஜ் என்பவரின் காரை வழிமறித்த கும்பல் ஒன்று தாங்கள் போலீசார் என கூறி நாடகமாடி, கனகராஜிடம் இருந்து பணத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடியது.

பாதிக்கப்பட்ட பட்டுப்புடவை வியாபாரி கனகராஜ், ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில். திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையில் தனிப்படை  அமைக்கப்பட்டு வழிப்பறிக் கொள்ளை நடைபெற்றதாக கூறப்படும் வெங்கிளி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனிப்படை காவலர்கள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படும் சொகுசு கார் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருப்பதாக தனிப்படை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தனிப்படை காவலர்கள் சொகுசு காரை துரத்திச் சென்று பிடிக்க முயன்றபோது காரில் இருந்த நபர்கள் காரை வேகமாக இயக்கி ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் வேகமாகச் சென்றனர். கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள வீட்டின் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.

போலீஸிடம் எஸ்கேப் ஆகி பொதுமக்களிடம் தர்மஅடி வாங்கிய கள்ள நோட்டு கும்பல்: சேஸ் செய்த போலீசாரிடம் சிக்கியது!

காரில் இருந்தவர்கள் தப்ப முயன்ற போது, விபத்தை ஏற்படுத்தியதற்காக அப்பகுதியில் இருந்தவர்கள், அவர்களை தாக்கினர். அதற்குள் அங்கு வந்தடைந்த தனிப்படையினர், உடனடியாக பொது மக்களிடம் இருந்து காரில் வந்தவர்களை மீட்டு சோதனை மேற்கொண்ட போது. காரில் இரண்டு பைகள் இருப்பது தெரியவந்தது. அதில் 25 லட்சம் ரூபாய் பணம் இருப்பது கண்டறியப்பட்டது. 

போலீஸிடம் எஸ்கேப் ஆகி பொதுமக்களிடம் தர்மஅடி வாங்கிய கள்ள நோட்டு கும்பல்: சேஸ் செய்த போலீசாரிடம் சிக்கியது!

இதனை அடுத்து காரில் இருந்த திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த பெருமாள், வேலூர் சலவன்பேட்டை பகுதியை சேர்ந்த சீனிவாசன், சதீஷ் ஆகிய மூன்று பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில்  அவர்கள் மூன்று பேரும் காவல் துறையினர் போல் நடித்து கள்ளநோட்டுகளை மாற்றுவது, வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுவது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டது. 

போலீஸிடம் எஸ்கேப் ஆகி பொதுமக்களிடம் தர்மஅடி வாங்கிய கள்ள நோட்டு கும்பல்: சேஸ் செய்த போலீசாரிடம் சிக்கியது!

மேலும் இவர்களுக்கு துணையாக செயல்பட்டுவந்த சரத், சதிஷ் , தினகரன் ஆகிய  மூன்று பேரையும் அவர்கள் பயன்படுத்திய  காரையும், அவர்களிடமிருந்து 9 செல்போன்கள் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் காவல் துறையினர் துரத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் நேற்று  வழிப்பறி நடைபெற்றதாக புகார்  அளித்த கனகராஜ், குணசேகரன் ஆகியோரிடமும் கள்ள நோட்டுகள் மாற்றியது  தொடர்பாக காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Embed widget