மேலும் அறிய

ஜோலார்பேட்டை சோகம்: மீன் வியாபாரி தம்பதி தற்கொலை - காரணம் என்ன?

நல்ல குடிபோதையில் இருந்த சகாதேவன் மனைவி தூக்கு மாட்டிக் கொண்ட அதே பேனில் புடவையை எடுத்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஜோலார்பேட்டை அருகே வீட்டில் தனியாக இருந்த கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர், கே.ஆர்.எஸ் வட்டம் பகுதியைச் சேர்ந்த சகாதேவன் (50), அவரது மனைவி மேரி (எ) தேவி (45) ஆகிய இருவரும் மீன் கடை வைத்து நடத்தி வந்துள்ளனர். அதே போன்று தே.மு.தி.க கட்சியிலும் தீவிரமாக இருந்த இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ள நிலையில் முதல் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்து உள்ளனர். மகன் மற்றும் மகள் ஆகிய இருவரும் வெளியில் தங்கி படித்து வரும் நிலையில் இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், நேற்று இரவு நேரத்தில் இவர்களுக்கு சொந்தமான ஆடு அருகில் உள்ள ஏரி பகுதியில் கட்டி இருந்துள்ளனர். அதனை கண்ட அவரது உறவினர் ஒருவர் ஆட்டை ஏன் இன்னும் பிடித்து செல்லவில்லை என்று ஆட்டை பிடித்துகொண்டு அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது சகாதேவன் தூக்கில் சடலமாக தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது கணவன் தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார். 

மனைவி மேரி கட்டிலுக்கு அருகில் சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக சீலிங் பேனில் தூக்கில் தூக்கு மாட்டி இறந்துள்ளனர் என்று ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் பெயரில் விரைந்து சென்ற ஜோலார்பேட்டை போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இருவரும் மீன் வியாபாரம் செய்யும் சகாதேவன் அடிக்கடி குடித்துவிட்டு மேரியை சந்தேகப்பட்டதாக கூறப்படுகிறது.  நடத்தை சரியில்லை என்று கணவரின் சந்தேகத்தின் காரணமாக மனைவி மேரி முதலில் ஃபேனில் தூக்கு மாட்டி இறந்துள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த சகாதேவன் அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து மனைவியை தூக்கில் இருந்து மீட்டு கட்டில் அருகில் படுக்க வைத்து விட்டு நல்ல குடிபோதையில் இருந்த சகாதேவன் மனைவி தூக்கு மாட்டிக் கொண்ட அதே பேனில் புடவையை எடுத்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இருப்பினும் முழுமையான இறப்பிற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று தகவல் அளித்துள்ளனர்.

 ஜோலார்பேட்டை அருகே கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் லஞ்சம் வாங்கிய இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர், இடைத்தரகர் கைது
தஞ்சாவூரில் லஞ்சம் வாங்கிய இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர், இடைத்தரகர் கைது
"கொலை வழக்காக மாற்ற சட்டத்தில் இடமில்லை?" - சாத்தங்குடி வழக்கில் திருமாவளவன் உடைத்த உண்மை!
Whats App - ல் தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைத்த கணவன் !! நிஜம் என நம்பி மனைவி தற்கொலை
Whats App - ல் தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைத்த கணவன் !! நிஜம் என நம்பி மனைவி தற்கொலை
ரூ. 2 கோடி கேட்டு மிரட்டல் !! சாலையில் காரோடு கடத்தப்பட்ட தொழிலதிபர் - பின்னணி என்ன ?
ரூ. 2 கோடி கேட்டு மிரட்டல் !! சாலையில் காரோடு கடத்தப்பட்ட தொழிலதிபர் - பின்னணி என்ன ?

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: தவெகவிற்கு NO.! அதிமுகவில் இருந்து எகிறப்போகும் எஸ்.பி. வேலுமணி.? எந்த கட்சியில் இணைய திட்டம்.?
தவெகவிற்கு NO.! அதிமுகவில் இருந்து எகிறப்போகும் எஸ்.பி. வேலுமணி.? எந்த கட்சியில் இணைய திட்டம்.?
Senthil Balaji: திமுக MLA செந்தில் பாலாஜி எங்கே? நட்சத்திர ஓட்டல்களில் நடந்த ரகசிய மீட்டிங் - காவல்துறை தீவிரம்
திமுக MLA செந்தில் பாலாஜி எங்கே? நட்சத்திர ஓட்டல்களில் நடந்த ரகசிய மீட்டிங் - காவல்துறை தீவிரம்
TVK Government : ’துணை முதலமைச்சர் கனவில் இருந்த செந்தில்பாலாஜி’ மண் அள்ளிக் கொட்டிய தவெக..!
’துணை முதலமைச்சராகும் முயற்சி’ திட்டம் தீட்டிய செந்தில்பாலாஜி..!
பார்த்திபனை திட்டியது சுந்தர்ராஜனா? பாண்டியராஜனா? அவரே தந்த விளக்கம்
பார்த்திபனை திட்டியது சுந்தர்ராஜனா? பாண்டியராஜனா? அவரே தந்த விளக்கம்
Anitha Radhakrishnan : ’திமுக அனிதா ராதாகிருஷ்ணன் முன் ஜாமீன் மனு தள்ளுபடி’ விரைவில் கைது ?
Anitha Radhakrishnan : ’திமுக அனிதா ராதாகிருஷ்ணன் முன் ஜாமீன் மனு தள்ளுபடி’ விரைவில் கைது ?
Honda 7 Seater: டாடா., மஹிந்த்ராவின் 7 சீட்டர்களுக்கு போட்டியாக ஹோண்டா..! ஹைப்ரிட்டில் கலக்குமா? விலை?
டாடா., மஹிந்த்ராவின் 7 சீட்டர்களுக்கு போட்டியாக ஹோண்டா..! ஹைப்ரிட்டில் கலக்குமா? விலை?
திரைக்குப் பின்னால் ஒரு பேரரசு: எறும்புப் புற்றின் வியப்பூட்டும் சமூகக் கட்டமைப்பும், வேலைப் பகிர்வும்!
திரைக்குப் பின்னால் ஒரு பேரரசு: எறும்புப் புற்றின் வியப்பூட்டும் சமூகக் கட்டமைப்பும், வேலைப் பகிர்வும்!
Gold Rate Today : சவரனுக்கு ரூ. 4,800 உயர்வு.! 3 நாளில் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
சவரனுக்கு ரூ. 4,800 உயர்வு.! 3 நாளில் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
Embed widget