மேலும் அறிய

Madurai melur: நீதிபதி வரணும்.. இழப்பீடு தரணும்.. மதுரை மேலூரில் அடங்காத பதட்டம்.. தொடரும் பேச்சுவார்த்தை!

நீதிபதி முன்னிலையில் வீடியோ பதிவு செய்து பிரேத பரிசோதனை நடத்தவும், அரசு உரிய இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை மேலூர் அருகே தும்பைபட்டி சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட கிராமத்தில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் மேலூர் வட்டாட்சியர் இளமுருகன் உள்ளிட்டோர் சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் 3 மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

நீதிபதி முன்னிலையில் வீடியோ பதிவு செய்து பிரேத பரிசோதனை நடத்தவும், அரசு உரிய இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சிறுமி கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில்,  அச்சிறுமி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தநிலையில் மதுரையிலிருந்து திருச்சி சென்ற அரசு பேருந்து கண்ணாடியை மர்மநபர்கள் கல்வீசி தாக்கி உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்து பயணி ஒருவர் படுகாயம் அடைந்தார். அரசு பேருந்தை தாக்கிய இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி தலைமையில் தும்பைபட்டி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Madurai melur: நீதிபதி வரணும்.. இழப்பீடு தரணும்.. மதுரை மேலூரில் அடங்காத பதட்டம்.. தொடரும் பேச்சுவார்த்தை!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே 17 வயதுடைய இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த நாகூர் ஹனிபா என்ற இளைஞனுடன் மாயமனாதாக கூறப்பட்ட நிலையில் அவர் மாயமானதாகவும், கடத்தி செல்லப்பட்டதாக கூறி பெண்ணின் பெற்றோர் மேலூர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். இந்தநிலையில் அப்பெண் வீடு திரும்பிய நிலையில் அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமடையவே, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், சிறும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து தலைமறைவாக உள்ள நாகூர் ஹனிபாவை தேடி வந்தநிலையில். மேலும் 4 தனிப்படைகள் அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் உறவினர் கூறுகையில்," மயக்கமான நிலையில் சிறுமியை மூன்று நபர்கள் ஆட்டோவில் அழைத்து வந்தனர். தூக்கத்தில் இருக்கும் என நினைத்தோம். பின்னர் மேலூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மருத்துவர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அவர்கள் சிறுமியின் உடல் மோசமாக உள்ளது என தெரிவித்தனர். இதனால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எங்கள் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம். எங்களுடைய பெண்ணுக்கு நீதி வேண்டும்" என்றனர்.

தொடர்ந்து, மதுரை காவல்துறை எஸ்.பி பாஸ்கரனிடம் பேசினோம். அப்போது அவர்கள், " கடந்த மாதம் 14ஆம் தேதி காதலர் தினத்தன்று இளம் பெண்ணும் - நாகூர் கனி (29) என்ற நபரும் வீட்டை விட்டு சென்றுள்ளனர். மதுரையில் இருவரும்  வீடு எடுத்து தங்கியுள்ளனர். பின் அங்கிருந்து ஈரோட்டிற்கு சென்று வாழமுடிவு செய்து அங்கே தங்கியுள்ளனர். இளம்பெண்ணின் உறவினர்கள் தேடியதாலும், இளம்பெண் மேஜர் இல்லை என்பதாலும் திரும்பி வந்துவிடக் கூறி நாகூர் ஹனிபாவின் உறவினர் வீட்டில் தெரிவித்துள்ளனர்.

இதனால் பதட்டத்தில் இருவரும் எலி பேஸ்ட் சாப்பிட்டுள்ளனர். அப்போது நாகூர் ஹனிபா எலிபேஸ்ட் சாப்பிடும் போது அந்த இளம்பெண் தட்டிவிட்டுள்ளார். ஆனால் சிறுமி முழுமையாக எலிபேஸ்ட்டை துப்பவில்லை. இதனால் திருப்பூர் மருத்துவமனையில் இளம்பெண் சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார். உடல்நிலை தேரியதாக நினைத்து இளம் பெண்ணை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் இளம்பெண்ணுக்கு உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்
திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்
" நான் ஒருத்தர கொலை பண்ணிட்டேன் " நள்ளிரவில் காவல் நிலையத்தில் சரணடைந்த நபர்
நீதிமன்றத்தில் ரத்தக் களறி! 15 நாள் சிறை தண்டனையால் ஆத்திரம் - நீதிபதி முன் கையை அறுத்துக் கொண்ட கைதி!
நீதிமன்றத்தில் ரத்தக் களறி! 15 நாள் சிறை தண்டனையால் ஆத்திரம் - நீதிபதி முன் கையை அறுத்துக் கொண்ட கைதி!
தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல் !
தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல் !

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
Samsung Silicon-Carbon Battery: சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
iPhone 17 Price Hike: மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
Embed widget