மேலும் அறிய

காணாமல் போன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு - தூள்கிளப்பும் தூத்துக்குடி சைபர் க்ரைம்

செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடுவது முற்றிலும் தவிர்க்க வேண்டும், அதற்கு அடிமையாகி பணத்தை இழந்து தங்கள் வாழ்க்கையை தொலைத்து தற்கொலை செய்வது வரை நிகழ்ந்துள்ளது. .

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக புகார்களின் பேரில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 11,50,000/- மதிப்புள்ள 95 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. செல்போன்களை மீட்ட தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.


காணாமல் போன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு - தூள்கிளப்பும் தூத்துக்குடி சைபர் க்ரைம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து விரைந்து நடவடிக்கை எடுத்து செல்போன்களை மீட்க உத்தரவிட்டார். அதன்படி சைபர் குற்றப்பிரிவு தனிப்படையினர் செல்போன்கள் எங்கெங்கு உள்ளன என்பதை அதன் ஐ.எம்.இ.ஐ (IMEI) எண்ணை வைத்து கண்டு பிடித்து, சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தெரிவித்து அவற்றை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளர்களிடம் ஏற்கனவே மொத்தம் 680 செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


காணாமல் போன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு - தூள்கிளப்பும் தூத்துக்குடி சைபர் க்ரைம்
  
தற்போது சைபர் கிரைம் குற்ற பிரிவு தனிப்டையினர் இதனை கண்காணித்து துரிதமாக செயல்பட்டு ரூபாய் 11,50,000/- மதிப்புள்ள 95 செல்போன்களை கண்டு பிடித்து, அவற்றை பறிமுதல் செய்து மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஒப்படைத்தார்.


காணாமல் போன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு - தூள்கிளப்பும் தூத்துக்குடி சைபர் க்ரைம்

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், “செல்போன்களை பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக கையாளவேண்டும், பள்ளி குழந்தைகளுக்கு செல்போனில் ஆன்லைன் வகுப்பு பயிலும் போது அவற்றை கட்டுப்பாடுடன் கையாள்வதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும், மேலும் குழந்தைகள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனுக்கு போன் லாக் தேவையில்லை, குழந்தைகளுக்கு பெற்றோருக்கு தெரியாமல் இரகசியங்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை, அது பெற்றோர்கள் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும், செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடுவது முற்றிலும் தவிர்க்க வேண்டும், அதற்கு அடிமையாகி பணத்தை இழந்து தங்கள் வாழ்க்கையை தொலைத்து தற்போது தற்கொலை செய்வது வரை நிகழ்ந்துள்ளது. ஆகவே ஆன்லைன் ரம்மி விளையாடாமல் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.

சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும், முகம் தெரியாத நபர்களிடம் பழகி பின்னர் குற்ற நிழ்வுகள் நடக்க வழிவகை செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி தங்கள் செல்போனுக்கு வரும் OTPயை கொடுக்க வேண்டாம், வங்கி ஒருபோதும் உங்கள் OTPயை கேட்காது. உங்களுக்கு வரும் OTPயை யாரிடமும் பகிராதீர்கள், அதன் மூலம் உங்கள் பணம் ஏமாற்றப்பட்டு மோசடி நடைபெறும், சமூக வலைதளங்களில் வரும் வேலை வாய்ப்பு சம்மந்தமான செய்திகளை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். மேலும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை இதுபோன்ற விழிப்புணர்வு குறும்படங்கள் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. மேலும்  ‘மாற்றத்தை தேடி” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் காவல்துறையினர் பொதுமக்களிடையே நேரடியாக சென்று கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருள் தடுப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, ஆன்லைன் மோசடி போன்ற பல்வேறு விழிப்புணர்வு செய்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு இதுபோன்ற குற்ற நிகழ்வுகளில் இருந்து தற்காத்து கொண்டு தங்கள் பணத்தை பாதுகாத்து, பாதுகாப்பை மேம்படுத்திக் கொள்ளுமாறு” எனக் கூறினார்.

மேலும், இதுவரை ரூபாய் 79,50,000/- மதிப்புள்ள 775 காணாமல் போன் செல்போன்களை தொழில்நுட்ப ரீதியாக கண்டுபிடித்த சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய போலீசாரை பாராட்டினார். நிகழ்வின்போது தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சைபர் குற்றப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர்கள் சுதாகர், அச்சுதன் உட்பட சைபர் குற்றப் பிரிவு காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.

தலைப்பு செய்திகள்

திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
AI Powered E3 Trion E-Scooter: நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
Embed widget